இந்தியாவில் அறிமுகமானது iPhone 15 Pro
ஆப்பிள் நிறுவனம் iPhone 15 Pro சீரிஸ் மாடல் ஸ்மார்ட் போன்களை நேற்று செப்டம்பர் 12 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் இந்த ஐபோன் 15 Pro செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. ப்ரீ-ஆர்டர் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் தொடங்குகிறது, எனவும் ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. ஐபோன் 15 இன் வருகையை எதிர்பார்த்து பலர் காத்திருக்கின்றனர். இதன் அம்சம் பற்றிய விவரங்கள் நமக்கு தெரிந்தாலும், இதன் விலை பற்றிய விவரம் இப்போது வெளியாகியுள்ளது.
ஐபோன் 15 Pro அம்சங்கள் (iPhone 15 Pro Specification) :
இந்த iPhone 15 ப்ரோ மாடல் டைட்டானியம் (Titanium) டிசைனில் செராமிக் சீல்ட் (Ceramic Shield) கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. அதோடு கூடுதலாக மேட் கிளாஸ் பேக் (Matt Glass Back) பேனலும் வருகிறது.
1. iPhone 15 Pro Colors
ஐபோன் 15 Pro ஸ்மார்ட் போன் பிளாக் டைட்டானியம் (Black Titanium), வைட் டைட்டானியம் (White Titanium), ப்ளூ டைட்டானியம் (Blue Titanium) மற்றும் நேச்சுரல் டைட்டானியம் (Natural Titanium) ஆகிய நான்கு வண்ண கலர்களில் அறிமுகம் செய்யப்படுகிறது.
2. iPhone 15 Pro Display
இந்த 15 ப்ரோ மாடல் போனில் 6.1 இன்ச் (2556×1179 பிக்சல்கள்) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே உடன் வருகிறது. இதுவொரு சூப்பரான ரெடினா எக்ஸ்டிஆர் (Super Retina XDR) டிஸ்பிளே மாடலாகும். இந்த டிஸ்பிளேவில் ப்ரோமோஷன் (Pro Motion) டெக்னாலஜி உடன் 120Hz அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட்டும் வருகிறது.
அதோடு கூடுதலாக டைனாமிக் ஐலேண்ட் (Dynamic Island), ட்ரூ டோன் (True Tone), வைடு கலர் பி3 (Wide Colour P3) மற்றும் ஹாப்டிக் டச் (Haptic Touch) உள்ளிட்ட சிறப்பம்சங்கள் வருகின்றன. அவுட்டோரில் 2,000 பீக் பிரைட்னஸ் வருகிறது. IP68 தர ஸ்ப்ளாஷ், வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
3. iPhone 15 Pro Camera
இந்த ஐபோன் 15 ப்ரோ போனில் ஐஓஎஸ் 17 (iOS 17) கொண்ட A 17 ப்ரோ (A17 Pro) சிப்செட் வருகிறது. நியூ 6-கோர் (New 6‑Core) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போன் டிரிபிள் ரியர் ப்ரோ கேமரா சிஸ்டம் (Triple Rear Pro Camera System) அம்சத்தை கொண்டுள்ளது. ஆகவே, 48 MB மெயின் கேமரா + 12 MB அல்ட்ரா வைடு கேமரா + 12 MB டெலிபோட்டோ கேமரா என மூன்று வகையான கேமரா வருகிறது.
இந்த மூன்று வகையான கேமராவில் 3X ஆப்டிகல் ஜூமிங் 2X ஆப்டிகல் ஜூம் அவுட் மற்றும் 6X ஆப்டிகல் ஜூம் ரேஞ்ச் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு 15x டிஜிட்டல் ஜூமிங் சப்போர்ட்டும் உள்ளது. அதேபோல 12 MB ட்ரூ டெப்த் (True Depth) Selfie கேமரா வருகிறது. இந்த வகை கேமராவில் ரெட்டினா பிளாஷ் (Retina Flash), போட்டோனிக் எஞ்சின் (Photonic Engine), டீப் பியூஷன் (Deep Fusion) போன்ற பல்வேறு அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
4. iPhone 15 Pro Storage
இந்த ஐபோன் 15 ப்ரோ வில் 128 GB , 256 GB, 512 GB மற்றும் 1 TB ஆகிய மூன்று வகையான வேரியண்ட்கள் கொண்ட Storage வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது.
5. iPhone 15 Pro Charging
இந்த ஐபோன் 15 ப்ரோ போனில் டைப் – C சார்ஜிங் போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. லித்தியம் – அயன் பேட்டரி வருகிறது. இந்த பேட்டரியில் 15W மேக்சேப் (MagSafe) வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 7.5W கியூஐ (Qi) வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் வருகிறது. கூடுதலாக ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உள்ளதால், வெறும் 30 நிமிடங்கள் 70% சதவீதம் சார்ஜ் செய்துகொள்ள முடியும்.
6. iPhone 15 Pro Rate
இந்தியாவில் கடந்த ஆண்டு வெளியான ஐபோன் 14 Pro ரூ.1,29,900-க்கு கிடைத்தது. ஆனால் இந்த iPhone 15 Pro போனின் ஆரம்ப விலையானது ரூ.1,34,900 பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், அமெரிக்காவில் 900 டாலர்களுக்கு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
iPhone 15 Pro கூடுதல் சிறப்பம்சங்கள் :
iPhone 15 Pro போனில் பேஸ் ஐடி அன்லாக் (Face ID Unlock) சப்போர்ட் உள்ளது. அவசர நேரங்களில் எஸ்ஓஎஸ் (Emergency SOS) கிராஷ் டிடெக்ஷன் (Crash Detection) பாதுகாப்பு அம்சங்கள் வருகின்றன. டூயல் பிரிகொன்சி ஜிபிஎஸ் (Dual-Frequency GPS), டிஜிட்டல் காம்பஸ் (Digital Compass), வை-பை (Wi-Fi), செல்லூலார் (Cellular) மற்றும் ஐபீகன் மைக்ரோ – லோகேஷன் (iBeacon Micro Location) போன்ற பல்வேறு கனெக்டிவிட்டி அம்சங்கள் இருக்கின்றன.
Latest Slideshows
-
Aalavandhan Trailer : ஆளவந்தான் ரீ-ரிலீஸ் | மிரட்டலாக வெளியான ட்ரெய்லர்
-
Kedar Jadhav : கேதார் ஜாதவ் அடிப்படை விலை இரண்டு கோடியா?
-
Naveen ul haq : நான் விராட் கோலியை திட்டவே இல்லை
-
Vijayakanth Health Condition : விஜயகாந்த் உடல்நிலை குறித்து வெளியாகியுள்ள நல்ல செய்தி
-
Saba Nayagan Trailer : அசோக் செல்வன் நடித்துள்ள சபா நாயகன் படத்தின் ட்ரெய்லர் வெளியீடு
-
Artemis 3 திட்டத்தில் நாசா 2027-ம் ஆண்டு மனிதர்களை நிலவுக்கு அனுப்ப திட்டம்
-
Green Credit : 2028 இல் COP33 ஐ நடத்த இந்தியா விரும்புகிறது | COP28 இல் பிரதமர் மோடி அறிவிப்பு
-
International Day Of Disabled Persons 2023 : ஸ்டாலின் நலத்திட்ட நிதியை உயர்த்தி பெருமிதம்
-
Ragi Flour Benefits : கேழ்வரகு சாப்பிடுவதால் கிடைக்கும் மருத்துவ குணங்கள்
-
அரிதாக காணப்படும் Mole என்ற ஒரு பாலூட்டி