Yezhu Kadal Yezhu Malai Trailer Released : ஏழு கடல் ஏழு மலை திரைப்பட ட்ரெய்லர் வெளியீடு

இயக்குநர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி, சூரி, அஞ்சலி மற்றும் பலரது நடிப்பில் உருவாகியுள்ள ஏழு கடல் ஏழு மலை திரைப்படத்தின் (Yezhu Kadal Yezhu Malai Trailer Released) ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

ஏழு கடல் ஏழு மலை

இயக்குநர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி, சூரி, நடிகை அஞ்சலி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள படம் ஏழு கடல் ஏழு மலை. இயக்குநர் ராமின் படங்கள் அனைத்துமே தனித்தன்மை வாய்ந்தவை. அவர் கதை சொல்லும் விதமும் அப்படித்தான். கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி, பேரன்பு ஆகிய நான்கு படங்களும் வழங்கும் கதைகளும் அவை முன்வைக்கும் விஷயங்களும் முக்கியமானவை. மலையாள நடிகர் நிவின் பாலி நடிப்பில் உருவாகி வரும் ஏழு கடல் ஏழு மலை திரைப்படம் (Yezhu Kadal Yezhu Malai Trailer Released) வெளியாக உள்ளது. இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள பாடல்கள், மனதிற்கு ஒருவித உணர்வை கடத்தும் அளவுக்கு உள்ளது.

ஏழு கடல் ஏழு மலை திரைப்படம் ரோட்டர்டாம் மற்றும் மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாக்களில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து, ரோமானிய நாட்டின் டிரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடவும் தேர்வு செய்யப்பட்டது. தனித்துவமான காட்சி வடிவமைப்பால் பார்வையாளர்களை கவரும் வகையில் ஏழு கடல் ஏழு மலை திரைப்படம் ‘நோ லிமிட்’ எனும் (Yezhu Kadal Yezhu Malai Trailer Released) பிரிவில் தேர்வானது குறிப்பிடத்தக்கது. படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. இந்த படம் எப்போது திரைக்கு வரும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

ஏழு கடல் ஏழு மலை ட்ரெய்லர் (Yezhu Kadal Yezhu Malai Trailer Released)

தற்போது வெளியாகியுள்ள படத்தின் ட்ரெய்லர் ஒரு ரயிலில் நடக்கும் உரையாடல் அல்லது விவாதம் போல் தெரிகிறது. இந்த ரயிலில் சந்திக்கும் இருவருக்கும் சண்டை நடக்கிறது. இதில் நிவின் பாலி பறந்து (Yezhu Kadal Yezhu Malai Trailer Released) மிரட்ட சூரி பயந்து ஓடுகிறார். ரயில் பயணத்தின் நடுவில் சந்திக்கும் இருவரின் வாழ்க்கை படத்தின் கதையாக இருக்கலாம் என கூறப்படுகிறது. ரயிலைத் தாண்டியும் படத்தின் கதை நகர்கிறது. ஒரு சுண்டெலியின் உயிரை வைத்து நிவின் பாலியை சூரி மிரட்டுவதுடன் ட்ரெய்லர் முடிவடைகிறது. மேலும் இப்படம் மார்ச் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest Slideshows

Leave a Reply