Zomato Shares Hit A High In Stock Market : Zomato Shares கடந்த ஆண்டை விட கிட்டத்தட்ட 270% உயர்ந்து உச்சம் தொட்டன

Zomato Shares தேசிய பங்குச் சந்தையில் உச்சம் தொட்டன. Zomato Shares கடந்த 2023 ஆம் ஆண்டை விட கிட்டத்தட்ட 270% (Zomato Shares Hit A High In Stock Market) உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 16.07.2024 அன்று நடைபெற்ற தேசிய பங்குச் சந்தை வர்த்தகத்தில் Zomato நிறுவன பங்கின் விலை ஆனது 4.2 சதவீதம் அதிகரித்தது. இதனால் Zomato நிறுவன பங்கின் விலை ஆனது முன்னெப்போதும் இல்லாத அளவில் ரூ.232-ஐ தொட்டது. வர்த்தகத்தின் தொடக்கத்தில் Zomato நிறுவன பங்கின் விலை ஆனது ரூ.222 ஆக காணப்பட்டது.

Zomato நிறுவனத்தின் நிறுவனர் தீபிந்தர் கோயல் இந்திய The Elite Billionaire Club-பில் இணைந்துள்ளார் :

Zomato நிறுவனத்தின் பங்கின் விலை புதிய உச்சத்தைத் தொட்டது மற்றும் Zomato நிறுவனத்தின் சந்தை மதிப்பு ஆனது ரூ.2 லட்சம் கோடியை நெருங்கிவிட்டது. Zomato இன் “தொடர்ச்சியான வருவாய் மேம்பாடு” மற்றும் “வளர்ச்சி இலக்குகளை சரியான நேரத்தில் வழங்குவது” ஆகியவை வளர்ந்து வரும் அதன் லாபத்திற்கான தெளிவான பாதையை எடுத்துக் காட்டுகிறது. தற்போது Zomato நிறுவனத்தின் பங்குகளின் விலை உச்சம் தொட்டதையடுத்து அதன் நிறுவனர் தீபிந்தர் கோயல் இந்திய The Elite Billionaire Club-பில் இணைந்துள்ளார்.

Zomato Shares Hit A High In Stock Market - Zomato இன் தெளிவான வளர்ச்சி பாதை :

Zomato நிறுவனத்தின் நிறுவனர் தீபிந்தர் கோயல் ஒரு IIT பட்டதாரி ஆவார். இவர் பங்கஜ் சத்தாவுடன் இணைந்து கடந்த 2008-ம் ஆண்டு FoodieBay என்ற உணவக டைரக்டரியை தொடங்கினார். இந்த உணவக டைரக்டரி ஆனது 2010-ல் Zomato நிறுவனமாக உருவெடுத்தது. Zomato நிறுவனம் 2018-19-ல், 1 பில்லியன் டாலர் சந்தை மதிப்பை பெற்றது. இந்த நிறுவனம் ஆனது Zomato Unicorn நிறுவனமாக மாறியபோது பங்கஜ் சத்தா நிறுவனத்தை விட்டு வெளியேறினார். Zomato நிறுவனம் 2023 நிதியாண்டில் 800-க்கும் மேற்பட்ட நகரங்களை உள்ளடக்கி 60 மில்லியன் வாடிக்கையாளர்களைப் பெற்றது.

மொத்த ஆர்டர் மதிப்பு ரூ.263.1 பில்லியன் பெறும் Zomato நிறுவனம் ஆனது உலகின் முதல் பத்து E-Commerce அடிப்படையிலான ஆன்லைன் உணவு விநியோக நிறுவனங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. Zomato இன் செயல்திறன் குறித்து சந்தை ஆய்வாளர்கள் நம்பிக்கையான உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளனர். Zomato பத்திரங்களை BSE மற்றும் NSE இரண்டும் நீண்ட கால ASM (கூடுதல் கண்காணிப்பு அளவீடு) கட்டமைப்பின் கீழ் வைத்துள்ளன.  இந்த செயல் ஆனது முதலீட்டாளர்களை எச்சரிக்கையாக செயல்பட  அறிவுறுத்துகின்றது.

Latest Slideshows

Leave a Reply