X BANNED : எக்ஸ் தளத்துக்கு தடை | உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

எலான் மஸ்க்கின் எக்ஸ் இயங்குதளத்திற்கு பிரேசில் உச்சநீதிமன்றம் தடை விதித்து (X BANNED) உத்தரவு பிறப்பித்துள்ளது. போலியான செய்திகளைப் பரப்புவதற்கும், போலி கணக்குகளைத் தடுப்பதற்கும் எக்ஸ் தளத்தை முடக்க பிரேசில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் நீதிமன்றம் என்ன சொன்னது, அதற்கு எலான் மஸ்க் என்ன தெரிவித்தார் என்பது குறித்து காணலாம். 

தொடர் சர்ச்சைகளில் எலான் மஸ்க் :

எலான் மஸ்க், உலகின் டாப் பணக்காரர்களில் ஒருவராக இருக்கிறார். இவர் விண்வெளித்துறை, ஆட்டோமொபைல் துறை, தொழில்நுட்பத் துறை போன்றவற்றில் ஜாம்பவானாக இருக்கிறார். இவர் ட்விட்டர் தளத்தை வாங்கிய பிறகு, ட்விட்டர் தளத்தில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தினார். மேலும், ட்விட்டர் தளத்தின் பெயரை எக்ஸ் தளம் என மாற்றினார். மேலும், அதன் லோகோவையும் மாற்றினார். இதில் சில பிரச்சனைகளால் சர்ச்சையில் சிக்கினார். மேலும் அமெரிக்க தேர்தலில் டிரம்புக்கு ஆதரவாகவும் பிரச்சாரம் செய்து வருகிறார். இதனால் அவர் சில சர்ச்சைகளை சந்தித்து வருகிறார்.

X BANNED - எக்ஸ் தளம் முடக்கம் :

இந்த நிலையில், எக்ஸ் வளையதளத்தில் போலிச் செய்திகள் மற்றும் வெறுப்புப் பேச்சுகளை பரப்பியதாகக் குற்றம் சாட்டப்பட்ட கணக்குகளைத் தடுக்க தவறியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக, எலான் மஸ்க் மற்றும் பிரேசில் உச்சநீதிமன்ற நீதிபதி அலெக்சாண்ட்ரே டி மோரேஸ் இடையே மோதல் தொடங்கியது. போலி கணக்குகள் மற்றும் வெறுப்புப் பேச்சுகளைத் தடுக்க நீதிமன்றம் பலமுறை எச்சரித்த போதிலும் எலான் மஸ்க்கின் தளம் இந்த உத்தரவைப் பின்பற்றவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக எக்ஸ் தள நிறுவனத்துக்கு பிரேசிலில் சட்டப் பிரதிநிதி ஒருவரை நியமிக்கவும் உத்தரவிட்டது. ஆனால் X நிறுவனம் சட்டப் பிரதிநிதியை நியமிக்கவில்லை. இதையடுத்து, பிரேசிலிய தொலைத்தொடர்பு நிறுவனம் எக்ஸ் இயங்குதளத்தை (X BAN) முடக்கியது. மேலும் 3.25 மில்லியன் டாலர் அபராதம் விதித்ததுடன், எலான் மஸ்க்கிற்கு சொந்தமான செயற்கைக்கோள் துறை நிறுவனமான ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் வங்கிக் கணக்கையும் முடக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளது.

எலான் மஸ்க் விமர்சனம் :

இந்த நடவடிக்கைகளுக்கு பதிலளிக்கும் விதமாக, எலான் மஸ்க் நீதிபதி டி மோரேஸை “சர்வாதிகாரி” என்று விமர்சித்தார். எலான் மஸ்க் பிரேசிலிய சட்டத்திற்கு இணங்க மறுப்பது சமூக ஊடக தளங்களின் பொறுப்புகள் மற்றும் அவை தேசிய விதிமுறைகளுக்கு எந்த அளவிற்கு உட்பட்டிருக்க வேண்டும் என்பது பற்றிய விவாதத்தைத் தூண்டியுள்ளது.

Latest Slideshows

Leave a Reply