6 Month Baby Food Chart : 6 மாத குழந்தைகள் சாப்பிடவேண்டிய உணவு வகைகள்

இன்று பல குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் பிறக்கின்றன. இதற்கு முக்கிய காரணம் கர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்கள் எடுத்துக் கொள்ளும் உணவு வகைகள் தான். அரிசி, கோதுமை போன்ற கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவுகளை பெரும்பாலும் எடுத்து கொள்வதால் மற்ற ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு கிடைப்பதில்லை. இதனால் கருவில் இருக்கும் குழந்தைகள் பிறக்கும் போது ஊட்டச்சத்து குறைபாடுடன் பிறக்கிறது. இதை நிவர்த்தி செய்ய சில மாதங்களுக்கு தாய்ப்பால் கொடுப்பதே இதற்கு சிறந்த வழியாகும்.

அதன் பிறகு நாம் கொடுக்கக்கூடிய உணவுகளே குழந்தைகளுக்கு ஊட்டச் சத்துக்களைத் தருகின்றன. குறிப்பாக 6-12 மாதங்களில் (6 Month Baby Food Chart) குழந்தைகளுக்கு தாய்ப்பாலுக்கு பதிலாக கூழ் போன்ற பிற உணவு வகைகளை கொடுக்கலாம். வேகவைத்த மசித்த காய்கறிகள் மற்றும் மசித்த பழங்களை தாராளமாக கொடுக்கலாம். இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் குழந்தைக்கு முழுமையான ஆரோக்கியத்தை அளிக்கும். இந்த பதிவில் குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான வீட்டு உணவுகள் பற்றி பார்க்கலாம்.

6 Month Baby Food Chart - 6 மாத குழந்தைகளுக்கான உணவு வகைகள் :

செரலாக் :

1 கப் அரிசியை நன்றாகக் கழுவி, அதில் உள்ள அனைத்து தண்ணீரையும் வடிகட்டவும். கழுவிய அரிசியை சுத்தமான கிச்சன் டவலில் பரப்பி முழுமையாக உலர விடவும். இப்போது ஒரு பாத்திரத்தில் 4 டீஸ்பூன் பாசிப்பருப்பு, 4 டீஸ்பூன் மைசூர் பருப்பு, 2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு மற்றும் 7 பாதாம் சேர்க்கவும். அடுத்து, எல்லாவற்றையும் நன்கு கழுவி, அதில் உள்ள அதிகப்படியான தண்ணீரை வடிகட்ட வேண்டும். பின்னர் அதை ஒரு சுத்தமான துணியில் பரப்பி முழுமையாக உலர விடவும். அடுத்து ஒரு பாத்திரத்தில், 4 டீஸ்பூன் வேகவைத்த கோதுமையுடன் அரிசி சேர்க்கவும். எல்லாவற்றையும் சில நிமிடங்கள் வறுக்கவும். அடுத்து ஒரு கடாயில் காய்ந்த பருப்புகளைச் சேர்த்து வாசனை வரும் வரை வறுக்கவும். வருத்ததை பொடியாக அரைத்துக்கொள்ளவும். இப்போது செரலாக் செய்ய, 1 டீஸ்பூன் பொடியை 1 கப் தண்ணீரில் 8-10 நிமிடங்கள் அல்லது சிறிது கெட்டியாகும் வரை கொதிக்க வைத்து குழந்தைக்கு ஊட்டலாம்.

மசித்த வாழைப்பழம் :

பாதி வாழைப்பழத்தை எடுத்து தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கவும். அடுத்து இந்த துண்டுகளை ½ கப் தண்ணீரில் சேர்த்து பிசையவும். ப்யூரி போன்ற பதம் வரும் வரை கலக்கவும். ப்யூரி நன்றாக இருக்க வேண்டுமெனில், கலக்கும்போது சிறிது தண்ணீர் சேர்க்கலாம். இந்த மசித்த வாழைப்பழத்தை குழந்தைக்கு ஊட்டலாம்.

கேரட் :

ஒரு கேரட்டை எடுத்துக்கொண்டு மேல் தோல் நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். இந்த கேரட் துண்டுகளை ஒரு பாத்திரத்தில் 1/2 கப் தண்ணீர் சேர்க்கவும். பின்னர் 10-12 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். வேகவைத்த கேரட்டை சிறிது நேரம் ஆற வைக்கவும். பிறகு அதிலுள்ள தண்ணீருடன் நன்றாக மசித்து அல்லது மிக்ஸியில் அரைத்துக் கொள்ளலாம். ஒரு மென்மையான பேஸ்ட் உருவாகும் வரை பிசைந்து குழந்தைக்கு கொடுக்கலாம்.

பசலைக்கீரை :

பசலைக் கீரை மிகவும் மென்மையானது ஆகும். பசலைக் கீரையில் இரும்புச் சத்து அதிகம் உள்ளதால், குழந்தைகளுக்குக் கொடுப்பதால், ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து, ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.

பட்டாணி :

பட்டாணியில் இரும்புச்சத்து, புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. ஒவ்வொரு உணவிலும் 3 அல்லது 4 கிராம் பட்டாணியைச் சேர்த்து குழந்தைக்கு கொடுக்கலாம்.

நார்ச்சத்து நிறைந்த உணவுகள் :

குழந்தைகளுக்கு இயற்கையாகவே மலச்சிக்கல் பிரச்சனைகள் இருக்கும். அவற்றைத் தவிர்க்க, உங்கள் பிள்ளையின் உணவில் அதிக நார்ச்சத்து நிறைந்த உணவுகளைச் சேர்க்கவும். உடலுக்குத் தேவையான ஆற்றலைத் தருவதோடு, நோய் எதிர்ப்புச் சக்தியையும் அதிகரிக்கிறது. சர்க்கரை வள்ளிக்கிழங்கு, உருளைக்கிழங்கு, அவகேடோ போன்ற மென்மையான உணவுகளை கொடுக்கலாம்.

பூசணி :

ஒரு துண்டு பூசணிக்காயை எடுத்து விதைகளை நீக்கி தோலை உரிக்கவும். பின்னர் பூசணிக்காயை சிறிய துண்டுகளாக நறுக்கவும். அடுத்து பூசணிக்காயில் சிறிது தண்ணீர் சேர்த்து 20 நிமிடம் கொதிக்க வைக்கவும். பின்னர் சில நிமிடங்கள் ஆறவிடவும். இறுதியாக நன்றாக பிசைந்து குழந்தைகளுக்கு ஊட்டலாம். இவ்வாறு ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை கொடுத்து குழந்தைகளை ஆரோக்கியமாக பார்த்துக்கொள்ளுங்கள்.

Latest Slideshows

Leave a Reply