World's First Printed Artificial Brain : செயற்கை மூளையை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்

World's First Printed Artificial Brain :

இன்றைய உலகில் தொழில்நுட்பம் எண்ணிப்பார்க்க முடியாத பல சாதனைகளை செய்து வருகிறது. அந்த வகையில் நரம்பியல் துறை ஆராய்ச்சியாளர்கள் மனித மூளையை 3D ப்ரிண்டிங் (3D Printing) தொழில்நுட்பம் (World’s First Printed Artificial Brain) மூலம் உருவாக்கியுள்ளனர். அவர்களது இந்த புதிய கண்டுபிடிப்பு நரம்பியல் துறையில் ஒரு மைல்கல்லாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

3D ப்ரிண்டிங் என்பது பொருட்களை முப்பரிமாணத்தில் உருவாக்கப் பயன்படும் ஒரு தொழில்நுட்பமாகும். மிக சிக்கலான வடிவங்களை உருவாக்க பிரத்தியேகமாக பயன்படுத்தப்படும் இந்த தொழில்நுட்பம் கால் பதிக்காத துறை மிக மிக குறைவு என்றே கூறலாம். இன்றைய உலகத்தில் மருத்துவத்துறையில் பயன்படுத்தும் இம்ப்லான்ட்கள் (Implants) பல இந்த தொழில்நுட்பம் மூலம் தான் உருவாக்கப்படுகின்றன. அதன் அடுத்த கட்டமாக மனித மூளையை 3D பிரிண்டிங் மூலம் (World’s First Printed Artificial Brain) உருவாக்கியுள்ளனர்.

அமெரிக்காவின் முக்கியமான பல்கலைக்கழகங்களில் ஒன்றான விஸ்கான்சின் மாடிசன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த நரம்பியல் துறை பேராசிரியர் சூ-சுன் ஜாங் மற்றும் அவரது குழுவினர் தான் இந்த சாதனையை படைத்துள்ளனர். 3D ப்ரிண்டிங் மூலம் உருவாக்கப்பட்டுள்ள இந்த செயற்கை மூளையானது மனித மூளையை போலவே வளர்ச்சியடைந்து அதன் செயல்பாடுகளோடு இயங்கும் (World’s First Printed Artificial Brain) என்று அதனை உருவாக்கியவர்கள் கூறுகின்றனர்.

இந்த புதிய கண்டுபிடிப்பானது நரம்பியல் வளர்ச்சியில் கோளாறு இருப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 3D ப்ரிண்டிங் தொழில்நுட்பம் கொண்டு ஹாரிசான்டல் லேயரிங் (Horizontal Layering) மற்றும் சாஃப்டர் பயோ இங்க் (Softer Bio-ink) மூலம் இந்த செயற்கை மூளை அமைப்பு  உருவாக்கப்பட்டுள்ளது. பொதுவாக 3D ப்ரிண்டிங் வெர்டிகள் லேயரிங் (Vertical Layering) மூலம் செயல்படும்போது சூ-சுன் ஜாங் மற்றும் அவரது குழுவினர்கள் ஹரிசான்டல் லேயரிங்கை பயன்படுத்தியுள்ளனர்.

இதன் மூலம் மனித மூளையின் தோற்றத்தை போலவே மிக துள்ளியமாக இருக்கும் செயற்கை மூளையை உருவாக்க முடியும் என்பதால் இந்த ‘ஹரிசான்டல் லேயரிங்கை’ அவர்கள் பயன்படுத்தியுள்ளனர். தனது இந்த கண்டுபிடிப்பைப் பற்றி நரம்பியல் பேராசிரியர் ஜாங் கூறுகையில் “இந்த செயற்கை மூளை உருவாக்கத்தின் மூலம் மூளை செல்களைப் பற்றியும் மூளையின் பாகங்கள் ஒன்றோடு ஒன்று (World’s First Printed Artificial Brain) எப்படி தொடர்பு செய்துகொள்கின்றன என்பது பற்றியும் ஆராய்ச்சி செய்து பார்க்க முடியும்” என்று அவர் தெரிவித்துள்ளார். இதுபற்றி மேலும் மற்றொரு நரம்பியல் ஆராய்ச்சியாளர் யுவான்வேய் யான் “இந்த செயற்கை மூளையானது மிகவும் மெல்லிய திசுக்கள் மூலம் உருவாக்கப்பட்டுள்ளதால் நியூரான்கள் வளர்ச்சியடைவதற்கு தேவையான சத்துக்கள் மற்றும் ஆக்சிஜன்  சீராக கிடைக்கும்” என்று கூறியுள்ளார். 

செயற்கை மூளையின் பாகங்கள் (World’s First Printed Artificial Brain) ஒவ்வொரு பாகமும் தனித்தனியாக உருவாக்கப்பட்டிருந்தாலும் ஒன்றோடு ஒன்று சிறப்பாக தொடர்பை ஏற்படுத்திக்கொள்கிறது என்று ஜாங் கூறியுள்ளார். 3D ப்ரிண்டிங் மூலம் உருவாக்கப்பட்ட இந்த செயற்கை மூளையானது (World’s First Printed Artificial Brain) மனித மூளையைப் போலவே நியூரோட்ரான்ஸ்மிட்டர்கள் (Neurotransmitters) மற்றும் மிர்ரரிங் இன்டராக்‌ஷன் (Mirroring Interactions) ஆகியவற்றினால் தகவலை பகிர்ந்துக் கொள்கின்றது என்று இந்த ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  மேலும் இந்த செயற்கை மூளை கொண்டு மூளையில் தகவல் பரிமாற்றத்தைப் பற்றி தெரிந்துகொள்ள முடியும்.

இதன் மூலம் டவுன் சின்ட்ரோம் (Down Syndrome) குறைபாடு உள்ளவர்களது மூளையின் தகவல் பரிமாற்றம் மற்றும் அல்சைமர்ஸ் பாதிப்பு இருப்பவர்களது ஆரோக்கியமான செல்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மூளை செல்களுக்கு இடையில் ஏற்படும் தகவல் பரிமாற்றம் மற்றும் மூளையின் வளர்ச்சி என்று நரம்பியலின் பல்வேறு முக்கிய கூறுகளைப்பற்றி தெரிந்துகொண்டு பயனடையலாம். மூளையுடன் தொடர்பான நோய்களான அல்சைமர்ஸ் மற்றும் பார்கின்சன்ஸ் பாதிப்படைந்தவர்களுக்கு இந்த கண்டுபிடிப்பு ஒரு வரமாக இருக்கும் என்று அதனை உருவாக்கிய ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். இந்த 3D ப்ரிண்டிங் செய்வதற்கு பிரத்தியேகமாக  சிறப்பு கருவிகள் எதுவும் தேவைப்படாது என்பதால் மூளையை பற்றி ஆராய்ச்சி செய்யும் நிறுவனங்கள் சுலபமாக மூளையின் மாதிரிகளை செய்து கொள்ள முடியும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Latest Slideshows

Leave a Reply