North Korea Missile Test : வடகொரியா தொடர்ந்து ஏவுகணை பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறது

North Korea Missile Test :

வடகொரியா தனது அணு ஆயுத தடவாளத்தில் ஒரு புதிய உலை கட்டமைக்கப்பட்டு வருவதாகவும், இந்த புதிய உலை ஆனது வரும் கோடை காலத்தில் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. வடகொரியா இதிலிருந்து அணு ஆயுதங்கள் தயாரிக்கலாம் என தென் கொரியா அச்சம் தெரிவித்திருக்கிறது. வடகொரியா தனது ஆயுதப்பலத்தால் சர்வதேச அளவில் பலமிக்க நாடாக இருக்கும் அமெரிக்காவை அசால்ட்டாக எதிர்த்து வருகிறது. அமெரிக்காவிடம் இல்லாத ஆயுதங்களை கூட வடகொரியா தயாரித்து மற்றும் பரிசோதித்து (North Korea Missile Test) வருகிறது. அமெரிக்காவை நேரடியாக தாக்கி அழிக்கும் வகையில் இந்த ஆயுதங்கள் தயாரிக்கப்படுகின்றன. எனவே அமெரிக்கா ஆனது ஜப்பானையும் மற்றும் தென் கொரியாவையும் தன் கைக்குள் போட்டுக்கொண்டு வடகொரியாவை கண்கொத்தி பாம்பாக கூர்ந்து கவனித்து வருகிறது.

வடகொரியாவின் அதிரடி நடவடிக்கை :

வடகொரியா தற்போது சில அதிரடி நடவடிக்கையில் இறங்கியிருக்கிறது. அதாவது, அணு ஆயுத தடவாளத்தில் வடகொரியா புதிய உலை ஒன்றை தயார் செய்து வருகிறது. இந்த புதிய உலை மூலம் மின் உற்பத்தியை அதிகரிக்க முடியும் என்றாலும், கூடவே அணு ஆயுதங்களுக்கு தேவையான புளூட்டோனியத்தையும் தயாரிக்க முடியும். இது அமெரிக்காவிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது.

எனவே அமெரிக்கா ஆனது வடகொரியாவின் செயல்பாடுகளை உன்னிப்பாக கவனிக்க முயன்று வருகிறது. இந்த புதிய உலை விவகாரம் குறித்து தென் கொரியாவின் பாதுகாப்பு அமைச்சர் ஷின் வோன்சிக், “நீண்ட காலமாக வட கொரியா யோங்பியோனில் உள்ள 5 மெகாவாட் அணுஉலையில் இருந்து ஆயுத தர புளூட்டோனியத்தை தயாரித்து வருகிறது. வடகொரியா இந்த உலையை மின்சார உற்பத்திக்கு மட்டுமே பயன்படுத்தி வருவதாக கூறி வருகிறது. இந்த நிலையில் தற்போது புதிய இலகு-நீர் உலையை வட கொரியா நிறுவியுள்ளது. இந்த புதிய இலகு-நீர் உலை வரும் ஏப்ரல்-மே மாதங்களில் பயன்பாட்டுக்கு வரும். சர்வதேச அளவில் இலகு-நீர் உலைகளை கொண்டு அணு ஆயுதங்கள் உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படுவதில்லை.

ஆனால், இந்த உலையிலிருந்து பெறப்படும் செறிவூட்டப்பட்ட யுரேனியத்துடன் புளூட்டோனியம் அணு ஆயுதங்களுக்கு சிறந்த எரிபொருள் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே  வடகொரியா ஆனது பல்வேறு புதிய ஏவுகணைகளை பரிசோதித்து வருகின்ற  நிலையில் (North Korea Missile Test) தொடர்ந்து வடகொரியா அணு ஆயுதங்களை தயாரிக்காது என்று கணிக்க முடியாது மற்றும் நம்ப முடியாது” என்று கூறியுள்ளார்.

உலக நாடுகள் அச்சம் :

North Korea Missile Test : வடகொரியா ஆனது உலக நாடுகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் தொடர்ச்சியாக ஏவுகணை பரிசோதனைகளை (North Korea Missile Test) மேற்கொண்டு வருவது ஆசியாவில் மிகப்பெரும் விளைவுகளை ஏற்படுத்தும் என சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். அதேபோல ராணுவத்தில் வடகொரியா ஆனது வல்லரசு நாடுகளுக்கு சவால்விடும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது. வடகொரியா தற்போது அமெரிக்காவின் மிரட்டல்களுக்கு அஞ்சாமல் தனது பாதையில் சென்றுக்கொண்டிருக்கிறது. ரஷ்யாவுடன் வடகொரியா தற்போது தீவிரம் காட்டி வருகிறது. ஏனெனில் ரஷ்யா ஆனது வடகொரியாவுக்கு ஆதரவாக களமிறங்க தயங்காது.  இன்றைய சூழலில் சீனா மற்றும் ரஷ்யா கைகோர்த்தால் பாதி உலக நாடுகள் இவை பின்னால் அணி திரளும்.  அதேபோல, அமெரிக்கா, சீனா, பிரிட்டன், ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஒன்று சேரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Slideshows

Leave a Reply