Yogurt Benefits : தினமும் யோகர்ட் உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்

யோகர்ட் என்பது புளித்த பாலில் இருந்து தயாரிக்கப்படும் உணவு ஆகும். இது புளிப்பு சுவை மற்றும் கிரீம் அமைப்பை அளிக்கிறது. புத்துணர்ச்சி மற்றும் குளிர்ச்சியளிக்கும் யோகர்ட் கோடையில் முக்கியமான ஒன்றாகும். இது ஒட்டுமொத்த நல்வாழ்வையும் பராமரிக்கிறது. இந்நிலையில் யோகர்ட்டை உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகளை (Yogurt Benefits) பற்றி பார்க்கலாம்.

Yogurt Benefits - யோகர்ட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் :

உடல் ஆரோக்கியத்திற்கு

யோகர்ட்டை லாக்டோஸ் சகிப்புத்தன்மை உள்ளவர்கள் கூட எடுத்துக்கொள்ளலாம். இவற்றை எல்லா நேரத்தில் சாப்பிட்டாலும் கூட, காலையில் சரியான நேரத்தில் எடுத்துக்கொண்டால் அவற்றில் உள்ள ஆரோக்கிய நன்மைகளும் ஊட்டச்சத்து மதிப்புகளும் முழுமையாக கிடைக்கும். இதன் மூலம் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

குடல் ஆரோக்கியத்திற்கு

யோகர்ட் மிகவும் பரிந்துரைக்கப்பட்ட முக்கிய காரணங்களில் ஒன்று, இவற்றில் அதிகமான புரோபயாடிக்குகள் இருக்கின்றன. இவை பாக்டீரியாக்கள் மற்றும் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நுண்ணுயிரிகளையும் (Yogurt Benefits) ஊக்குவிக்கிறது. இந்த புரோபயாடிக்குகள் குடல் இயக்கத்தை சீராக்கி வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் ஆகிவற்றை குறைக்க உதவுகிறது. யோகர்ட் வீக்கத்தை குறைப்பதோடு மனநலத்தையும் மேம்படுத்துகிறது.

உடல் எடை குறைய

உடல் எடையை குறைப்பதற்காக (Weight Loss) டயட்டில் இருப்பவர்கள் யோகர்ட்டை தினமும் எடுத்துக்கொள்ளலாம். இது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை கரைத்து வெளியேற்றுகிறது. இவற்றை காலை நேரத்தில் எடுத்துக்கொள்ளலாம். இவற்றில் இருக்கும் புரோபயாடிக்குகள் வயிறு நிரம்பிய உணர்வை கொடுக்கிறது. இதன்முலம் உடலில் இருக்கும் அதிக கலோரிகள் எரிக்கப்பட்டு உடல் எடை குறைய ஊக்குவிக்கிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க

யோகர்ட்டில் இருக்கும் நன்மை அளிக்கும் பாக்டீரியாக்கள், புரோபயாடிக்குகள் ஆகியவை ஆன்டிபாடிகளின் உற்பத்தியைத் தூண்டி உடலுக்கு இயற்கையான முறையில் வலுவைக் கொடுப்பது மட்டுமில்லாமல் நோயெதிர்ப்பு மண்டலத்தில் உயிரணு செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது. மேலும் செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை சீராக்கி நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்த உதவி செய்கிறது. இவ்வாறு பல்வேறு நன்மைகளை (Yogurt Benefits) கொண்ட யோகர்ட்டை உட்கொண்டு பயன்பெறுங்கள்.

Latest Slideshows

Leave a Reply