WTC Final 2025 : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது South Africa

தென்னாப்பிரிக்கா அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி, 27 ஆண்டுகளுக்கு பிறகு ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை (WTC Final 2025) கைப்பற்றி சாதனை படைத்திருக்கிறது. இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி செலுத்தி வந்த ஆதிக்கம் முடிவுக்கு வந்துள்ளது.

தென்னாப்பிரிக்கா அணிக்கு 21 வருடங்கள் தடை

தென்னாப்பிரிக்காவில் நிலவி வந்த நிறவெறிக் கொள்கையால் கடந்த 1970-ம் ஆண்டு முதல் 1991-ம் ஆண்டு வரை தென்னாப்பிரிக்கா அணிக்கு சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாட 21 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. இந்த 21 வருடங்கள் தடைக்கு பிறகு மீண்டும் 1991-ல் மறுமலர்ச்சி கண்ட தென்னாப்பிரிக்கா அணி, 1998-ம் வருடம் ஐசிசி நடத்திய ‘நாக்அவுட்’ தொடரில் முதல்முறையாக கோப்பை கைப்பற்றியது. இதுவே அவ்வணி வென்ற முதல் மற்றும் கடைசி ஐசிசி கோப்பையாக இருந்து வந்த நிலையில், தற்போது இதற்கு ஒரு முடிவு கட்டப்பட்டு இருக்கிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி (WTC Final 2025)

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியானது லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று சனிக்கிழமை (14.06.2025) நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் டெம்பா பவுமா முதலில் ஆஸ்திரேலியா (WTC Final 2025) அணியை பேட்டிங் செய்யுமாறு அழைத்தார். இதனை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி, ரபடாவின் அபாரமான பந்துவீச்சை எதிர்கொள்ளமுடியாமல் முதல் இன்னிங்ஸில் 212 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனை அடுத்து முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா வீரர்கள் ஆஸ்திரேலிய வீரர் பாட் கம்மின்ஸ்ன் பந்துவீச்சை சமாளிக்கமுடியாமல் அடுத்தடுத்து விக்கெட் விழுந்த நிலையில் வெறும் 138 ரன்களில் ஆட்டமிழந்தது தென்னாப்பிரிக்கா அணி.

ஆஸ்திரேலியா 74 ரன்கள் முன்னிலை

WTC Final 2025 - Platform Tamil

இந்நிலையில் முதல் இன்னிங்ஸில் 74 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலியா அணி 2வது இன்னிங்ஸை தொடங்கியது. அப்போது ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்ஸில் 73 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், அந்த அணியின் ஸ்டார்க் போராடி அரைசதம் அடித்தததால் ஆஸ்திரேலியா 207 ரன்களில் இரண்டாவது இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

282 ரன்கள் இலக்கு

288 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற பெரிய இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணியின் தொடக்க வீரர் ரியான் ரிக்கல்டன் வெறும் 6 ரன்களில் வெளியேறி அதிர்ச்சியளித்தார். இந்நிலையில் மூன்றாவது வரிசையில் களமிறங்கிய ஏய்டன் மார்க்கரம் சதம் அடித்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்ற அவர் (WTC Final 2025) அணியின் வெற்றிக்கு வெறும் 6 ரன்கள் மட்டுமே தேவை என்றபோது தென்னாப்பிரிக்கா அணியின் வெற்றி ரன்களை அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தன்னுடைய விக்கெட்டை பறி கொடுத்தார். இறுதியில் 5 விக்கெட்டுகளை இழந்து, 27 வருடங்களுக்கு பிறகு ஐசிசி கோப்பையை தென்னாப்பிரிக்க அணி கைப்பற்றியுள்ளது.

Latest Slideshows

Leave a Reply