XPoSat Collected X-ray Data Of Crab Nebula : இந்தியாவின் முதல் போலரி மீட்டர் சேட்டிலைட் XPoSat கிராப் நெபுலா

XPoSat Collected X-ray Data Of Crab Nebula :

இந்தியாவின் முதல் எக்ஸ்-ரே போலரிமெட்ரி செயற்கை கோள் கிராப் நெபுலாவின் ஆற்றல் மூலத்தை அளவீடு (XPoSat Collected X-ray Data Of Crab Nebula) செய்துள்ளது. நமது சூரியனை போன்ற விண்மீன் உருவாக்கம் நடைபெறும் நெபுலாவின் ஆற்றலை அளவீடு செய்ததை இந்தத் திட்டத்தின் மைல்கல் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்தியாவின் முதல் போலரிமெட்ரி சேட்டிலைட்டான XPoSat ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 2024 ஜனவரி 1ம் தேதி PSLV Polar Satellite Launch Vehicle (PSLV) ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.

சூரியன் மற்றும் சந்திரன், செவ்வாய் தாண்டி பிரபஞ்சத்தை பற்றிய ஆராய்ச்சிக்காக இந்தியா இந்த XPoSat செயற்கைக்கோளை அனுப்பியது. நமது பால்வெளி அண்டத்தில் இருக்கும் சூப்பர் நோவாக்கள் மற்றும் கருந்துளைகள் நெபுலாக்கள் போன்றவற்றின் எக்ஸ்ரே கதிர் தரவுகளை சேகரிப்பது தான் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இரவு நேரங்களில் வான்வெளியில் ஆயிரக்கணக்கான நட்சத்திரங்கள் தென்படுகிறது. அவை அனைத்தும் நமது பால்வெளி அண்டத்தில் காணப்படுகிறது. அனைத்து  நட்சத்திரங்களும் சூரிய குடும்பத்தில் இருந்து நூற்றுக்கணக்கான ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. சந்திரன், செவ்வாய் சூரியன் போன்றவற்றை ஆய்வு செய்து வரும் நிலையில் சூரிய குடும்பத்திற்கு வெளியே பல நூறு ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள நட்சத்திரங்கள் மற்றும் விண்மீன் மண்டலங்களின் எக்ஸ் கதிர் தரவுகளை சேகரிப்பதற்காக ஏற்கனவே இஸ்ரோ இரண்டு விதமான சென்சார்கள் எக்ஸ்போ சாட் செயற்கைக்கோள் (XPoSat Collected X-ray Data Of Crab Nebula) பொருத்தப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி 11-ம் தேதி எக்ஸ்போ சாட் செயற்கைக்கோளிலுள்ள “XSPECT” எனும் கருவியில் வெளியிடப்பட்ட தரவுகளில் இருந்து காசியோபியா சூப்பர்நோவாவில் மூலம் பெறப்பட்ட தரவுகள் வெளியிடப்பட்டது. அதில் சூப்பர் நோவாவில் இருந்து சிலிக்கான், கால்சியம், மக்னீசியம், இரும்பு, போன்றவை இருந்ததாக இஸ்ரோ தெரிவித்து ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. சூரிய குடும்பத்திற்கு வெளியே இத்தகைய சூப்பர் நோவாவை இஸ்ரோ விஞ்ஞானிகள் வடிவமைத்த கருவிகள் மூலம் அளவீடு செய்தது இதுவே முதல்முறை என்பதால்  இந்த அறிவிப்பை உற்சாகமாக இஸ்ரோ வெளியிட்டது. கடந்த 50 நாட்களுக்கும் மேலாக தொடர்ச்சியாக எக்ஸ்போர்ட் செயற்கைக்கோளில் உள்ள மற்றொரு அறிவியல் ஆய்வு கருவியான ‘போலீக்ஸ்’ செயல்பட தொடங்கியது. அடுத்து ஜனவரி 15 தேதி முதல் 18 ஆம் தேதி வரை எடுக்கப்பட்ட  ‘கிராப் நெபுலா’ எனப்படும் நண்டு வடிவ நெபுலாவின் எக்ஸ் தரவுகளை எக்ஸ்போ சாட் செயற்கைக்கோள் சேகரித்துள்ளது. பூமியில் இருந்து சுமார் 6500 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள கிராப் நெபுலாவில் நமது சூரியன் போன்று ஆயிரக்கணக்கான விண்மீன்கள் உள்ளது. மேலும் இதில் இருக்கும் தூசு மண்டலங்கள் நூற்றுக்கணக்கான சூரியன்களை உருவாக்கியும் செயல் இழக்க வைத்தும் இருக்கிறது.

1500 கிலோமீட்டர் அளவிற்கு ஒரு வினாடிக்கு விரிவடையும் திறன் பெற்ற இந்த நெபுலா சூரிய குடும்பத்திற்கு அருகே உள்ள நெபுலா மண்டலங்களில் ஒன்றாகும். அகச்சிவப்புக் கதிர்கள், ரேடியோ கதிர்கள், புற ஊதா கதிர்கள், எக்ஸ் கதிர்கள் மூலமாக ஏற்கனவே கிராப் நெபுலா குறித்த படங்கள் தரவுகளை நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் சேகரித்துள்ளது. இருப்பினும் இந்த நெபுலா பெரிய மாற்றத்திற்கு உள்ளாகும் என்பதால் இஸ்ரோ தற்போது எடுத்துள்ள தரவுகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. மூன்று ஆற்றல் மூலங்களின் தரவுகளை வெவ்வேறு மின்னோட்டங்களில் வெளியிட்டுள்ள இஸ்ரோ இது பழைய தரவுகளோடு ஒத்துப் போவதாக தெரிவித்துள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் ஏற்கனவே சூப்பர் நோவா எனப்படும் விண்மீன் வெடிப்பு குறித்த தரவுகள் சேகரிக்கப்பட்ட நிலையில் தற்போது விண்மீன்கள் உருவாகும் தூசு மண்டலமான நெபுலாவையும் அதன் ஆற்றல் மூலங்களையும் இஸ்ரோ அளவீடு  செய்துள்ளது. சூரிய குடும்பத்திற்கு வெளியே தனது அறிவியல் ஆய்வை இஸ்ரோ விரிவுபடுத்திய நிலையில் நெபுலாக்களின் ஆற்றல் குறித்த தரவுகளை சேகரிப்பது இந்தத் திட்டத்தின் ஒரு மைல்கல் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Latest Slideshows

Leave a Reply