இந்தியாவின் சிறந்த தொழில் முனைவோர் - ZOHO Company Founder And CEO Sridhar Vembhu

ஸ்ரீதர் வேம்பு பன்னாட்டு நிறுவனமான ZOHO Company Founder And CEO ஆவார். 2020-இல் போர்ப்ஸ் இதழ் ஆனது 2.5 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்துக்களை கொண்ட 55வது இந்தியக் கோடீஸ்வர தொழிலதிபர் என அறிவித்துள்ளது. ஸ்ரீதர் வேம்பு 2021-ஆம் ஆண்டில் இந்திய அரசின்  உயரிய பத்மசிறீ விருதை பெற்றவர். தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் வேளாண்மைக் குடும்பத்தில் 1968-ஆம் ஆண்டில் பிறந்த ஸ்ரீதர் வேம்பு சென்னை IIT-யில் 1989-இல் இளநிலை தொழில்நுட்ப அறிவியல் பட்டம் பெற்றார். ஸ்ரீதர் வேம்பு 1994 இல் சான் டியாகோவில் இருக்கும் குவால்காமில் [Qualcomm] சேர்ந்தார். குவால்காமில் இருந்த போது CDMA, Power Control மற்றும் தொலைதொடர்பில் சிக்கலான பிரச்சனைகள் குறித்த வேலைகளில் ஈடுபட்டார்.

Zoho-வின் வெற்றிப் பயணம் - ZOHO Company Founder And CEO Sridhar Vembhu :

Network Management துறையில் ஏற்கனவே அனுபவம் வாய்ந்த டோனி தாமஸ் என்பவருடன் இணைந்து ஸ்ரீதர் வேம்பு 1996ல் சென்னையில் சிறிய அபார்ட்மெண்ட் ஒன்றில் Vembu Software நிறுவனத்தை துவங்கி தொழிலில் முழுவதுமாக கவனம் செலுத்தி கடுமையாக உழைத்தார். 2009-இல் இந்த Vembu Software நிறுவனத்தின் பெயர் Zoho Corporation-ஆக மாறியது. தனது முதல் கிராமப்புற அலுவலகத்தை Zoho, 2011 இல் மத்தலம்பாறையில் ஆறு ஊழியர்களுடன் திறந்து, இப்போது 500 ஊழியர்களைக் கொண்டுள்ளது.

இது Zoho School Of Learning என்ற ஒரு பிரிவையும் கொண்டுள்ளது. இந்த Zoho School Of Learning மூலம் 12 ஆம் வகுப்பு அல்லது டிப்ளமோ படிப்பை முடித்த மாணவர்கள் பயிற்சி பெற்று ஊழியர்களாக பணியமர்த்தப்படுகிறார்கள். இந்தியாவில் 2019 ஆம் ஆண்டுக்கான “ஆண்டின் சிறந்த தொழில்முனைவோர் விருது” வேம்புவுக்கு வழங்கப்பட்டது. 2022 ஆம் ஆண்டின் CNN-News18 இந்தியனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Zoho ஆனது உலகம் முழுவதும் 12 அலுவலகங்களைக் கொண்டுள்ளது :

Zoho-வின் அமெரிக்க தலைமையகம் தற்போது கலிபோர்னியாவில் உள்ளது. மேலும் Zoho ஆனது சீனா, சிங்கப்பூர்  மற்றும் ஜப்பான் என உலகம் முழுவதும் 12 அலுவலகங்களைக் கொண்டுள்ளது. சென்னையில் Zoho நிறுவனம் எஸ்டன்சியா IT பூங்காவில் உள்ளது. மேலும், Zoho நிறுவனம் தென்காசியில் ஒரு அலுவலகத்தையும் மற்றும் ஆந்திர பிரதேசத்தின் ரேனிகுண்டாவில் ஒரு அலுவலகத்தையும் கொண்டுள்ளது. Zoho-வின் பெரும்பாலான ஆதரவு நடவடிக்கைகள் சென்னையில் உள்ள அலுவலகத்திலிருந்து மேற்கொள்ளப்படுகின்றன.

ஸ்ரீதர் வேம்பு பெருநகரங்களில் Zoho-வின் புதிய அலுவலகங்களைத் திறப்பதற்குப் பதிலாக, சிறிய நகரங்கள் அல்லது புறநகர்ப் பகுதிகளில்  திறப்பதற்கு விரும்புகிறார். Zoho, உலகளவில் 10 கோடி பயனர்களைத் தாண்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. சென்னையை தலைமையிடமாக கொண்ட இந்த நிறுவனம், வருடத்திற்கு 1 பில்லியன் டாலர் வருவாய் அளவினை எட்டியுள்ளது. உலகெங்கிலும் உள்ள பெரிய நிறுவனங்களான ஸ்ட்ரைப், ட்விட்டர், பேஸ்புக், லிஃப்ட் போன்ற நிறுவனங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்ற நிலையில் இந்திய மென்பொருள் நிறுவனமான Zoho அடுத்த ஒரு வருடத்தில் 1,000 ஊழியர்களை வேலைக்கு அமர்த்த திட்டமிட்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு மலிவு விலையில் சேவை செய்கிறது.

Latest Slideshows

Leave a Reply