பிரதமர் துவாரகாவில் World Class Yashobhoomi Convention Centre திறந்து வைத்தார்...

World Class Yashobhoomi Convention Centre :

டெல்லி துவாரகாவில் பிரதமர் மோடி தனது பிறந்தநாளான 17/09/2023 அன்று ஆசியாவின் மிகப்பெரிய இந்திய சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தை (IICC – India International Convention And Expo Centre) நாட்டுக்கு அர்ப்பணித்தார். (World’s Largest MICE – Meetings, Incentives, Conferences, And Exhibitions Facilities Centre) சுமார் 5,400 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த அற்புதமான மாநாட்டு மையம் ஆனது பல கண்காட்சி அரங்குகள் மற்றும் பிற வசதிகளைக் கொண்டுள்ளது.

இந்த மாநாட்டு மையம் 73,000 சதுர மீட்டருக்கும் அதிகமான பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இதில் பிரதான ஆடிட்டோரியம், கிராண்ட் பால்ரூம் மற்றும் 13 கூட்ட அறைகள் என மொத்தமாக 15 மாநாட்டு அறைகள் உள்ளன. பெரிய கூட்டங்கள், மாநாடுகள், வணிக கண்காட்சிகள், வணிக நிகழ்வுகளை மற்றும் கண்காட்சிகளை இந்த மாநாட்டு மையத்தில் நடத்த  ஏற்பாடு செய்யலாம். ‘யஷோபூமி’ (Yashobhoomi) என்று பெயரிடப்பட்ட இந்திய சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையம் ஆனது பிரமாண்டமானது மற்றும் மிகப் பெரியது ஆகும். யஷோபூமியில் (Yashobhoomi) இந்திய கலாச்சாரத்தின் ஒரு காட்சியை நாம் காணலாம்.

இந்த மாநாட்டு மையத்தில் மரத்தாலான தளங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த மரத்தாலான தரை (Wooden Floors) மற்றும் பிரமிக்க வைக்கும் சுவர் பேனல்கள் (Acoustic Wall Panels) இந்த மாநாட்டு மையத்திற்கு வரும் விருந்தினர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த ஒரு அனுபவத்தை வழங்கும். கண்காட்சி அரங்குகளில் பிரமாண்டமான ஃபோயர் (Grand Foyer) இடத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. பிரமாண்டமான ஃபோயரில் ஊடக அறைகள், விவிஐபி ஓய்வறைகள், ஆடை வசதிகள், பார்வையாளர்கள் தகவல் மையம், டிக்கெட் வழங்குதல் போன்ற பல்வேறு ஆதரவுப் பகுதிகள் இருக்கும்.

இந்த மாநாட்டு மையத்தின் கூரை தாமிரத்தால் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த லாபியில் மீடியா ரூம், விவிஐபி லவுஞ்ச், ஆடை வசதிகள், டிக்கெட் வழங்குதல் போன்ற பல ஆதரவுப் பகுதிகள் இருக்கும். இங்கு பயன்படுத்தும் Acoustic Wall Panels உலகத் தர அனுபவத்தை பார்வையாளர்களுக்கு உறுதி செய்யும். Wooden Floors And Acoustic Wall Panels பிரதான ஆடிட்டோரியம் ஆனது 6 ஆயிரம் விருந்தினர்கள் அமரும் வசதி கொண்டது.

கிராண்ட் பால்ரூம் ஆனது சுமார் 2,500 விருந்தினர்கள் அமரும் வசதி கொண்டது. இங்கு  உள்ள  திறந்தவெளியில்  500 பேர் அமரக்கூடிய வசதி உள்ளது. மொத்தமாக 13 சந்திப்பு அறைகள் ஆனது இந்த மாநாட்டு மையத்தின் எட்டு தளங்களில் பரந்து விரிந்து பல்வேறு அளவுகளில் பல்வேறு கூட்டங்களை நடத்தும் விதத்தில் உள்ளன. அவற்றில்  ஒரே நேரத்தில் 11,000 பேர் அமரக்கூடிய வசதி இருக்கும். மிகப்பெரிய கூட்டங்களை கூட  இங்கு ஏற்பாடு செய்யலாம். இந்த மாநாட்டு மையத்தின் உள்கட்டமைப்பில் நவீன கழிவுநீர் சுத்திகரிப்பு அமைப்பு, 100% கழிவு நீர் மறுபயன்பாடு, மழைநீர் சேகரிப்பு மற்றும் கூரை சோலார் பேனல்கள் ஆகியவை அமைந்து உள்ளன.

Yashobhoomi : கன்வென்ஷன் சென்டர் இந்திய கலாச்சாரத்தால் ஈர்க்கப்பட்ட கூறுகளை ஒருங்கிணைக்கிறது. இதில்  Terazzo Floors மற்றும் Brass Inlay Patterns Resembling ‘Rangolis’ (ரங்கோலிஸ்) போன்ற பித்தளை பொறிப்பு வடிவங்கள் உள்ளன. பார்வையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக யஷோபூமி (Yashobhoomi) உயர் தொழில்நுட்ப பாதுகாப்பு ஏற்பாடுகளையும் கொண்டிருக்கும். 3,000 க்கும் மேற்பட்ட கார்களுக்கான நிலத்தடி கார் பார்க்கிங் வசதி 100 க்கும் மேற்பட்ட மின்சார சார்ஜிங் புள்ளிகளுடன் பொருத்தப்பட்டுள்ளது.

Latest Slideshows

Leave a Reply