Zero To Hero Book Review : ஜீரோ to ஹீரோ - வி.பழனிச்சாமி

வியாபார உலகத்தில் முன்னேறுவதற்கு படிப்பையும், பணத்தையும் விட ஜெயிக்க வேண்டும் என்கிற மன உறுதிதான் முக்கியமான தேவை என்பதை ஆணித்தரமாக எடுத்துக்கூறும் புத்தகம் தான் ஜீரோ to ஹீரோ.

Zero To Hero Book Review - நூல் குறிப்பு :

இந்த நூலில் இடம்பெறும் தொழில் முனைவர் சாதாரண குடும்பச் சூழ்நிலையிலிருந்து தனது வாழ்க்கையைத் தொடங்கியவர். இன்று பல கோடி ரூபாய்க்கு வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார். ஒரே இரவில் இவர்கள் இந்த மாபெரும் வளர்ச்சியைக் கண்டுவிடவில்லை. ஓயாமல் உழைத்துள்ளார். தங்களுக்குக் கிடைத்த ஒவ்வொரு நிமிடத்தையும் சாதகமாக மாற்றித்தான் முன்னேற்றத்தைக் கண்டுள்ளார். சறுக்கல்கள் இல்லாமல் எந்த வெற்றியும் சாத்தியமில்லை என்பதற்கு இவரின் வாழ்க்கை மிகச் சிறந்த உதாரணம். வெறும் கையால் முழம் போட முடியாது என்பார்கள். ஆனால் முழம் அல்ல, முழுக் கோபுரத்தையே கட்டி எழுப்பியிருக்கிறார் திருப்பூரைச் சேர்ந்த வி.பழனிச்சாமி. வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு இவருடைய விறுவிறு வளர்ச்சி ஒரு மேஜிக் போலத்தான் தெரியும்.

ஆனால், அதற்குப் பின்னால் இருக்கும் அவரது அயராத உழைப்பு அத்தனை சாதாரணமானதல்ல. திருப்பூருக்கு வேலை தேடிப் போகிறவர்களில் பத்தில் ஆறு பேராவது ஜே.வி.குரூப் நிறுவனத்தின் கதவைத்தான் முதலில் தட்டுகிறார்கள். ஆயிரம் ரூபாயை முதலீடாகப் போட்டு, ஒரு தொழிலை ஆரம்பித்து, அதிலிருந்து ஆண்டுக்கு 200 கோடி ரூபாயை எடுக்கும் அற்புதத்தைச் சாதித்துக்கொண்டிருக்கிறார் இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான வி.பழனிச்சாமி, அனுபவத்தை மட்டுமே அஸ்திவாரமாகக் கொண்ட பழனிச்சாமியின் வாழ்க்கை, முன்னேறத் துடிப்பவர்களுக்கு ஒரு பாடம்தான்.

வி.பழனிச்சாமி :

திருப்பூரில் பிறந்த இவர், ஆரம்பிச்சா பனியன் கம்பெனிதான் ஆரம்பிக்கோணும்னு! கிட்டத்தட்ட நாலு வருஷம் பனியன் கம்பெனியில வேலை பார்த்தார். பணத்தைவிட, படிப்பைவிட, அனுபவம் என்கின்ற பாடத்தை படிச்சிருந்தாதான், ஆரம்பிக்கப் போற தொழில்ல ஒருத்தர் ஜெயிக்க முடியும் என்பது அவரோட அசைக்க முடியாத நம்பிக்கை. நாலு வருஷ காலம் நல்ல அனுபவம் கிடைச்ச பிறகு, அவரும் அவருடைய அண்ணனும் சேர்ந்து சொந்தமாக தொழில் தொடங்க முடிவு செய்தார்கள். வெறும் ஆயிரம் ரூபாயை வெச்சுக்கிட்டு பழைய தையல் மெஷின் ஒண்ணை வாங்கி பெரிய கம்பெனிகளில் வெட்டினது போக கிடைக்கிற ‘பிட்’ துணிகளை வாங்கி, அதுல அழகழகா டிரஸ் தைச்சு கடைகளுக்கு கொடுக்க ஆரம்பிச்சாங்க சின்ன அளவுல நடந்த இந்தத் தொழில் மூலமாதான் பிஸினஸ்னா என்னனு தெரிஞ்சுக்கிட்டாங்க. முதல் முயற்சியில் இவர்களுக்கு கிடைச்ச வெற்றி, அடுத்த கட்டத்தை நோக்கி நகர செய்தது. 1976-ல் கொஞ்சம் பெரிய அளவுல ஒரு பனியன் தொழிற்சாலையை தொடங்கினார்கள். அதற்கு ‘ஜெயவர்மா நிட்டர்ஸ்’ என பெயர் சூட்டினர். இதிலும் வெற்றிதான்!

