World's First Bike To Run On CNG Gas : CNG எரிவாயுவில் ஓடும் உலகின் முதல் பைக்

முதல் முறையாக சாலைகளில் CNG-யில் இயங்கும் 4 மற்றும் 3 சக்கர வாகனங்களை தொடர்ந்து CNG-யில் இயங்கும் 2 சக்கர வாகனங்களும் (World’s First Bike To Run On CNG Gas) ஓட உள்ளன. உலகில் பெட்ரோல், டீசல் மற்றும் மின்சாரத்தில் வாகனங்கள் பரவலாக இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது 4 மற்றும் 3 சக்கர வாகனங்கள் CNG (COMPRESSED NATURAL GAS) எரிவாயுவில் இயக்கப்பட்டு வருகின்ற நிலையில் பஜாஜ் நிறுவனம் ஆனது CNG (COMPRESSED NATURAL GAS) எரிவாயுவில் இயங்கும், ஓடும் 2 சக்கர வாகனங்களை அறிமுகப்படுத்தி உள்ளது.

பஜாஜ் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ள இந்த CNG, 125 CC திறன் கொண்ட பைக் ஆனது பெட்ரோல் மற்றும் CNG என இரண்டிலும் இயங்கும் வகையில் இருக்கும். CNG (COMPRESSED NATURAL GAS) எரிவாயுவின் விலையும் மற்றும் CNG வாகனங்களின் பராமரிப்பு செலவும் குறைவு என்பதால் பெட்ரோல், டீசலை வாகனங்களை விட CNG வாகனங்களின் விற்பனை அதிகரித்துள்ளது. CNG வாகனங்களின் விலை ஆனது மத்திய அரசின் இயற்கை எரிவாயு விலை நிர்ணயக் கொள்கையால் குறையத் தொடங்கியுள்ளதும் ஒரு முக்கிய காரணமாகும். மேலும் CNG எரிவாயு ஆனது எளிதில் கிடைக்கத் தொடங்கியுள்ளது.

World's First Bike To Run On CNG Gas - CNG வாகனங்களின் விற்பனை விவரங்கள் :

  • 3,05,902 CNG கார்கள் 2022-23 நிதியாண்டில் விற்கப்பட்டன. 2023-24 ஆம் நிதியாண்டின் முதல் 11 மாதங்களில் CNG கார்கள் விற்பனை 4,02,433 ஆக உயர்ந்துள்ளது.
  • 2,17,389 மூன்று சக்கர CNG வாகனங்கள் 2022-23 ஆம் நிதியாண்டில் விற்கப்பட்டன. 2023-24 ஆம் நிதியாண்டின் முதல் 11 மாதங்களில் மூன்று சக்கர CNG வாகனங்கள் விற்பனை 3,26,802 ஆக உயர்ந்துள்ளது.
  • CNG பேருந்துகள் மற்றும் CNG வேன்கள் 2022-23 ஆம் நிதியாண்டின் 69,012 இல் இருந்து 2023-24 ஆம் நிதியாண்டில் 1,34,132 ஆக உயர்ந்துள்ளது.

World’s First Bike To Run On CNG Gas : அனைத்து வாகன பிரிவுகளையும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 2022-23 ஆம் நிதியாண்டில் 6,79,822 சிஎன்ஜி வாகனங்கள் விற்றிருந்த நிலையில், தற்போது 2023- 24 நிதியாண்டில் முதல் 11 மாதங்களில் மட்டும் CNG வாகனங்கள் விற்பனை 9,39,615 ஆக உயர்ந்துள்ளது. CNG வாகனங்களின் விற்பனை ஆனது ஒரே ஆண்டில் 38% அதிகரித்துள்ளது. பிற நிறுவனங்களும் பஜாஜ் நிறுவனத்தை பின்பற்றி CNG பைக் தயாரிப்பில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. 2027ஆம் ஆண்டில் இந்தியர்கள் அதிகம் விரும்பும் வாகன எரிபொருள் பட்டியலில் CNG ஆனது 2 ஆம் இடத்திற்கு முன்னேறும் என இக்ரா நிறுவனம் கணித்துள்ளது. இந்திய போக்குவரத்துத்துறையில் CNG வாகனங்கள் ஒரு பெரிய மாற்றத்தை கொண்டு வரும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

Latest Slideshows

Leave a Reply