Young Billionaires In India: 35 வயதுக்கு உட்பட்ட கோடீஸ்வரர்கள் பட்டியலில் 150 பேர் இடம் பெற்றுள்ளனர்.

இந்தியாவில் 35 வயதுக்கு உட்பட்ட  150 கோடீஸ்வரர்கள் (Young Billionaires In India) பட்டியல்  வெளியிடப்பட்டது –  பெங்களூரு 29 இளம் கோடீஸ்வரர்களுடன் பெங்களூரு முதலிடம். குறிப்பாக இந்தியாவின் தகவல் தொழில் நுட்பத்தின் தலைநகரமாகக் கருதப்படும் பெங்களூருவில் அதிக அளவில் ஸ்டார்ட் ஆப் நிறுவனங்கள் வரத் தொடங்கிவிட்டன. இந்தியாவில் தற்போது இளைஞர்கள் அதிக அளவில் ஸ்டார்ட் ஆப் நிறுவனங்களை நிறுவி வருகின்றனர். இவர்கள் பெரும்பாலும் முதல் தலைமுறை  தொழில் நிறுவனர்கள் ஆவர். இது போன்ற நிறுவனங்களை நிறுவும்  இளைஞர்கள் நன்றாக சாதித்து வருகின்றனர். சிலர் தங்களது படிப்பு முடிந்தவுடன்  வேலைக்குச் செல்லாமல் சொந்தமாக ஸ்டார்ட் ஆப் நிறுவனத்தைத் தொடங்கி கோடீஸ்வரர்களாகி இருக்கின்றனர். குறிப்பாக  IIT-யில் படித்தவர்கள் பெரும்பாலும் சொந்தமாக  தொழில் தொடங்கி நிறுவனர்கள் ஆக உள்ளனர். IIT-யில் படித்து இளம் கோடீஸ்வரர்களான பட்டியலில் சென்னை IIT-யில் படித்தவர்கள் 13 பேர் மற்றும் மும்பை IIT-யில் படித்தவர்கள் 11 பேர் இடம் பெற்றுள்ளனர்.

Hurun Research Institute ஆனது இந்தியாவில் 35 வயதுக்கு உட்பட்ட கோடீஸ்வரர்கள் பட்டியலை தற்போது  வெளியிட்டு இருக்கிறது. இந்தப் பட்டியலில் இந்தியாவில் 150 கோடீஸ்வரர்கள் (Young Billionaires In India) இடம் பெற்றுள்ளனர். இந்த கோடீஸ்வரர்களில் பெரும்பாலனவர்கள் முதல் தலைமுறை கோடீஸ்வரர்கள் ஆவர். இந்த கோடீஸ்வரர்களுக்கு 100 மில்லியன் டாலர் முதல் 500 மில்லியனுக்கும் அதிகமான அளவில் சொத்து இருக்கிறது. இப்பட்டியலில் பெங்களூரு 29 இளம் கோடீஸ்வரர்களுடன் முதலிடத்தில் இருக்கிறது  மற்றும் மும்பை 26 இளம் கோடீஸ்வரர்களுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. இந்தியாவின் பொருளாதார தலைநகரமாகக் கருதப்படும் மும்பையில் இளம் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இது பொருளாதார நிபுணர்ககளுக்கு ஆச்சரியத்தை அளித்து உள்ளது.

Young Billionaires In India: Hurun India நிறுவனர் அனாஸ் ரஹ்மான் வெளியிட்டுள்ள பட்டியல்

  • 31 வயதான ஷேர்சாட் உரிமையாளர் அங்குஷ் சச்சிதேவ் மிகவும் இளம் கோடீஸ்வரராக இடம் பெற்றுள்ளார்.
  • 7 பெண் கோடீஸ்வரர்கள் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
  • இஷா அம்பானி மற்றும் பரிதா பாரிக் ஆகியோருக்கு 32 வயதுதான் ஆகிறது. தந்தை மூலம் இஷா அம்பானி மற்றும் பரிதா பாரிக் ஆகியோர் கோடீஸ்வரர்களானவர்கள் ஆவர்.
  • நிதித்துறையை சேர்ந்த 21 பேர்கள் கோடீஸ்வரர்களாக (Young Billionaires In India) உள்ளனர்.
  • சாப்ட்வேர் சார்ந்த துறையை சேர்ந்த 14 பேர்கள் கோடீஸ்வரர்களாக உள்ளனர்.
  • Third Wave Coffee உரிமையாளர்கள் சுஷாந்த் கோயல் மற்றும் ஆயுஷ் பத்வால் இந்த பட்டியலில் கோடீஸ்வரர்களாக உள்ளனர்.
  • Razorpay உரிமையாளர் சஷாங்க் குமார் இந்த பட்டியலில் கோடீஸ்வரராக இடம் பெற்றுள்ளார்.
  • Meesho உரிமையாளர்கள் விதித் அத்ரே மற்றும் சஞ்ஜீவ் பன்ர்வால் இந்த பட்டியலில் கோடீஸ்வரர்களாக உள்ளனர்.

இதற்கு முன்னதாக ஹூருன் நிறுவனர் அனாஸ் ரஹ்மான் அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, கனடா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளில் உள்ள 35 வயது வரையிலான கோடீஸ்வரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளார்.

Latest Slideshows

Leave a Reply