Air Pollution : காற்று மாசுதான் காரணமாம் | பிறக்கும் பச்சிளங் குழந்தையின் எடை குறைய...

Air Pollution - காற்று மாசுபட காரணம் :

மனித இனம் உயிர் வாழ அடிப்படையானது காற்று. நாம் அனைவரும் சுத்தமான காற்றை சுவாசிக்கத் தான் விரும்புவோம். ஆனால் நாம் தினசரி சுவாசிப்பது சுத்தமான காற்றா? இன்றைய நவீன உலகில் பெருகிவரும் வாகனங்கள், தொழிற்சாலைகள், எரிபொருள் பயன்பாடுகள் என இந்தியாவே தற்போது குப்பை கிடங்காக மாறிக் கொண்டிருக்கிறது. அதுவும் காற்று மாசுபாடு அதிகரிப்பால் இந்தியர்களின் ஆயுட்காலமே குறைந்துக் கொண்டிருக்கிறது என்ற புள்ளிவிபரங்கள் நம்மை மேலும் அச்சுறுத்துகின்றன.

Air Pollution : ஆஸ்துமா, நுரையீரல் புற்றுநோய், என காற்று மாசுபாட்டால் ஏற்படக் கூடிய நோய்கள் ஏராளம். இவற்றைக் கட்டுப்படுத்த மருத்துவர்கள் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டாலும் அதுவும் பெரிதாக வெற்றி அடைவதில்லை. நாம் அரை கிலோமீட்டர் தொலைவுக்கே வண்டியை எடுத்துச் செல்லும் போது எப்படி காற்று மாசுபாட்டை குறைக்கப்போகிறோம். இந்தியா மற்றும் சீனா ஆகிய இருநாடுகள்தான் அதிக அளவு காற்று மாசுபாடு உடைய நாடாக இருப்பதாக உலக சுகாதார (WHO) அமைப்பு கூறுகிறது. இதற்கு மக்கள் தொகை ஒரு காரணமாக இருக்கலாம் ஆனால் காற்று மாசுபாட்டை (Air Pollution) குறைக்கவேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது.

புதிய ஆய்வு கட்டுரையின் முடிவுகள் :

காற்று மாசுபாடு (Air Pollution) அதிகரிப்பிற்கும் கர்ப்பிணி பெண்கள் குறைந்த எடை கொண்ட குழந்தைகளை பெற்றெடுப்பதற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக சமீபத்தில் நடத்திய புதிய ஆய்வு முடிவுகளில் கண்டறியப்பட்டுள்ளது. ஐஸ்லாந்து, எஸ்டோனியா, டென்மார்க், நார்வே, ஸ்வீடன் ஆகிய 5 ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த 4,286 குழந்தைகள் மற்றும் தாய்மார்களின் தரவுகள் அடிப்படையில் ஆய்வானது நடத்தப்பட்டது. இத்தாலி நாட்டின் மிலனில் செப்.9 முதல் 13 வரை நடைபெறும் ஐரோப்பிய ‘சுவாசக்கழக சர்வதேச மாநாட்டில்’ சமர்ப்பிக்கப்பட உள்ள ஆய்வு முடிவுகளில் மிகவும் பசுமையான பகுதிகளில் வாழும் கர்ப்பிணி பெண்கள் எடை அதிகமான குழந்தைகளை பெற்றெடுப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பிறக்கும் குழந்தையின் எடைக்கும், நுரையீரல் ஆரோக்கியத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதால், குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தைகள், வளரும் போது, ஆஸ்துமா மற்றும் சி.ஓ.பி.டி போன்ற நுரையீரல் சார்ந்த பல நோய்களால் பாதிக்கப்பட வாய்ப்பு அதிகமுள்ளது. நுரையீரல் பாதிப்பில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க, காற்று மாசுபாட்டை குறைப்பதுடன், நகரங்களை பசுமையாக வைத்திருப்பது முக்கிய அவசியமாகும்.

பசுமையான இடங்களில் வசித்த கர்ப்பிணி பெண்கள் இருந்த இடங்களை செயற்கை கோள் புகைப்படங்களை வைத்து மதிப்பிட்டனர். பசுமை இடங்களில் விவசாய நிலங்கள் மற்றும் காடுகள், பூங்காக்கள் அடங்கும். மேலும் நைட்ரஜன் டை ஆக்சைடு (NO2), ஓசோன், கார்பன் (C) ஆகிய இரண்டு வகையான துகள்கள் (பி.எம்.2.5 மற்றும் பி.எம்.10) ஆகிய 5 மாசுபாடுகள் பற்றிய தரவுகளையும் ஆய்வாளர்கள் கணக்கிட்டனர். கர்ப்பிணி பெண்களின் வயது, தாய்மார்களுக்கு புகைபிடிக்கும் பழக்கம் உள்ளதா அல்லது வேறு ஏதேனும் உடல்நல கோளாறு உள்ளதா என எடையை குறைக்கும் காரணிகளுடன், குழந்தைகளின் எடையை ஆராய்ச்சியாளர்கள் ஒப்பிட்டனர்.

அதிக அளவு காற்று மாசுபாடுனது, குறைந்த எடை கொண்ட குழந்தைகளுடன் தொடர்புடையது. சிறிய பி.எம் 2.5, ஒப்பீட்டளவில் பெரிய மாசு துகள்கள் பி.எம்10, நைட்ரஜன் டை ஆக்சைடு (NO2) மற்றும் கருப்பு கார்பன் ஆகியவை பிறப்பு எடையில் முறையே 48, 56, 46, கிராம்கள் முறையே சராசரி எடையை விட குறைந்த எடையுடன் தொடர்புடையவை. பசுமையை கணக்கில் எடுத்துக் கொண்டபோது, குழந்தையின் எடையில் காற்று மாசுபாட்டின் தாக்கம் குறைந்து காணப்பட்டது. பசுமையான பகுதிகளில் வாழும் தாய்மார்களுக்கு, மற்ற பகுதிகளில் வாழும் தாய்மார்களை விட, சராசரியாக 27 கிராம் அதிகமான எடையுடன் குழந்தைகள் பிறந்தன என்று இந்த ஆய்வு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Slideshows

Leave a Reply