Divyabasura Music Album Release Ceremony : இசைஞானி இளையராஜாவின், திவ்யபாசுர இசைதட்டு வெளியீடு விழா

Divyabasura Music Album Release Ceremony :

இசைஞானி இளையராஜா அவர்கள் நாலாயிரதிவ்ய பிரபந்தத்தில் இருந்து சில பாசுரங்களை தேர்ந்தெடுத்து அதற்கு இசைவடிவம் கொடுத்து ‘திவ்ய பாசுரம்’ என்ற பெயரில் இசைத்தட்டாக வெளியிட்டுள்ளார். இந்த Divyabasura Music Album Release Ceremony ஆனது தி.நகர் கிருஷ்ணகான சபாவில் நடைப்பெற்றது. இன்றைய வேகமான உலகில் மக்கள் ஆழ்வார்கள் இயற்றிய பாடல்கள் நாளடைவில் மறைந்து வரும் நிலையில் இசைஞானி இளையராஜா சில பாசுரங்களை தேர்ந்தெடுத்து அதற்கு தெய்வீக இசைவடிவம் கொடுத்து இசைத்தட்டாக நாலாயிர திவ்ய பிரபந்தத்தை வழங்கியுள்ளார். இசைஞானி இளையராஜா தற்கால இசையமைப்புடன், இன்றைய இளைஞர்களை கவரும் வகையில் புதிய இசையிட்டு மற்றும் புதிய ராகத்தில் மனதை கவரும் வகையில் உருவாக்கியுள்ளார்.

உள்ளங்களை ஈர்க்கும் புவியீர்ப்பு இசைஞானி இளையராஜா :

ஆன்மீக உபன்யாசகரான திரு.உ.வே.வெங்கடேஷ் அவர்கள் இளையராஜாவைப் பற்றி பேசுகையில், “இசைக்கு சக்தி அதிகம். ஒரு கவிதையானது இசை வடிவம் பெற்று பாடலாக மாறினால் நம் மனதில் எளிதில் இடம்பிடிக்கும். இசை ஆனது நமது உணர்சி ஆகும். பேச்சைவிட அதிக சக்தி வாய்ந்த இசையின் மூலமாக கடவுளை எளிதில் நாம் அடையலாம். இறைவன் இசை வடிவமாக வேதங்களுக்குள் இருக்கிறான். இறைவன் இசைக்கு இசைபவன். சிறந்த இசை ஒருவரை மீண்டும் மீண்டும் கேட்கத்தூண்டும். இசைஞானம், அர்பணிப்பு, ஆன்மீகபலம் இந்த மூன்றும் இசைஞானி இளையராஜாவிடம் இருப்பதால் இவர் இதற்கு இசை அமைத்துள்ளது மிகவும் சிறப்பானது” என்று கூறினார்.

இசைஞானி இளையராஜா ஒரு 'ராகவிருச்சி' 'ராகபிரம்மா' :

வேதந்த வித்தகர் சின்ன ஜீயர் சுவாமிகள், ” இசைஞானி இளையராஜா ஹைதராபாத் ஸ்டாட்சு ஆஃப் ஈகுவாலிட்டி வந்தபோது  அங்கே ராமாநுஜருக்கு பாடலை இசை மாலையாய் சூட்டினார். அன்று அந்த இசையில் மயங்கியவர்கள் இன்றுவரை அந்தப் பாடலை பாடிக்கொண்டே இருக்கிறார்கள். அந்த அளவுக்கு இளையராஜா இசைக்கு தன் உயிரை கொடுத்து உருவாக்கிக் கொடுப்பவர். இசைஞானி இளையராஜாவுக்கு நாங்கள் ‘ராகவிருச்சி’ அதாவது ‘ராகபிரம்மா’ என்ற பட்டத்தைக் கொடுத்துள்ளோம். இறைவன் பிரம்மா உயிர்களை உருவாக்குவது போல இளையராஜா இசையை உருவாக்குகிறார். அதனால் இளையராஜாவுக்கு நாங்கள்  ‘ராகபிரம்மா’ என்ற பட்டத்தை வழங்கியுள்ளோம்” என்றார்.

மேலும் அவர் “இதுவரை இளையராஜா பல ஆயிரம் பாடல்களுக்கு இசை அமைத்திருந்தாலும் ஆழ்வார்களின் பாசுரங்களுக்கு அவர் இசை அமைத்திருக்கும் இந்த நிகழ்வு ஆனது மிகவும் முக்கியமானது ஆகும். இனி அடுத்து வரும் தலைமுறைக்கு இளையராஜா ஆழ்வார்களின் பாசுரத்தைக் கொண்டு சேர்க்க உதவியுள்ளார். இளையராஜா தொடர்ந்து நம் சனாதன தர்மத்தைக் காக்கும் வகையில் இதுபோன்று இசைப்பணி ஆற்றிக்கொண்டிருப்பது அவசியம். அதற்காக அவரது இசைப்பணி ஆனது பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்” என்று ஆசி வழங்கினார். இசைஞானி இளையராஜாவின் கலையுலக வாழ்க்கையில் இது ஒரு மிகப்பெரிய மைல்கல் ஆகும்.

Latest Slideshows

Leave a Reply