Yuvraj Singh Record Broken : யுவராஜ் சிங்கின் 16 வருட சாதனையை உடைத்த இளம் வீரர்

2007 டி20 தொடரில் யுவராஜ் சிங் 12 பந்துகளில் அரைசதம் அடித்தார். இந்திய அளவில் அந்த நீண்ட கால சாதனையை அசுதோஷ் சர்மா (Yuvraj Singh Record Broken) முறியடித்துள்ளார். சையது முஷ்டாக் அலி கிரிக்கெட் தொடரில் ரயில்வே அணிக்காக விளையாடிய அசுதோஷ் சர்மா 11 பந்துகளில் அரைசதம் அடித்து யுவராஜ் சிங்கின் சாதனையை முறியடித்தார்.

யுவராஜ் சிங் சாதனை - Yuvraj Singh Record Broken

2007ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய வீரர் யுவராஜ் சிங் ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் அடித்து 12 பந்துகளில் அரைசதம் விளாசினார். 16 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த மாதம் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் நேபாள அணி வீரர் தீபேந்திரா சர்வதேச அளவில் சாதனை படைத்தார். அவர் 9 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

அடுத்து, இந்திய அளவில், ரயில்வே மற்றும் அருணாச்சல பிரதேசம் இடையேயான டி20 போட்டியில் அசுதோஷ் சர்மா (Yuvraj Singh Record Broken) முறியடித்தார். இந்த ஆட்டத்தில் ரயில்வேஸ் முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் உபேந்திர யாதவ் 51 பந்துகளில் 103 ரன்கள் எடுத்த நிலையில், கடைசி ஓவர்களில் அசுதோஷ் சர்மா ரன் குவிப்பை முன்னெடுத்தார். அவர் 11 பந்துகளில் அரைசதம் கடந்தார். பின்னர் 53 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 12வது பந்தில் ஆட்டமிழந்தார். 20 ஓவரில் ரயில்வே 5 விக்கெட் இழப்புக்கு 246 ரன்கள் எடுத்தது.

அசுதோஷ் சர்மா

அசுதோஷ் சர்மா 1 பவுண்டரி மற்றும் 8 சிக்சர்களை விளாசினார். அவர் சந்தித்த 12 பந்துகளில் 9 பவுண்டரிகள் அடித்ததும் முக்கியமான சாதனையாக பார்க்கப்படுகிறது. தற்போது இந்தியாவில் அதிவேகமாக அரைசதம் அடித்த வீரர் என்ற பெருமையை அசுதோஷ் சர்மா பெற்றுள்ளார். அவர் அனுபவமற்ற வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை, 9 ODI மற்றும் உள்நாட்டு டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். 8 இன்னிங்சில் 236 ரன்கள் சேர்த்துள்ளார். 3 அரைசதங்கள் அடித்துள்ளார். அனுபவம் குறைந்த வீரரான யுவராஜ் சிங் சாதனையை (Yuvraj Singh Record Broken) முறியடித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் போட்டியில் அடுத்து பந்துவீசிய அருணாச்சல பிரதேசம் 119 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் ரயில்வே 127 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Latest Slideshows

Leave a Reply