World's Oldest Dinosaur : இந்தியாவில் கண்டறியப்பட்ட உலகின் மிகவும் பழமையான டைனோசர்...

World's Oldest Dinosaur :

இந்த வகையான டைனோசர்கள் இதுவரை தென் அமெரிக்கா, வட அமெரிக்கா, ஆப்பிரிக்கா போன்ற கண்டங்களில் தான் கண்டறியப்பட்டன. ஆனால் தற்போது இது ஆசிய கண்டத்தில் உள்ள நம் இந்திய நாட்டில் கண்டறியப்பட்டது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. டைனோசர் வகையான மிருகங்கள் கண்டறியப்பட்டது இதுவே முதல் முறையாகும். உலகின் மிகவும் பழமையான டைனோசர் வகை நம்முடைய ராஜஸ்தான் மாநிலத்தில் கண்டறியப்பட்டுள்ளது என்பது மிகவும் ஆச்சரியமான ஒன்றாகும்.

167 மில்லியன் ஆண்டுகள் :

கடந்த 2018 ஆம் ஆண்டில் இந்திய புவியியல் மையம் புதைப்படிவ ஆராய்ச்சியை தொடங்கியது. இந்தத் திட்டத்தின்படி ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்சால்மர் என்னும் வறட்சி பகுதியை ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டது. இந்த நிலையில் அந்தப் பகுதியில் உள்ள ஜுராசிக் பாறைகளை ஆய்வு செய்ய தொடங்கினர். அப்போதுதான் இந்த டைனோசரின் புதை படிவம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை கண்டவுடன் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் இந்த ஆராய்ச்சியாளர்கள் இணைந்து இதனை பற்றி ஆராய்ந்துள்ளனர். இந்த புதைப்படிவத்தில் கண்டறியப்பட்ட டைனோசரின் கழுத்து மிக நீளமாகவும், இது தாவர வகையை உண்ணும் வினோத டைனோசர் வகையை சார்ந்தது என்றும் கண்டறியப்பட்டது.

தற்போது கண்டறியப்பட்டுள்ள டைனோசருக்கு “தாரோசரஸ் இண்டிகஸ்” என்று பெயரிடப்பட்டுள்ளது. இதன் முதல் பெயர் அது கண்டறியப்பட்ட இடத்தினையும் இரண்டாவது பெயர் நம்முடைய நாட்டின் பெயரையும் குறிக்கின்றது. நம் நாட்டில் கண்டறியப்பட்டுள்ள முதல் டைனோசரஸ் படிவம் இதுவே ஆகும். இது மட்டும் அல்லாமல் இந்த படிவத்தின் மூலம் இது 167 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரே வாழ்ந்துள்ள உண்மையான டைனோசர் வகை என்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதன்படி பார்த்தால் உலகிலேயே மிகவும் பழமையான டைனோசர் வகை இதுதான்.

World’s Oldest Dinosaur : இதற்கு முன்னதாக சீனாவில் கண்டறியப்பட்ட டைனோசர் வகை தான் மிகப் பழமையான டைனோசராக இருந்தது. அது 166 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தது என கண்டறியப்பட்டது. ஆனால் தற்போது இந்தியாவில் கண்டறியப்பட்ட புதைப்படிவம் மூலம் இது மிகவும் பழமையானதாக மாறி உள்ளது. இதனால் இன்னும் பல்வேறு புதிய கண்டுபிடிப்புகள் நிகழலாம் என ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளார்கள்.

Latest Slideshows

Leave a Reply