World's First Fastest Bullet Train : உலகின் முதல் அதிவேக புல்லட் ரயிலை சீனா அறிமுகம் செய்துள்ளது

ஒரு மணி நேரத்திற்கு சுமார் 450 KM வேகத்தில் பயணிக்கும் உலகின் முதல் அதிவேக புல்லட் ரயிலை சீனா (World’s First Fastest Bullet Train) தற்போது அறிமுகம் செய்துள்ளது. மேலும் இந்த ரயில் மேம்பட்ட வேகம், பிரேக் செயல்பாடு, எரிசக்தி பயன்பாடு, உள் இரைச்சல் குறைப்பு போன்றவற்றில் புதிய தரத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த 10 வருடங்களாக புல்லட் ரயில் தொழில்நுட்பத்தில் முன்னணி நாடாக ஜப்பான் இருந்தது. இந்நிலையில் புல்லட் ரயில் உற்பத்தியில் ஜப்பானை பின்னுக்கு தள்ளி சீனா சாதனை படைத்துள்ளது.

அதிவேக புல்லட் ரயில் CR450 (World's First Fastest Bullet Train)

ஏற்கனவே சீனா உருவாக்கியுள்ள CR400 புல்லட் ரயில் தைவான் ஜலசந்தியின் மேற்கு கடற்கரையில் உள்ள புஜியன் நகரில் இருந்து தலைநகர் ஃபுஜோ மற்றும் 5 முக்கிய நகரங்களை இணைக்கிறது. மேலும் இந்த CR400 புல்லட் ரயில் ஃபுஜோ-ஜியாமென் இடையே இருக்கும் 277 கி.மீ தொலைவை மணிக்கு 350 கி.மீ வேகத்தில் பயணித்து வெறும் 55 நிமிடங்களில் கடக்கிறது. இந்நிலையில் சீனா மற்றொரு மிகப்பெரிய சோதனை ஓட்டத்திற்கு தயாராகியுள்ளது. CR450 என பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த புல்லட் ரயில் (World’s First Fastest Bullet Train) சோதனை ஓட்டத்தில் மணிக்கு 450 கிலோமீட்டர் வேகம் வரை இயக்கப்பட்டிருக்கிறது. அந்தவகையில் இந்த CR450 புல்லட் ரயில் உலகின் அதிவேக புல்லட் ரயில் என்ற சிறப்பை பெற்றுள்ளது. மேலும் சீனா அரசாங்கம் நவீன தொழில்நுட்பங்களுடன் இந்த சிஆர் 450 ரயில் தயாரிக்கப்பட்டுள்ளதால் மக்களின் பயண நேரம் வெகுவாக குறையும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது.

சீனா ரயில்வே அறிக்கை

சோதனை ஓட்டத்தின்போது இந்த CR450 புல்லட் ரயில் மணிக்கு 450 கி.மீ வேகத்தில் பயணித்து புதிய வரலாற்று சாதனையை (World’s First Fastest Bullet Train) எட்டியிருக்கிறது எனவும், எரிசக்தி பயன்பாடு, வேகம், உள் இரைச்சல் குறைப்பு மற்றும் பிரேக் செயல்பாடு ஆகியவற்றில் உலக அளவில் புதிய தரநிலைகளை நிர்ணயித்திருக்கிறது எனவும், தற்போது செயல்பாட்டில் உள்ள CR400 புல்லட் ரயிலை விட இந்த CR450 புல்லட் ரயில் வேகம் அதிகமாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளது. மேலும் இந்த சிஆர் 450 புல்லட் ரயிலை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவருவதற்கு பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன எனவும் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

உலக நாடுகள் ஆர்வம்

சீனா ரயில்வே இந்தோனேசியா, செர்பியா, தாய்லாந்து போன்ற நாடுகளுக்கு அதிவேக புல்லட் ரயில்களை (World’s First Fastest Bullet Train) ஏற்றுமதி செய்து வருகிறது. இப்படி சீனா அதிவேக புல்லட் ரயில்களை உருவாக்க எடுத்துவரும் அடுத்தடுத்த முயற்சிகளை பார்க்கும் மற்ற உலக நாடுகள் புல்லட் ரயிலை தங்களின் நாட்டில் பயன்பாட்டிற்கு கொண்டு வர ஆர்வம் காட்ட துவங்கியுள்ளது.

Latest Slideshows

Leave a Reply