Actor Vijay Political Party Name : வைரலாகும் விஜய்யின் அரசியல் கட்சி பெயர்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் ‘லியோ’ படத்திற்கு பிறகு வெங்கட் பிரபுவின் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தில் நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதையடுத்து விஜய்யின் அடுத்த படங்கள் குறித்த தகவல்களும் அவ்வப்போது வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்துவது வழக்கம். இந்நிலையில் விஜய் தொடங்கவுள்ள அரசியல் கட்சியின் பெயர் (Actor Vijay Political Party Name) குறித்த அறிவிப்பு வெளியாகி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

அரசியலில் விஜய் :

இதற்கிடையில் விஜய் விரைவில் அரசியல் களத்தில் இறங்கப் போகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. இதற்காக கடந்த 14 ஆண்டுகளாக ஒவ்வொரு அடியாக எடுத்து வருகிறார். தனது ரசிகர் மன்றத்தை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றுவது, 2011 தேர்தலில் அதிமுகவை ஆதரிப்பது, ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்த அண்ணா ஹசாராவைச் சந்தித்தது, அப்போது காங்கிரஸ் பொது செயலாளராக இருந்த ராகுல் காந்தியைச் சந்தித்தது என முதல் 10 வருடங்களாக அரசியல் நகர்வுகளைக் செயல்படுத்தி வந்தார். ஆனால் கடந்த 4 ஆண்டுகளாக விஜய் அரசியலுக்கு வருவது தொடர்பாக பல திட்டங்களை எடுத்து வருகிறார். முதற்கட்டமாக உள்ளாட்சி தேர்தலில் மக்களின் எண்ணங்களை அறியும் வகையில் தனது புகைப்படம் மற்றும் மக்கள் இயக்க கொடியை பயன்படுத்தாமல் மக்கள் இயக்க நிர்வாகிகளை சுயேச்சையாக போட்டியிட வைத்து மக்களில் எண்ணங்களை தெரிந்து கொள்ள செய்தார். இதில் ஒரு நல்ல பலன் கிடைத்தது. உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் இயக்கத் நிர்வாகிகள் சொல்லிக்கொள்ளும் படியான அமோக வெற்றி பெற்றனர்.

இதையடுத்து மக்கள் இயக்கம் மூலம் நூலகம், மாலை நேர படிப்பு கூடம் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்த தொடங்கினார். கடந்த ஆண்டு 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வில் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களை பாராட்டி பரிசு மற்றும் ஊக்கத்தொகை வழங்கினார். இதையடுத்து சமீபத்தில் மிஜாம் புயலால் பாதிக்கப்பட்ட தென் மாவட்ட மக்களை நேரில் சந்தித்து நிவாரணத் தொகையை வழங்கினார். மேலும் மக்கள் இயக்க நிர்வாகிகளை அவ்வப்போது சந்தித்து தொகுதி தொடர்பான கள நிலவரங்களை கேட்டறிந்து வந்தார். பொதுவாக விஜய்யின் அரசியல் வருகையை பலரும் வரவேற்றாலும் சில அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

Actor Vijay Political Party Name :

விஜய் அரசியலுக்கு வருவது 100% உறுதியான நிலையில், சில நாட்களுக்கு முன்பு அவரது அரசியல் கட்சியை பதிவு செய்ய மக்கள் இயக்கத்திற்கு பொதுக்குழுவில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதையடுத்து பிப்ரவரி முதல் வாரத்தில் டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் அரசியல் கட்சியின் பெயர் மற்றும் சின்னம் பதிவு செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் விஜய் தொடங்கவிருக்கும் அரசியல் கட்சிக்கு “தமிழ்நாடு முன்னேற்றக் கழகம்” என்ற பெயர் (Actor Vijay Political Party Name) சூட்டப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனை பலரும் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

Latest Slideshows

Leave a Reply