Yagi Cyclone : சீனாவை புரட்டி போட்ட 'யாகி' சூறாவளி

சீனாவின் ஹைனான் தீவில் சக்தி வாய்ந்த ‘யாகி’ சூறாவளி புயல் (Yagi Cyclone) நேற்று தாக்கியது. இந்த சூறாவளி காற்று மணிக்கு 245 கி.மீ வேகத்தில் வீசியது. தெற்கு சீனாவின் ஹைனான் தீவு மக்கள் சக்திவாய்ந்த புயலை எதிர்கொண்டனர். இரவு முழுவதும் பலத்த மழை மற்றும் பலத்த காற்று வீசியது. சீனாவின் ஹைனான் தீவில் வென்சாங் நகரை நோக்கி வீசிய இந்த சூறாவளி காற்றால் அங்குள்ள ஏராளமான வீடுகள் சேதமடைந்தன, மரங்கள் வேரோடு சாய்ந்தன மற்றும் சாலையோரங்களில் நிறுத்தப்பட்ட வாகனங்கள் பாதிப்படைந்தன. பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டன.

காற்றின் பலத்த வேகம் (Yagi Cyclone) பல இழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. ஹாங்காங்கில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. நிலச்சரிவுகள் மற்றும் பரவலான வெள்ளம் 2 மில்லியனுக்கும் அதிகமான மக்களை பாதித்தது. 47,600க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து இடம்பெயர்ந்தனர். குறைந்தது 16 பேர் இறந்தனர் மற்றும் 17 பேரைக் காணவில்லை, நகரத்தின் வானிலை ஆணையம் அமைப்பின் கீழ் மூன்றாவது மிக உயர்ந்த சூறாவளிக்கான எச்சரிக்கை எண்.8 உயர்த்தப்பட்டது. பள்ளிகள், வங்கிச் சேவைகள் மற்றும் பங்குச் சந்தை வர்த்தகம் போன்றவை நிறுத்தப்பட்டன.

Yagi Cyclone - சீன அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் :

சீன வானிலை ஆய்வு மையங்கள் முன்கூட்டியே எச்சரித்திருந்ததால், சீன அரசு முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டது.

  • அங்கு வசித்த 4,20,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டதால், பெரும் உயிர்ச்சேதம் ஆனது தவிர்க்கப்பட்டது.
  • அந்நாட்டு மக்கள் நகரின் பல்வேறு பகுதிகளில் மணல் மூட்டைகளை அடுக்கி வைத்து பாதுகாப்பு அரண்களை அமைத்திருந்தனர்.
  • ஹைனான் தீவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூன்று விமான நிலையங்களும் மூடப்பட்டன. 100க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ஆனது ரத்து செய்யப்பட்டன.
  • ஹைகோ நகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் அதன் அனைத்து விமானங்களும் வெள்ளிக்கிழமை அன்று தரையிறக்கப்பட்டன. மேலும் முக்கிய போக்குவரத்து சேவைகள் ஆனது மூடக்கப்பட்டன.
  • சில சுற்றுலா இடங்கள் ஆனது மூடப்பட்டன.
  • 250க்கும் மேற்பட்ட மக்களை தற்காலிக அரசாங்க தங்குமிடங்களில் தஞ்சம் அடையச் செய்தனர்.
  • தீவுகளுக்கு இடையேயான படகு சேவைகள் ஆனது நிறுத்தப்பட்டன.

வானிலை ஆய்வு மையம் ஆனது யாகி சூறாவளி பங்செங்காங் மற்றும் வடக்கு வியட்நாம் கடற்பகுதிக்கு இடையே இன்று கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

Latest Slideshows

Leave a Reply