Yuvraj Singh Net Worth : பிரமிக்க வைக்கும் யுவ்ராஜ் சிங்கின் சொத்து மதிப்பு வளர்ச்சி

இந்திய அணியின் நட்சத்திர வீரராக இருந்தவர் யுவராஜ் சிங். இவர் இந்திய அணிக்காக 17 ஆண்டுகள் விளையாடி உள்ளார். யுவராஜ் சிங்,  இந்திய அணி ஆனது 2007 T20 உலகக்கோப்பை மற்றும் 2011 உலகக்கோப்பையை வெல்ல மிகமுக்கிய காரணமாக இருந்தவர். தற்போது இந்திய அணியின் ஃபீல்டிங் ஆனது உச்சத்தில் இருப்பதற்கு மிகமுக்கிய அடித்தளம் அமைத்த வீரர்களில் யுவராஜ் சிங்கும் ஒருவர் ஆவார். இவர் நடிகை ஹேசல் கீச்சை திருமணம் செய்தார். 42 வயதாகும்  யுவராஜ் சிங்  2 குழந்தைகளுக்கு தந்தை ஆவார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து 2019ஆம் ஆண்டு  ஓய்வு பெற்ற யுவ்ராஜ் சிங், அதன்பின் இளம் வீரர்களின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி வருகிறார். யுவராஜ் சிங் குறிப்பாக சுப்மன் கில் மற்றும் அபிஷேக் சர்மா இருவரின் வளர்ச்சியிலும் முக்கிய பங்காற்றி வருகிறார்.

Yuvraj Singh Net Worth : யுவ்ராஜ் சிங்கின் பிரமிக்க வைக்கும் சொத்து மதிப்பு வளர்ச்சி - அவரின் சொத்து மதிப்பு குறித்த குறிப்பு :

யுவ்ராஜ் சிங்கின் சொத்து மதிப்பு (Yuvraj Singh Net Worth) ஆனது 39%-ற்கும் அதிகமாக வளர்ச்சி பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. யுவராஜ் சிங்கின் சொத்து மதிப்பு ரூ.291.74 கோடியாக (Yuvraj Singh Net Worth) கணக்கிடப்பட்டுள்ளது சண்டிகரில் யுவ்ராஜ் சிங் ரூ.5.2 கோடியில் வீடு, மும்பையில் ரூ.60 கோடி மதிப்பிலான பிரம்மாண்ட பிளாட், அதேபோல் பல்வேறு இடங்களில் ரூ.40 கோடிக்கும் அதிகமான சொத்துகளை கொண்டுள்ளார். யுவ்ராஜ் சிங் IPL தொடர் மூலமாக மட்டுமே 2008 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை சுமார் ரூ.85 கோடி வருவாய் ஈட்டியுள்ளார். அதேபோல் யுவ்ராஜ் சிங் ரூ.1 கோடிக்கும் அதிக வருவாயை சர்வதேச கிரிக்கெட் விளையாடிய காலத்தில் மட்டும் பெற்றுள்ளார். இவை மட்டுமல்லாமல் யுவ்ராஜ் சிங்  Pepsi, Reebok, Birla Sunlife, Royal Mega Stock, Laurel & Bens, Whirlpool, Cadbury, Rivitol மற்றும் LG உள்ளிட்ட நிறுவனங்களுக்கு விளம்பர தூதராக யுவராஜ் சிங் செயல்பட்டுள்ளார்.

Yuvraj Singh Net Worth : அதேபோல் 2022 ஆம் ஆண்டுக்கு பின் யுவ்ராஜ் சிங் Asian paints, Puma, Samsonite, Master Cart India, 1xபெட், Prime Video,  மற்றும் Amazon Mini TV ஆகிய நிறுவனங்களின் விளம்பர தூதராக செயல்பட்டு வருகிறார். யுவ்ராஜ் சிங் Audi Q 5, BMW 3 சீரிஸ் மற்றும் Bentley Continental GT உள்ளிட்ட ரூ.8 கோடி மதிப்பிலான கார்களை வைத்துள்ளார். The Center Of Excellence என்ற கிரிக்கெட் அகாடமி ஒன்றை யுவ்ராஜ் சிங் நடத்தி வருகிறார். இதன் மூலம் உத்தரப் பிரதேசம், ஹரியானா, பஞ்சாப், மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள  2,500க்கும் அதிகமானோர் பயிற்சி  மற்றும் பலன் பெற்று வருகின்றனர்.

Latest Slideshows

Leave a Reply