AI என்ற வார்த்தை ஆனது 2023 ஆம் ஆண்டிற்கான Collins Word Of The Year என்று பெயரிடப்பட்டுள்ளது

AI காலின்ஸ் அகராதியால் ஆண்டின் சிறந்த வார்த்தை என்று பெயரிடப்பட்டது :

  • Artificial Intelligence-ஸின் (செயற்கை நுண்ணறிவு) சுருக்க வார்த்தை AI ஆனது 2023 ஆம் ஆண்டிற்கான Collins-ஸின் சிறந்த வார்த்தை என்று பெயரிடப்பட்டுள்ளது.
  • 2023 ஆம் ஆண்டிற்கான Collins-ஸின் சிறந்த வார்த்தையாக ‘AI’ தேர்ந்தெடுக்கப்பட்டு பெயரிடபட்டுள்ளது (செயற்கை நுண்ணறிவு-கணினி நிரல்களால் மனித மன செயல்பாடுகளை மாதிரியாக்குதல்).
  • Collins ஆனது கோடிக்கணக்கான வார்த்தைகளை அலசி ஆராய்ந்து, இந்த ஆண்டின் வார்த்தையாக செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) என்ற AI சுருக்கத்தை தேர்வு செய்துள்ளது.
  • Collins-ஆல் சொல் பகுப்பாய்வு செய்து  தேர்ந்தெடுக்கப்பட்ட சொற்களின் பட்டியலில் ‘AI’ ஆனது முதலிடத்தில் உள்ளது. பட்டியலில் உள்ள மற்றொரு வார்த்தை ”Bazball”. இது டெஸ்ட் கிரிக்கெட்டின் ஒரு பாணி ஆகும். Deinfluencing, Ultra-Processed, Debanking, Semaglutide மற்றும் Greedflation ஆகிய  வார்த்தைகளும் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
  • உலகம் முழுவதும் வெளியிடப்பட்ட Websites, Newspapers, Magazines மற்றும் Published Books ஆகியவற்றிலிருந்து எழுதப்பட்ட உள்ளடக்கத்துடன் 20 பில்லியனுக்கும் அதிகமான சொற்களைக் கொண்ட ஒரு Database-ஆன Collin Corpus-ஐ ஆய்வு செய்த பிறகு Collins நிறுவனம் ஆனது இந்த AI வார்த்தைக்கு வந்தது.

இந்த AI வார்த்தை பயன்பாடு அதிகரித்துள்ளது :

  • இது TV மற்றும் Radio நிகழ்ச்சிகளில் பேசப்படும் மொழியிலும் அதிகம் காணப்படுகிறது. AI ஆனது தலைப்புச் செய்திகளை உருவாக்கியது மற்றும் அதிக உரையாடல்களின் மையமாக இருந்தது. 2023 இல் AI ஆனது அதிகம் பேசப்பட்டது மற்றும் விரைவான வளர்ச்சியைக் கண்டுள்ளது. AI ஆனது ஒரு பெரிய கவனத்தை ஈர்த்துள்ளது.

  • இப்போது இது Email, Streaming என அன்றாட தொழில்நுட்பம் எங்கும் பரவி மக்கள் வாழ்வில் கலந்துள்ளது. 2023 ஆம் ஆண்டு மக்களின் அன்றாட உரையாடல்களில் செயற்கை நுண்ணறிவு ஆதிக்கம் செலுத்தி வருகிறது. சமையல் குறிப்புகளை பரிந்துரைப்பதில் இருந்து சிகிச்சையாளராக செயல்படுவது வரை AI ஆனது அனைத்தையும் செய்கிறது. இந்த ஆண்டு இந்த வார்த்தையின் பயன்பாடு நான்கு மடங்கு அதிகரித்துள்ளது என்று வெளியீட்டாளர் கூறினார்.

செயற்கை நுண்ணறிவு (AI) பரிசீலனைகள் :

  • ChatGPT நவம்பர் 2022 இல் தொடங்கப்பட்டது. புதுமை மற்றும் மாற்றம் அல்காரிதம்களின் சக்தியால் இயக்கப்படுகிறது. செயற்கை நுண்ணறிவு 2023 இல் மனிதகுலத்திற்கு நன்மைக்கான சக்தியாக இருக்குமா அல்லது அபோகாலிப்டிக் அழிவுக்கான சக்தியாக இருக்குமா என்பது பற்றிய உரையாடல்களின் அதிகரித்துள்ளது. இத்தகைய உரையாடல்களின் அதிகரிப்பு ஆனது இந்த வார்த்தையின் பயன்பாடு நான்கு மடங்கு அதிகரித்துள்ளது என்று வெளியீட்டாளர் கூறினார்.
  • 100 உலகத் தலைவர்கள், தொழில்நுட்ப முதலாளிகள், கல்வியாளர்கள் மற்றும் AI ஆராய்ச்சியாளர்களுக்கான உச்சிமாநாட்டை UK பிரதமர் ரிஷி சுனக் நடத்துகையில், “இந்த சக்திவாய்ந்த தொழில்நுட்பத்தின் நன்மைகளை எவ்வாறு சிறப்பாகப் பெறுவது என்பது பற்றியும் மற்றும் எவ்வாறு ஆபத்தைக் குறைப்பது என்பது பற்றியும் குறித்து ஆலோசனை நடத்தினார்.
  • இதற்கிடையில், பீட்டில்ஸ் பழைய கேசட்டிலிருந்து ஜான் லெனனின் குரல்களை மீட்டெடுக்க உதவுவதற்கு இதைப் பயன்படுத்தினர். இந்த AI கணினிகள் மனிதர்களை கைப்பற்றுமா என்ற பயம் மற்றும் பதற்றத்தை பலருக்கு ஏற்படுத்தி உள்ளது. சிறந்த வார்த்தையாக AI இன் தேர்வு, நமது வேகமாக வளர்ந்து வரும் உலகில் செயற்கை நுண்ணறிவின் ஆழமான தாக்கத்தை பிரதிபலிக்கிறது.

Latest Slideshows

Leave a Reply