World's Largest Water Theme Park : சவுதி அரேபியாவில் உலகின் மிகப்பெரிய வாட்டர் தீம் பார்க்

குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை அனைவரும் விரும்பும் விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு தளமாக தீம் பார்க்குகள் இருக்கின்றன. தற்போதைய  உலகில் விதவிதமான தீம் பார்க்குகள் வந்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில், உலகின் மிகப்பெரிய வாட்டர் தீம் பார்க் ஆனது சவுதி அரேபியாவில் விரைவில் வருகிறது. அந்த வகையில் சவுதி அரேபியாவில் 2.5 லட்சம் சதுர அடி பரப்பளவில் உலகின் மிகப்பெரிய வாட்டர் தீம் பார்க் (World’s Largest Water Theme Park) ஆனது வருகிறது.  உலகின் மிக உயரமான வாட்டர் கோஸ்டர் மற்றும் வாட்டர் ஸ்லைடு உட்பட 22-க்கும் மேற்பட்ட சாகச ரைடுகள் மற்றும் பல பொழுதுபோக்கு சாகச ரைடுகளை கொண்டதாக அமைக்கப்பட்டு வருகிறது (கயாக்கிங், ராஃப்டிங், கேனியோனிரிங், தனியாக ஏறுதல் மற்றும் பாறை தாண்டுதல் போன்ற உற்சாகமான விளையாட்டுகளுக்கான வசதிகளைக் கொண்டிருக்கும்).

சவுதி அரேபியாவில் புதிதாக கட்டப்பட்டுள்ள கெதியா காஸ்மோபாலிட்டன் நகருக்கு அருகில் இந்த மிகப்பெரிய வாட்டர் தீம் பார்க் ஆனது கட்டப்பட்டு வருகிறது. இந்த மிகப்பெரிய வாட்டர் தீம் பார்க் ஆனது அக்வெரேபியா வாட்டர் தீம் பார்க் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த அக்வேரேபியா சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் இருந்து 25 மைல் தொலைவில் உள்ள துவாய்க் மலைகளில் அமைந்துள்ளது. இது அதிநவீன கெதியா நகர வளாகத்தின் ஒரு பகுதியாகும்.  மேலும் இந்த புதிய பொழுதுபோக்கு பூங்கா ஆனது கிடியா நகரின் ஒரு பகுதியாக, அக்வேரேபியாவுடன் இணைந்து அமைக்கப்பட்டு வருகிறது. சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் நாட்டின் பொருளாதாரத்தை எண்ணெய் அல்லாத துறைகளில் விரிவுபடுத்தும் நோக்கத்துடன் இந்த புதிய அக்வெரேபியா வாட்டர் தீம் பார்க் பொழுதுபோக்கு வளாகத்தை வடிவமைத்து செயல்படுத்தி உள்ளார். இது சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் செயல்படுத்திய சவுதி அரேபியா விஷன் 2030 திட்டத்தின் ஒரு பகுதி ஆகும்.

சவுதியின் அக்வெரேபியா வாட்டர் தீம் பார்க்கின் கட்டுமானம் (World's Largest Water Theme Park)

பூங்காவின் கட்டுமானத் திட்டத்திற்கு சுமார் $9.8 பில்லியன் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. நாட்டின் இறையாண்மை நிதிமூலம் இந்த பூங்கா செயல்படுத்தபடுகிறது. 2019ல் தொடங்கிய சவுதியின் இந்த நீர் பூங்காவின் கட்டுமானம் 2023 க்குள் முதல் கட்டத்தை திறக்க திட்டமிடப்பட்டது. ஆனால் கோவிட் காரணமாக 2023ல் பணியை முடிக்க முடியவில்லை. தற்போது இந்த Aquarebia மற்றும் Six Flags Amusement Park ஆனது 2025 ல் நிறைவடையும் எனக் கூறப்பட்டு இருக்கிறது.

இந்த Aquarebia மற்றும் Six Flags Amusement Park ஆனது தலைநகர் ரியாத் மற்றும் சவுதி அரேபியாவில் உள்ள அனைத்து முக்கிய சர்வதேச விமான நிலையங்களிலிருந்தும் சுமார் 40 நிமிட பயணத்தில் உள்ளது. இந்த அக்வேரேபியா தீம் பார்க் சவுதி அரேபியாவின் முதல் நீர் தீம் பூங்காவாகவும் மற்றும் உலகின் மிகப்பெரிய பூங்காவாகவும் விளங்கும்.

Latest Slideshows

Leave a Reply