Yuvan Shankar Raja Tweet About Puducherry Issue : பாலியல் தொல்லை குறித்து யுவன் சங்கர் ராஜா ட்வீட்

புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரையுலக பிரபலங்கள் மற்றும் சின்னத்திரை நடிகர்கள் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். கார்கி, சுழல் வெப்சீரிஸ், சித்தா போன்ற படங்கள் தொடர்ந்து குழந்தைகள் மீதான பாலியல் துஷ்பிரயோகத்தை சுட்டிக்காட்டி வருகின்றன. அதே சமயம் சினிமாவில் போதைப்பொருள் உபயோகம் அதிகமாக காட்டப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கமல்ஹாசன், விஜய், ஜெயம் ரவி, மதுரை முத்து, அறந்தாங்கி நிஷா, தாடி பாலாஜி, இயக்குநர் ஜி.மோகன், அன்புமணி ராமதாஸ், உதயநிதி உள்ளிட்ட பலர் வீடியோக்கள் மற்றும் ட்வீட்கள் மூலம் தங்கள் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

புதுச்சேரியில் 9 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இது முதல் முறையல்ல, கடைசி நேரமாக இருக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக இருந்தாலும், தினமும் நடக்கும் இந்த கொடுமையை தடுக்க வழிகளே இல்லாமல் தான், பெண் குழந்தைகளை பெற்றவர்கள் வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு இருப்பது போல யாரை பார்த்தாலும் ஒருவித அச்ச உணர்வுடனே காணப்படுகின்றனர்.

Yuvan Shankar Raja Tweet About Puducherry Issue :

18 வயது நிறைவடைவதற்கு முன்னதாக 4ல் ஒரு குழந்தை பாலியல் தொல்லைக்கு பலியாகிறது என்றும் 6ல் ஒரு ஆண் குழந்தை பாலியல் சீண்டலுக்கு உள்ளாகிறது என்ற அதிர்ச்சி தகவலை யுவன் சங்கர் ராஜா ட்வீட் (Yuvan Shankar Raja Tweet About Puducherry Issue) செய்துள்ளார். இந்தியாவில் இளம் வயதிலேயே அதிகபட்சமாக 28.9 சதவீத குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு பலியாகிறார்கள் என்ற அதிர்ச்சி தகவலையும் யுவன் தெரிவித்துள்ளார். குழந்தைகளுக்கு என்னதான் குட் டச் பேட் டச் கற்பித்தாலும், போதை வெறியில் திரியும் கயவர்களுக்கு அது தெரிந்தால் தானே குழந்தைகள் இதுபோன்ற பாலியல் தொல்லைகளுக்கு பலியாகாமல் தப்பிப்பார்கள் என்றும் போதை பொருள் புழக்கமில்லா சமூகத்தை உருவாக்க அனைவரும் முயற்சி செய்தால் தான் நமது குழந்தைகளை இதுபோன்ற பாலியல் தொல்லைகளில் இருந்து காப்பாற்ற முடியும் (Yuvan Shankar Raja Tweet About Puducherry Issue) என பதிவிட்டுள்ளார்.

Latest Slideshows

Leave a Reply