முதல் முறையாக இந்தியாவில் "புஷ்-புல் ரேக்" நவீன ரெயில் - சென்னை ICF தயாரிப்பு

சென்னை ICF நிறுவனமானது ரயில் தயாரிப்புகளில் தேசிய அளவில் கவனத்தை தன்பக்கம் திருப்பி வருகிறது. தற்போது புதிய மகிழ்ச்சியான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.

ICF நிறுவனம் :

சென்னை ICF நிறுவனமானது உலகிலேயே அதிக ரயில் பெட்டிகளை தயாரிக்கும் நிறுவனமாக திகழ்கிறது. ICF நிறுவனமானது சராசரியாக ஒரு வருடத்துக்கு, 3,000 ரயில் பெட்டிகள் தயாரிக்கின்றன. இதுவரை, 71,000 ரயில் பெட்டிகளை தயாரித்து வழங்கி உள்ளது.  சென்னை ICF நிறுவனமானது அண்டை நாடுகள், சிறிய நாடுகள், வளர்ந்த நாடுகள் என்று 14 நாடுகளுக்கு ரயில் பெட்டிகளை ஏற்றுமதி செய்கின்றது.

ICF சாதனை - 'புஷ்-புல் ரேக்' நவீன ரெயில் :

சென்னை ஐசிஎப் நிறுவனமானது பயணிகள் ரெயில் தயாரிப்பில் புதியதொரு சாதனையை நிகழ்த்தியிருக்கிறது. அதாவது, முதல் முறையாக இந்தியாவில் ‘புஷ்-புல் ரேக்’ எனப்படும் நவீன வசதி கொண்ட ரெயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. என்ஜின்கள் ஆனது இந்த ரெயில் பெட்டிகளின் இரு முனைகளிலும் பொருத்தப்பட்டு இருக்கின்றன.  இந்த ரெயிலில் 2 என்ஜின்கள் கொண்ட அமைப்பு இருப்பதால், இந்த ரெயிலை முன்னும் பின்னும் நகர்த்த முடியும். இந்த ரயிலில் ஏசி இல்லாத 22 பெட்டிகள், 3 அடுக்கு தூங்கும் வசதி கொண்ட 12 பெட்டிகள், 2-ம் வகுப்பு இருக்கை வசதி கொண்ட பெட்டிகள் என அனைத்துமே உள்ளன. மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் செல்லும் இந்த ரெயிலுக்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை.

நீண்ட தூர வழித்தடங்களில் பயணிகளின் போக்குவரத்துக்கு வசதியாக அறிமுகப்படுத்தப்பட உள்ள இந்த ரயில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த ரயில் குறித்து ரெயில்வே அதிகாரிகள், “இந்த புதிய ரெயில் தயாரிப்பு ஆனது வந்தே பாரத் போன்ற ரெயில் பயண அனுபவத்தை சாதாரண பயணிகளுக்கு வழங்குவதை நோக்கமாக கொண்டிருக்கிறது. தொழில்நுட்ப அமைப்பினர் இந்த ரெயில் பெட்டிகளை விரைவில் ஆய்வு செய்ய போகிறார்கள். இந்த ரெயிலின் சோதனை ஓட்டம் ஆனது அடுத்த சில மாதங்களில் நடத்தி முடிக்கப்படும். அதற்கு பிறகே, பயணிகளின் அதிக தேவை உள்ள இடங்களுக்கு இந்த ரெயில் சேவை ஆனது அறிமுக படுத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார்கள்.

சென்னை ICF பொதுமேலாளர் மால்யா பகிர்ந்த தகவல் :

சென்னை ICF பொதுமேலாளர் மால்யா செய்தியாளர்களிடம் பேசும்போது, குறைந்த கட்டணத்தில் “சாதாரண வந்தே பாரத்” ரெயில் சேவை ஆனது நெல்லை-சென்னை வழித்தடத்தில் விரைவில் வரப்போவதாகவும் மேலும் அடுத்து வரும் 5 வருடங்களில் வந்தே பாரத் ரயில் ஆனது 100% இந்தியாவில் தயாராகும் என்ற முக்கிய தகவல்களை பகிர்ந்தார்.

Latest Slideshows

Leave a Reply