Yaadhum Oore Yaavarum Kelir Movie Review | யாதும் ஊரே யாவரும் கேளிர் - திரை விமர்சனம்

விஜய் சேதுபதி நடிப்பில், அறிமுக இயக்குனர் வெங்கட்கிருஷ்ணா ரேகா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ” யாதும் ஊரே யாவரும் கேளிர்”. இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதியுடன் மகிழ் திருமேனி, கனிகா, ரித்விகா, மோகன் ராஜா மற்றும் மேகா ஆகாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் மே 19 ஆம் தேதி வெளியாகியுள்ளது. யாரும் அகதிகளின் போராட்டங்களை பற்றி காட்டுவதில்லை. இந்நிலையில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான “யாதும் ஊரே யாவரும் கேளிர்” படத்தில் அகதி தனக்கான அடையாளத்திற்காக படும் போராட்டங்களை அழகாக காண்பித்துள்ளார். தற்போது இத்திரைப்படத்தின் விமர்சனத்தை காணலாம்.

இலங்கை தமிழ் அகதிகளின் போராட்டம்

 விஜய் சேதுபதி ஒரு இலங்கை தமிழர், இவர் இசையில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். விஜய் சேதுபதி சிங்கள ராணுவ தாக்குதலின் போது அங்கிருந்து தப்பி அகதியாக இந்தியா வருகிறார். இந்தியா வந்தவுடன் கேரளாவில் ஒரு இசைக்கருவி விற்பனை செய்யும் கடையில் வேலை செய்கிறார். ஒரு கட்டத்தில் தமிழகத்துக்கு வரும்போது விஜய் சேதுபதியிடம் அடையாள ஆவணங்கள் எதுவும் இல்லாததால் போலீசாரால் கைது செய்யப்படுகிறார்.

விஜய் சேதுபதியை வெளியே அழைத்து வரும் மற்றொரு இலங்கை தமிழரான கரு பழனியப்பன் அவருக்கு கிருபாநிதி என்ற பெயரையும் அதற்குரிய ஆவணங்களையும் அந்த பெயரில் அகதி முகாமில் தங்க அரசுக்கு விண்ணப்பிக்கும்படி கூறுகிறார். ஆனால் அதுவே ஆபத்தாக மாறுகிறது. விஜய் சேதுபதியை போட்டு தள்ள போலீஸ் அதிகாரி மகிழ் திருமேனி தேடி அலைகிறார். மற்றொரு புறம் விஜய் சேதுபதியை ஒரு தலையாக காதலிக்கும் மேகா ஆகாஷ் அவரை லண்டன் இசை போட்டியில் பங்கேற்க முயற்சி செய்கிறார். கிருபா யார்? மகிழ் திருமேனி ஏன்? விஜய் சேதுபதியை கொலை செய்ய துடிக்கிறார். லண்டன் இசை போட்டியில் பங்கேற்க வேண்டும் என்ற விஜய் சேதுபதியின் கனவு பலித்ததா? என்பது தான் மீதி கதையாகும்.

Yaadhum Oore Yaavarum Kelir Movie Review (விமர்சனம்)

படத்தின் டைட்டிலில் பல்வேறு போர்கள் குறித்து காட்டப்படும் தொகுப்புகளும், படத்தின் ஆரம்பத்தில் ஒலிக்கும் விஜய் சேதுபதியின் வாய்ஸ் நம்மை நிமிர்ந்து உட்கார வைக்கிறது. ஆனால் படம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே நாம் நினைத்தது தவறு என்று நம்மை உணர வைத்து விடுகிறது. இதில் முதல் பாதி எதை நோக்கி போகிறது என்றே ரசிகர்களுக்கே தெரியவில்லை.

தொடர்பே இல்லாத பல காட்சிகள் முதல் பாதி முழுவதும் நிரம்பி வழிகிறது. இதில் போலீஸ் அதிகாரியாக இரண்டே காட்சிகளில் வரும் ரித்விகா என படத்துக்கு சம்பந்தமே இல்லாத ஏராளமான காட்சிகள் உள்ளன. விஜய் சேதுபதி யார் என்பதே படத்தின் இடைவேளைக்கு பிறகு தான் தெரிய வருகிறது. படத்தின் முதல் பாகத்திலேயே பார்ப்பவர்கள் நொந்து நூடுல்ஸ் ஆகிவிடுகின்றனர். இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதியின் பிளாஷ்பேக் மற்றும் மகிழ் திருமேனி – விஜய்சேதுபதி மோதலுக்கான பின்னணி ஆகியவை இரண்டாம் பாகத்தில் காட்டப்பட்டுள்ளது. படத்தில் குறிப்பிட்டு சொல்லும் படி யாரும் ஒழுங்காக நடிக்கவில்லை.

இலங்கைத் தமிழர்கள் நீண்ட கால போரின் என்ற பெயரில் அனுபவித்த இன்னல்களையும், அகதிகளாகச் சென்றவர்கள் சந்திக்கும் அவலங்களையும் பற்றிப் பேசு வேண்டும் என்ற எண்ணம் பாராட்டுக்குரியது. ஆனால், பார்வையாளனின் மனதைத் தொடும் ஒரு முழுமையான படமாக கொடுக்கத் இயக்குனர் தவறியுள்ளார்.

Latest Slideshows

Leave a Reply