Japan Tsunami Alert : ஜப்பானில் 7.6 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம்

இன்று உலகம் எங்கும் புத்தாண்டின் முதல் நாளில் மகிழ்ச்சியோடு மக்கள் கொண்டாடி வருகின்ற சூழலில் ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்டு அந்நாட்டு மக்களை பெரும் அச்சத்திலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. ஜப்பானின் மேற்கு கடலோரப் பகுதியில் 7.6 ரிக்டர் அளவுள்ள நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. ஜப்பானின் மேற்கு பகுதியான இஷிகாவா மாகாணத்தில் மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து மேற்கு கடற்கரையோரப் பகுதியில் தீவிர சுனாமி எச்சரிக்கை (Japan Tsunami Alert) விடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் மேற்கு கடற்கரையோரப் பகுதியை சுற்றியுள்ள அனைத்து மக்களும் உடனடியாக வெளியேற வேண்டும் என்று ஜப்பானின் அரசு ஊடகமான என்.எச்.கே. அறிவித்துள்ளது.

ஜப்பானின் டோயாமா, இஷிகாவா, நிகாடா, மாகாணங்களின் கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை (Japan Tsunami Alert) விடப்பட்டுள்ளதால் அங்கு வசிக்கும் மக்களை உடனடியாக வெளியேற்றும் பணியில் அரசு அதிகாரிகள் நேரடியாக களத்தில் இறங்கி உள்ளனர். மேலும் ஜப்பான் வானிலை ஆய்வு மையம் மேற்குக் கடலோரம் உள்ள அனைத்து ஜப்பானிய நகரங்களுக்கும் சுனாமி எச்சரிக்கை (Japan Tsunami Alert) விடுக்கப்பட்டுள்ளது. சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில் பல இடங்களில் கடல் நீர் அலை அலையாக புக தொடங்கியுள்ளது. இதனால் அந்த பகுதியை சுற்றியுள்ள  மக்கள் கவலை அடைந்துள்ளனர்.

Japan Tsunami Alert - வானிலை மையம் எச்சரிக்கை :

சுனாமி எச்சரிக்கை (Japan Tsunami Alert) குறித்து அந்நாட்டு வானிலை மையம் விடுத்துள்ள அறிவிப்பில் ‘இஷிகாவா மாகாணத்தில் உள்ள நோட்டோவை 5 மீ உயரம் வரை சுனாமி தாக்கும் எனவும் வாஜிமா நகரின் கடற்கரையை 1 மீட்டருக்கும் அதிகமான அலைகள் தாக்கும் என்றும் ஹோன்ஷீ அருகே 13 கி.மீ ஆழத்தில் உருவான நிலநடுக்கத்தால் 15 மீட்டர் உயரத்திற்கு கடல் அலைகள் எழும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் ஜப்பான் மட்டுமல்லாமல் செர்பியா, சீனா, தென் கொரியா, உள்ளிட்ட சுனாமி நாடுகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கடலுக்கு அடியில் நிலநடுக்கம் மையம் கொண்டுள்ள டெக்டானிக் தகடுகள் ஒன்றாக மோதாமல் ஒன்றின் மீது ஒன்றாக எழுந்தால் சுனாமி அலைகளின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும் என்கிறார்கள் புவியியல் ஆராய்ச்சியாளர்கள். இதனிடையே இன்றைய நிலநடுக்கத்தின் தாக்கத்தால் 5 முதல் 7 மீட்டர் அளவிலான சுனாமி அலைகள் ஏற்படலாம் என்றும் மக்கள் உடனடியாக கடற்கரையோரங்களில் இருந்து வெளியேறி மிக உயரமான கட்டிடங்களில் உச்சிக்கு சென்றுவிடுமாறு ஜப்பான் வானிலை மைய அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பசுபிக் பெருங்கடலை ஒட்டி அமைத்துள்ள ஜப்பானில் அடிக்கடி இதுபோல் சுனாமி வருவதும் நிலநடுக்கம் வருவதும் இயல்பான ஒன்றாக உள்ளது.

Latest Slideshows

Leave a Reply