Yaathisai Movie Review: "யாத்திசை" திரை விமர்சனம்
சமீபகாலமாக இந்திய சினிமாவிலும், தமிழ் சினிமாவிலும் சரித்திரத்தின் வேர்களைத் தேடி படம் எடுக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இப்படி நம் வரலாற்றைத் தேடும் முயற்சிதான் “யாத்திசை” திரைப்படம் சமீபத்தில் திரைக்கு வந்தது.
‘யாத்திசை’ திரைப்படம் பெரும்பாலும் பாண்டியர்களுக்கும் எயினார்களுக்கும் இடையிலான போரைக் தான் இந்த திரைப்படம் அதிகமாக கூறுகிறது. குறைந்த பட்ஜெட்டிலும் இதுபோன்ற படங்களை எடுக்க முடியும் என்பதை படக்குழு நிரூபித்துள்ளது.
யாத்திசை கதைச் சுருக்கம்:-
இந்தப் படத்தை தரணி ராசேந்திரன் இயக்கியுள்ளார். யாத்திசை என்றால் தெற்கு திசை என்று பொருள். இந்தப் படம் தென் தமிழகத்தில் நடக்கும் போரைச் சொல்கிறது. தென் திசையில் சேர, சோழ மன்னர்களை வீழ்த்திய மாபெரும் அரசரக ‘ராண தீர பாண்டியன்’ இருக்கிறார். எயின குடியில் பிறந்த கொதி என்ற சிறுவன் படையுடன் ரண தீரணை எதிர்த்து போராட துணிகிறான்.
சோழர்களிடம் உதவி கேட்க முயல்கிறான். தன்னிடம் இருந்த சிறிய படையைக் கொண்டு பாண்டிய மன்னனின் படையைத் தாக்கி கோட்டையைக் கைப்பற்றுகிறான். இதனால் ஆத்திரமடைந்த ரண தீர பாண்டியன் பள்ளிப்படைகளின் உதவியை நாடி ஒரு பெரும் படையை திரட்டி, கொதியின் படையை அழிக்கிறான்.
சோழர்களிடம் இருந்து எதிர்பார்த்த உதவி கிடைக்காததால், கோபமான கொதி பாண்டியனை நேருக்கு நேர் நின்று சண்டையிட கூவல் விடுகிறான். இருவரும் ஆக்ரோஷமாக மோதிக் கொள்கிறார்கள். இதன் இறுதியில் கொதி கொல்லப்படுகிறான்.
யாத்திசை திரை விமர்சனம் (Yaathisai Movie Review):-
எயின கூட்டம், தேவரடியார்கள், பள்ளிப்படை என பல விஷயங்களைப் பேசினாலும் ஆழமாக எதையும் பேசாததால் புரிந்து கொள்ள முடியவில்லை. தீவிர போர் வன்முறை காட்சிகள் சற்று பயமுறுத்துகின்றன. படத்தில் அனிமேஷன் காட்சிகள் தனித்தன்மை வாய்ந்தவையாக தெரிகிறது. போருக்கு முந்தைய பலியிடும் காட்சிகள் நம்மை சில்லிட வைக்கிறது. ரஞ்சித் குமாரின் கலை 7ஆம் நூற்றாண்டை நம் முன்னே நிறுத்துகிறது. சக்ரவர்த்தியின் இசைக்கும் சுரேஷ் குமாரின் உடைகளுக்கும் ஒரு சபாஷ் போடலாம்.
ரண தீரணாக ஷக்தி மித்ரனும், கொதியாக சயோனும் உடல் மொழியிலும் நடிப்பிலும் வாழ்ந்திருக்கிறார்கள். பலி செய்யும் சாமியாராக குரு சோமசுந்தரம் தனது குரல் வளத்தில் சிறந்து விளங்கினார். படத்தை பார்க்கும் போதே இவர்களின் உழைப்பு நம் கண்முன் வந்து நிற்கிறது. அந்த அளவிற்கு உழைப்பை போட்டு இருக்கிறார்கள். படத்தில் சில குறைகள் இருந்தாலும் முற்றிலும் புதிய நடிகர்களை வைத்து இப்படி ஒரு சரித்திரப் படத்தை தந்த இயக்குனரை பாராட்டலாம்.