Youngest Girl to Climb Mount Everest : எவரெஸ்ட் சிகரத்தில் இளம் வயதில் ஏறி சாதனை படைத்த பெண்

உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை (Youngest Girl to Climb Mount Everest) படைத்த +2 மாணவி. 16 வயதான காம்யா கார்த்திகேயன் நேப்பால் பகுதியில் இருந்து எவரெஸ்ட் சிகரத்தை ஏறிய இளம் வயது பெண்கள் பட்டியலில் இந்தியளவில் முதல் இடத்தையும் உலகளவில் இரண்டாவது இடத்தையும் பிடித்து இருக்கிறார். கடந்த 21/05/2024  அன்று எவரெஸ்ட் சிகரத்தை இவர் ஏறி இருக்கிறார். சுமார் 8,849 மீட்டர் உயரம் கொண்ட எவரெஸ்ட் சிகரம் ஆனது உலகின் மிகவும் உயரமான மலை சிகரமாக இருக்கிறது. இந்த உயரமான சிகரத்தை ஏறுவது கடினம் மற்றும்  அதிகமானவர்களால் ஏற முடிவதில்லை.

ஆக்சிஜன் பற்றாக்குறை, கடுமையான குளிர், காற்று, தூரம், கணிக்க முடியாத வானிலை மற்றும் உடல் பலவீனம் ஆகியவை ஒருவரது மன வலிமையை சோதிக்கும் வகையில் உள்ளது. அதனால் பல்வேறு மலையேறும் வீரர்களுக்கும் இது சவாலாக அமைந்துள்ளது. இந்த சிகரத்தில் ஏறமிகுந்த தைரியமும், அடக்கமுடியாத ஆசையும் மற்றும் துடிப்பான எண்ணமும்  கொண்டவர்களாலே இந்த சிகரத்தை ஏற முடிகின்றது. அப்படிப்பட்டவர்கள் வரிசையில் இந்த மிக உயரமான சிகரத்தை ஏறி சாதனை படைத்து இருக்கிறார் 16 வயதான காம்யா கார்த்திகேயன். இவர் ஒரு பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஆவார். கப்பல்படை அதிகாரியான கேடர் கார்த்திகேயன் தனது மகளின் இந்த முயற்சிக்கு பக்கபலமாக இருந்து மகளின் முயற்சியை சாதனையாக்கிருக்கிறார்.

காம்யா கார்த்திகேயன் சாதனைகள்

மிகவும் இளம் வயதில் இந்த சிகரத்தை ஏறி சாதனை படைத்த (Youngest Girl to Climb Mount Everest) காம்யா கார்த்திகேயன் தனது மூன்று வயது முதலே மலை மற்றும் சிகரம் ஏறுதலில் ஆர்வம் கொண்டவராக இருந்திருக்கிறார். காம்யா கார்த்திகேயன் முதல் முறையாக கடந்த 2015 ஆம் ஆண்டு தனது 7-வது வயதில் 12 அடி உயரம் கொண்ட சந்திரஷிலா சிகரத்தில் ஏறினார். அதையடுத்து அவர் 13500 அடி உயரம் கொண்ட ஹர் கி துன் சிகரத்தில் ஏறினார். அதன்பின்னர் அவர் 13500 அடி உயரம் கொண்ட கேதர் கந்தா சிகரத்தில் ஏறினார். அவர் கடந்த 2016 ஆம் ஆண்டு 16400 அடி உயரம் கொண்ட ரூப்குண்ட் ஏரியில் பயணம் செய்தார். நேபாளத்தில் உள்ள எவரெஸ்ட் முகாமிற்கு கடந்த 2017 ஆம் ஆண்டு பயணம் செய்து, 14100 அடி உயரம் கொண்ட பிரிகு ஏரி, மற்றும் 13850 அடி உயரம் கொண்ட சார் காண்வாயில் பயணம் செய்தார். கடந்த 2021 ஆம் ஆண்டு இந்த சாதனைக்காக காம்யா கார்த்திகேயன் பிரதம மந்திரி ராஷ்டிரிய பால் சக்தி விருதை பெற்றார்

மேலும் உலகின் 7 கண்டங்களில் உள்ள 7 உயர்ந்த சிகரங்களிலும் ஏறி சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள காம்யா கார்த்திகேயன் இதுவரை 6 சிகரங்களில் ஏறி சாதனை படைத்துள்ளார். வரும் டிசம்பரில் காம்யா கார்த்திகேயன் அண்டார்டிகா கண்டத்தில் உள்ள வின்சன் மாசிப் சிகரத்தில் ஏறி தனது சாதனை பயணத்தை நிறைவு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இளம் வயதில் காம்யா எவரெஸ்டில் ஏறி சாதனை படைத்ததற்காக காம்யா கார்த்திகேயனுக்கும் மற்றும் காம்யா கார்த்திகேயனின் இந்த வெற்றிக்கு துணையாக இருந்த அவரது தந்தைக்கும் வாழ்த்துக்கள் ஆனது குவிந்து வருகிறது. இந்திய கப்பல்படை காம்யா கார்த்திகேயனின் புகைப்படத்துடன் கூடிய பதிவை பகிர்ந்து இந்த சாதனையை வாழ்த்தி இருக்கிறது.

Latest Slideshows

Leave a Reply