Indian 2 First Single : கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு

நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 திரைப்படத்தின் முதல் பாடல் (Indian 2 First Single) வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 திரைப்படம் ஜூலை 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கமல்ஹாசன், காஜல் அகர்வால், எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, மனோபாலா, காளிதாஸ் ஜெயராம், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பலர் நடித்துள்ளனர். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ளார். இந்த படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் பல மொழிகளில் வெளியாக உள்ளது. தமிழகத்தில் இப்படத்தின் திரையரங்கு வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் பெற்றுள்ளது. கேரளாவில் படத்தை வெளியிட கோகுலம் பிக்சர்ஸும், கர்நாடகாவில் ரோமியோ பிக்சர்ஸும் படத்தை வெளியிட உரிமம் பெற்றுள்ளனர்.

Indian 2 First Single - இந்தியன் 2 படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் :

இந்தியன் 2 படத்தின் முதல் பாடலான ‘பாரா’ பாடல் தற்போது (Indian 2 First Single) வெளியாகியுள்ளது. பாரா பாடலை பா.விஜய் எழுதியுள்ளார். இந்தப் பாடலை அனிருத் மற்றும் ஸ்ருதிகா சமுத்ரலா இணைந்து பாடியுள்ளனர். சிவாஜி படத்தில் “ஒரு கூடை சன் லைட்” என ஸ்டைலான பாடல் எழுதவும் தெரியும் பீரியட் படத்துக்கு சுதந்திர போராட்ட உணர்வை தூண்டும் விதமாகவும் பாடல்களை தனக்கு எழுத தெரியும் என்பதை நிரூபித்துள்ளார் பா.விஜய். பாடலில் இடம்பெறும் பெண் குரலும் ரசிகர்களுக்கு ட்ரீட் தான்.

ஏ.ஆர்.ரகுமான் இசைமைத்த இந்தியன் படத்தின் ஆல்பம் போல் பாடல்களோ இந்தியன் படம் அளவுக்கு இந்தியன் 2 படம் சிறப்பாக இருக்குமா என்பது சந்தேகமே. ஆனால், அனிருத் தனது ரசிகர்களை ஏமாத்திவிடக் கூடாது என்பதற்காக கூஸ்பம்ப்ஸ் பாடலைக் கொடுத்து தனது பெயரைக் காப்பாற்றிக் கொண்டார் என்றே சொல்ல வேண்டும். இதன் பிறகு இந்தியன் 2 படத்தின் ஹைப் இதற்கு பின் எகிறும் என்றெ தெரிகிறது. பாடலின் முடிவில் இந்தியன் 2 படத்தின் இசை வெளியீடு ஜூன் 1 ஆம் தேதி பிரமாண்டமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியன் 2 திரைப்படம் ஜூலை 12ஆம் தேதி உலகமெங்கும் வெளியாக காத்திருக்கிறது. இந்தியன் 2 இந்த ஆண்டு தமிழ் சினிமாவின் முதல் இண்டஸ்ட்ரி ஹிட் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Latest Slideshows

Leave a Reply