Yezhu Kadal Yezhu Malai Glimpse Video : இணையத்தில் வைரலாகும் "ஏழு கடல் ஏழு மலை" க்ளிம்ப்ஸ் வீடியோ

மனம் கவர்ந்த ஏழு கடல் ஏழு மலை படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ (Yezhu Kadal Yezhu Malai Glimpse Video) ஒரு மில்லியன் பார்வைகளை கடந்து பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. தமிழ் சினிமாவின் தனித்துவமான கதைசொல்லி இயக்குனர் ராம் ஆவார். கற்றது தமிழ் படத்தின் மூலமாக தமிழ் சமூக பரப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இயக்குனர் ராம், தொடர்ந்து தங்கமீன்கள், தரமணி, பேரன்பு போன்ற படங்களை இயக்கினார். தனிமனிதனின் உள் தேடலையும், உலகமயமாதலின் விளைவாக மனிதர்களின் சூழலில் ஏற்படும் நெருக்கடிகளையும் மையமாக வைத்து அவரது கதைகள் அமைந்துள்ளன.

தற்போது இயக்குனர் ராம் இயக்கியுள்ள படம் ஏழு கடல் ஏழு மலை. இந்த படத்திற்கு, இசைமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில் அஞ்சலி, சூரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வி ஹவுஸ் புரொடக்‌ஷன் சார்பில் சுரேஷ் காமாட்சி இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். எழுத்தாளர் நரணின் கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தின் க்ளிம்ஸ் வீடியோவானது (Yezhu Kadal Yezhu Malai Glimpse Video) நேற்று மாலை வெளியானது.

Yezhu Kadal Yezhu Malai Glimpse Video :

இரண்டு நிமிடங்கள் 4 வினாடிகள் ஓடும் இந்த வீடியோவில் ஒருத்தரைவிட்டு ஒருத்தர் போறதுக்கு 1000 காரணம் இருக்கலாம். ஆனால் ஒருத்தரோடு ஒருத்தர் போறதுக்கு ஒரே காரணம்தான். அது காதல் என்ற வசனத்தோடு தொடங்குகிறது. தொடர்ந்து ரயிலில் சூரியும், நிவின் பாலியும் உரையாடும்படி நகர்கிறது. அந்த உரையாடலில் ஃபேன்டஸி ஜானரில் நிவின் கதை சொல்வது போல அமைந்துள்ளது. அஞ்சலி ஒரு தேவதை போல் காட்சியளிக்கிறாள். மேலும் எனக்கு 8822 வயது ஆகிறது என்று நிவின் பாலி கூறியது, அதற்கு சூரியின் ரியாக்ஷன் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. முக்கியமாக க்ளிம்ப்ஸ் வீடியோவில் (Yezhu Kadal Yezhu Malai Glimpse Video) யுவன் ஷங்கர் ராஜாவின் இசை படத்தின் கதையின் எதிர்பார்ப்பை பன்மடங்கு அதிகரிக்கச் செய்கிறது. இந்நிலையில் நேற்று மாலை வெளியான க்ளிம்ப்ஸ் வீடியோ (Yezhu Kadal Yezhu Malai Glimpse Video) 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்து தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. இதற்கிடையில், இந்த படம் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் பிக் ஸ்கிரீன் பிரிவில் போட்டியிட தேர்வு செய்யப்பட்டுள்ளது.

Latest Slideshows

Leave a Reply