Yezhu kadal Yezhu Malai : சர்வதேச திரைப்பட விழாவில் 'ஏழு கடல் ஏழு மலை'

இயக்குனர் ராம் இயக்கத்தில் வெளியான பேரன்பு படத்திற்கு பிறகு எந்த படமும் வெளியாகவில்லை. எந்த படத்தையும் கலைநயத்துடன் அணுகக்கூடிய இயக்குனர் ராம் இயக்கிய படம் தான் ‘Yezhu kadal Yezhu Malai’. இப்படம் ரோமேனியாவின் ட்ரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளது. படங்கள் திரைக்கு வருவதற்கு முன்பே அங்கீகாரம் கிடைத்தது படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

Yezhu kadal Yezhu Malai :

தங்க மீன்கள், பேரன்பு போன்ற படங்களை இயக்கிய ராம் இயக்கத்தில் அடுத்து திரையரங்குகளில் வெளியாகும் படம் ‘Yezhu kadal Yezhu Malai’. பிரேமம் படம் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் தனி இடத்தைப் பிடித்த நடிகர் நிவின் பாலி இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். அஞ்சலி கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் மூலம் தயாரித்துள்ளார். கருடன் படத்தில் நம்மை திகைக்க வைத்த நடிகர் சூரி இப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் கடந்த ஜனவரி மாதம் நெதர்லாந்தில் நடந்த ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. பெரிய திரை போட்டி பிரிவில் தேர்வு செய்யப்பட்டு படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இந்த விழாவில் நிவின்பாலி, சூரி, சுரேஷ் காமாட்சி, ராம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சர்வதேச திரைப்பட விழா :

இந்த நிலையில், ரோமேனியாவின் ட்ரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவில் ‘நோ லிமிட்’ எனும் பிரிவில் திரையிடப்பட இருக்கிறது. இந்தத் தகவலை நடிகர் நிவின் பால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். Yezhu kadal Yezhu Malai படத்திற்கு கிடைத்துள்ள மற்றொரு அங்கீகாரத்தில் படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இயக்குனர் ராம் முன்னதாக ஒரு நிகழ்ச்சியில் ஏழு கடல் ஏழு மலை படத்தின் உருவாக்கம் பற்றி பேசினார். ‘Yezhu kadal Yezhu Malai’ திரைப்படம் உருவான காரணம், கடந்த 2019 ஆம் ஆண்டு, கொரோனா காலத்தில் மனித  இனத்தின் நம்பிகையான வரலாறு என்ற புத்தகத்தைப் படித்தேன். அந்த புத்தகத்தில் மனிதன் மற்றவரை வெறுக்கவோ துன்புறுத்தவோ முடியாது. மனிதன் தன் எல்லா வேறுபாடுகளையும் தாண்டி கைகோர்த்து நிற்க முடியும் என்பதை விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கும் கதை இது. ஏழு கடல் ஏழு மலை திரைப்படம் அந்த தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது உருவானது என தெரிவித்துள்ளார். மேலும் எனது முந்தைய நான்கு படங்கள் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் ஐந்தாவது படமான ‘ஏழு கடல் ஏழு மலை’ நிச்சயம் பிடிக்கும் என்று கூறிய அவர், இந்த படம் “மனிதகுலத்தின் அன்பு மற்றும் இந்த உலகத்திற்கு நாம் என்ன செய்ய வேண்டும்” என்பது பற்றியது என்றும் கூறியுள்ளார்.

Latest Slideshows

Leave a Reply