Zoho Plans to Enter Chipmaking: Zoho நிறுவனம் Chipmaking industry-ல் நுழையத் திட்டமிட்டுள்ளது
1996 இல் தமிழ்நாட்டு சென்னையை தலைமையிடமாக கொண்டு Zoho நிறுவப்பட்டது. இப்போது தமிழ்நாட்டில் தலைமை நிர்வகமாக செயல்படுகிறது.
கடந்த 2023-ம் நிதியாண்டில் (மார்ச் 2023 இல் முடிவடைந்த நிதியாண்டில்) Zoho ஆண்டு வருமானம் $1 பில்லியனைத் தாண்டிள்ளது.
Zoho Plans to Enter Chipmaking
Zoho மென்பொருள் (software) நிறுவனம் தற்போது சிப்மேக்கிங் துறையில் நுழையத் (Zoho plans to enter chipmaking industry) திட்டமிட்டுள்ளது. இந்த மென்பொருள் நிறுவனம் சிப் உற்பத்தியில் பல்வகைப்படுத்துவதற்கான அதன் திட்டங்களை கொண்டுள்ளது. இந்த நிறுவனம் அதற்கான முதலீட்டுத் திட்டத்தை சுமார் $700 மில்லியனாகக் திட்டமிட்டுள்ளது. இந்த நிறுவனம் மத்திய அரசாங்கத்திடம் இருந்து ஊக்கத்தொகையை பெறத் திட்டமிட்டுள்ளது. Microsoft மற்றும் Salesforce போன்றவற்றுடன் இந்த நிறுவனம் போட்டியிடுகிறது.
இந்த Zoho சிப்மேக்கிங் நிறுவனத்தின் திட்டத்தைப் பற்றி நேரடியாக அறிந்த இரண்டு நம்பகத்தனமான ஆதாரங்கள் தெரிவித்துள்ளன. அந்த நம்பகத்தனமான ஆதாரங்களில் ஒன்று முதலீட்டுத் திட்டத்தை $700 மில்லியன் என்று உறுதி செய்துள்ளது. இரண்டாவது ஆதாரம் ஆனது இந்த நிறுவனத்துடன் வணிகம் செய்ய விரும்பும் வாடிக்கையாளர்களைப் பற்றி தெளிவுபடுத்தி உள்ளது.
இந்தியாவின் முக்கிய வணிக நிகழ்ச்சி நிரலில் செமிகண்டக்டர்கள் திட்டம் ஒரு முக்கிய திட்டமாகும். மைக்ரோசாப்ட் மற்றும் சேல்ஸ்ஃபோர்ஸ் போன்றவற்றுடன் போட்டியிடும் 150 நாடுகளில் வணிகங்களுக்கான சந்தா மீது மென்பொருள் மற்றும் தொடர்புடைய சேவைகளை இந்த நிறுவனம் வழங்குகிறது.
சில ஆண்டுகளில் தைவான் போன்ற நாடுகளுடன் இந்த நிறுவனம் போட்டியிடும் என்கிற நம்பிக்கை உள்ளதால், தொழில்துறையை மேம்படுத்த $10 பில்லியன் முதலீட்டு தொகுப்பு (பேக்கேஜ்) ஆனது உள்ளது. இந்த நிறுவனம் compound semiconductors (கலவை குறைக்கடத்திகளை) தயாரிக்க முன்மொழிகிறது. இந்த compound semiconductors சிறப்பு வணிக பயன்பாடுகளைக் கொண்டுள்ளன. இவை சிப்மேக்கிங்கில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் சிலிக்கானுக்கு மாற்றாக தயாரிக்கப்படுகின்றன.
இந்த நிறுவனம் புதிதாக செயல்பாட்டை அமைக்க (Zoho plans to enter chipmaking industry) உதவும் ஒரு தொழில்நுட்ப கூட்டாளரையும் அடையாளம் கண்டுள்ளது. அந்த தொழில்நுட்ப கூட்டாளர் பெயர் வெளியிடப்படவில்லை.
Zoho நிறுவனத்தின் இந்த முன்மொழிவு (Zoho plans to enter chipmaking) ஆனது IT அமைச்சகத்தின் Steering Committee on India’s Chip Initiatives-வால் மதிப்பாய்வு செய்யப்படுகிறது.
இந்தியா ஆனது கடந்த 2024 பிப்ரவரியில், Tata Group மற்றும் CG Power உள்ளிட்ட நிறுவனங்களால் $15 பில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள மூன்று semiconductor ஆலைகளை நிர்மாணிக்க அனுமதி அளித்துள்ளது. Defense, Automobile மற்றும் Telecommunication உள்ளிட்ட துறைகளுக்கான சிப்களை தயாரிக்க அனுமதி அளித்துள்ளது.
இந்தியாவின் குறைக்கடத்தி சந்தை 2026 ஆம் ஆண்டுக்குள் $63 பில்லியனாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மைக்ரோசாப்ட் மற்றும் சேல்ஸ்ஃபோர்ஸ் போன்றவற்றுடன் போட்டியிடும் 150 நாடுகளில் வணிகங்களுக்கான சந்தா மீது மென்பொருள் மற்றும் தொடர்புடைய சேவைகளை Zoho வழங்குகிறது.
Zoho நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீதர் வேம்பு, கூடுதல் விவரங்கள் எதுவும் வழங்காமல், தென் மாநிலமான தமிழ்நாட்டில் சிப் வடிவமைப்பு திட்டத்தை திட்டமிட்டு வருவதாகக் கூறியுள்ளார்.
Latest Slideshows
-
Cantilever Technology : புதிய பாம்பன் பாலத்தில் பயன்படுத்தப்படும் அதிநவீன Cantilever தொழில்நுட்பம்
-
6 Planets Aligning In Same Time : வானில் ஒரே நேரத்தில் 6 கோள்கள் அணிவகுக்கும் அதிசய நிகழ்வு
-
Kerala Matta Rice Benefits In Tamil : கேரள மட்டை அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்
-
Yezhu Kadal Yezhu Malai Trailer Released : ஏழு கடல் ஏழு மலை திரைப்பட ட்ரெய்லர் வெளியீடு
-
TikTok App Is Back : டிக்டாக் செயலி மீண்டும் செயலுக்கு வந்தது
-
Champions Trophy 2025 : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு
-
Vikram Tamil Remake Of Margo : மார்கோ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கும் சியான் விக்ரம்
-
CLRI Recruitment 2025 : மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் 41 காலிப்பணியிடங்கள் 10-ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
-
OnePlus 13 & 13R Phone Replacement : ஒன்பிளஸ் 13 & 13R போன்களுக்கு ரிப்ளேஸ்மெண்ட் திட்டம்
-
2024-25 GDP Growth Down : 2024-25 நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி குறையும் என கணிக்கப்பட்டுள்ளது