Eyebrow Keyhole Method : கண் புருவம் வழியாக மூளை புற்றுநோய் கட்டியை அகற்றி அப்பல்லோ சாதனை

உலகில் முதன்முறையாக Eyebrow Keyhole Method-யில் சிகிச்சையை செய்து அதில் வெற்றியும் பெற்று சாதனையை படைத்து இருக்கிறது சென்னை அப்போலோ மருத்துவமனை. சென்னை அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள் Eyebrow Keyhole Method-யில் 44 வயது பெண்ணின் மூளையில் இருந்த புற்றுநோய் கட்டியை அகற்றி சாதனை புரிந்து இருக்கிறார்கள். சென்னையை சேர்ந்த 44 வயது பெண் ஒருவர் இன்சுலர் மூளைக் கட்டியால் பாதிக்கபட்டு இருந்தார். அவர் சென்னை அப்போலோ கேன்சர் மருத்துவமனையை சிகிச்சைக்காக அணுகியபோது அந்த பெண்ணின் மூளையில் டாமினன்ட்-பக்க இன்சுலர் மடலின் மெல்லிய மடிப்புகளுக்குள் கட்டி இருப்பது மருத்துவர்களால் கண்டறியப்பட்டது. மூளையில் செரிப்ரல் கார்டெக்ஸுக்குள் ஆழமான இடத்தில் அமைந்திருந்த இன்சுலாவில் ஒரு அறுவை சிகிச்சை செய்வது மிகவும் கடினம்.

Eyebrow Keyhole Method :

நரம்பியல் துறை அறுவை சிகிச்சை மருத்துவர்கள் ஹிருஷிகேஷ் சர்க்கார், பிரதீப் பாலாஜி, விக்னேஷ் மற்றும் அக்னிஷியா வினோத் ஆகியோர் இது குறித்து தீவிரமாக கலந்து ஆலோசித்தனர். செரிப்ரல் கார்டெக்ஸுக்குள் ஆழமான இடத்தில் அமைந்துள்ள அந்த  இன்சுலா பகுதி ரத்த நாளங்களின் அடர்த்தியான வலைப் பிணைய அமைப்பால் அடுக்குகளாக இருக்கும். இந்த கட்டியை வழக்கமான அறுவை சிகிச்சை முறையில் அகற்றினால் பாராலிசிஸ், ஸ்ட்ரோக், மற்றும் மொழிக் குறைபாடு போன்ற ஆபத்துகள் ஏற்பட நிறைய வாய்ப்புக்கள் ஆனது உள்ளது. இவற்றை தாண்டி வலிப்புத் தாக்கங்கள் மற்றும் மூளை வீக்கங்கள் போன்ற பலவித சிக்கல்கள் ஆனது ஏற்படும் அபாயம் உள்ளது.

இது குறித்து தீவிரமாக கலந்து ஆலோசித்த நரம்பியல் துறை அறுவை சிகிச்சை மருத்துவர்கள் Eyebrow Keyhole முறையில் அறுவை சிகிச்சை செய்து மூளையில் இருக்கும் கட்டியை அகற்ற முடிவு செய்தனர். அதன்படி Eyebrow Keyhole முறையில் அறுவை சிகிச்சை செய்து அந்த பெண்ணின் மூளையில் இருக்கும் கட்டியை அகற்றி இருக்கிறார்கள் சென்னை அப்போலோ கேன்சர் மருத்துவமனை மருத்துவர்கள். உலகில் முதன்முறையாக இந்த Eyebrow Keyhole Method சிகிச்சையை செய்து அதில் வெற்றியும் பெற்று சாதனையை படைத்து தற்போது மருத்துவ வட்டாரங்களில் இருந்து சிறந்த பாராட்டுக்களை பெற்று வருகிறது சென்னை அப்போலோ மருத்துவமனை.

Latest Slideshows

Leave a Reply