கொடிக்கட்டி பறந்த நிறுவனம் :

மெல்ல மெல்ல நிறுவனம் திருப்பூர் உள்ள முக்கியமான நிறுவனங்களில் ஒன்றாக வளர ஆரம்பிச்சுது. இந்த நேரத்தில் இவர்கள் தயாரிக்கிற ஒரு பொருளுக்குத் தேவையான முக்கியமான இன்னொரு பொருளை வேற யார்கிட்டயோ வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த நிலைமையை போக்க மெஷின்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து அந்த பொருளை இவர்களே தயாரிக்க ஆரம்பிச்சனர். மக்கள் என்ன மாதிரியான தரத்துல ஆடைகள் இருக்கோணும்னு எதிர்பார்க்கிறாங்க அப்படிங்கிறதை நல்லா புரிஞ்சிக்கிட்டு. அதுபோல துணிகளை தயாரித்தனர். ஐரோப்பாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றனர். அங்கு மக்களுக்கு பிடித்தது போல் தயாரித்த ஆடைகள் தரத்துக்கு குறையாமல் இருந்தது. உடனே லண்டன்ல உள்ள சில கடைகளுக்குப் போய் இங்கிருந்து கொண்டுபோன டிரஸ்களைக் காட்டினர். அவங்களுக்கு அது பிடிச்சுப் போயி, அங்கையே ஆர்டர் கொடுத்துட்டாங்க.

Zero To Hero Book Review - ஜீரோ to ஹீரோ ஆன வி.பழனிச்சாமி :

1988-ல் ஆரம்பமான இவர்களின் ஏற்றுமதி, மூணே வருடத்தில் உச்சத்தை எட்டியது. 1991-ம் வருஷம் திருப்பூர்ல பெரிய ஏற்றுமதி கம்பெனியா கொடி கட்டி பறந்தது. தொடர்ந்து 1997-ம் ஆண்டு ‘ஜெயவர்மா டெக்ஸ்டைல் மில்ஸ்’ என இன்னொரு ஆலையை ஆரம்பித்தனர். இவர்களின் தொழிலில் சிறந்து விளங்கறதுக்கு ஊழியர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் தான் முக்கியமான காரணம். இதனை தொடர்ந்து பல்வேறு தொழிலில் சிறந்து விளங்கினர். “ஒரு தொழிலை நடத்துறவங்க அவங்க தொழிலை மாதிரியே அவங்களோட உடலையும், உள்ளத்தையும் ஆரோக்கியமா வச்சுக்கோணும். அதேமாதிரி திட்டமிடுறதுலயும் அதிக அக்கறை எடுத்துக்கோணும். அடுத்த ஐந்து வருஷத்துல செய்ய வேண்டியது என்ன? அடுத்த வருஷம் செஞ்சு முடிக்க வேண்டியது என்ன? அடுத்த நாள் செய்ய வேண்டிய வேலைகள் என்ன? இன்று செய்ய வேண்டியது என்ன? இதையெல்லாம் பட்டியல் போட்டு, முக்கியமானதுகளுக்கு முன்னுரிமை கொடுத்து வேலை செய்வார் வி.பழனிச்சாமி. இதையெல்லாம் கடைப்பிடிச்சா அது நம்ம வெற்றிக்கு நிச்சயமா உதவும்”. இதுவே வி.பழனிச்சாமியின் அனுபவப் பாடம் ஆகும்.

Latest Slideshows

Leave a Reply