First Time Exhibition For Geocode Objects : முதன் முறையாக மதுரையில் புவிசார் குறியீடு பொருள்களுக்கான கண்காட்சி

First Time Exhibition For Geocode Objects :

இந்தியாவிலேயே முதன் முறையாக மதுரையில் புவிசார் குறியீடு பொருள்களுக்கான கண்காட்சி ஆனது வரும் மே 24 முதல் 26 வரை 3 நாள்கள் பிரமாண்டமாக (First Time Exhibition For Geocode Objects) நடைபெற உள்ளது. இந்த வேளாண் தொழில் முனைவோர்களுக்கான மாபெரும் கண்காட்சி ஆனது மதுரையில் உள்ள வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற உள்ளது.

புவிசார் குறியீடு (Geographical Indication) :

புவிசார் குறியீடு (Geographical Indication) என்பது ஒரு குறிப்பிட்ட புவிசார்ந்த இடத்தையோ அல்லது தோற்றத்தையோ (Ex – நகரம், வட்டாரம் மற்றும் நாடு) குறிக்கும்படி ஒரு பொருளின் மீது பயன்படுத்தப்படும் பெயர் அல்லது சின்னம் ஆகும். இந்த புவிசார் குறியீடு (Geographical Indication) அந்த பொருள் ஆனது அந்த குறிப்பிட்ட புவிசார்ந்து பெறும் தரத்தையோ மற்றும் நன்மதிப்பையோ சாற்றும் விதமாக விளங்கும். இது போன்று புவிசார் குறியீடு பெற்றிருக்கும் ஒரு பொருளை சம்பந்தப்பட்ட அந்த ஊரைத் தவிர மற்ற இடங்களில் தயாரித்து அதை சந்தைப்படுத்த முயற்சிக்கும் நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை ஆனது  எடுக்கப்படும். இந்தியாவில் 1999 ஆண்டு புவிசார் குறியீடுகள் சட்டம் (பதிவு மற்றும் பாதுகாப்புச் சட்டம்) நிறைவேற்றப்பட்டு செப்டம்பர் 2003 இல் நடைமுறைக்கு வந்தது. இந்த சட்டம் ஆனது இந்தியாவில் பொருட்கள் தொடர்பான புவிசார் குறியீடுகள் பதிவு மற்றும் பாதுகாப்புக்கு வழி வகுக்கிறது.

மதுரை புவிசார் குறியீடு பொருள்களுக்கான கண்காட்சி :

மதுரையில் நடைபெற உள்ள இந்த கண்காட்சியில், 170-க்கும் மேற்பட்ட அரங்குகள், தொழில்நுட்ப வல்லுனர்களின் ஆலோசனை அமர்வுகள்,  வாங்குபவர், விற்பவர் சந்திப்பு அரங்கம், வங்கியாளர்களுடன் ஆலோசனை பெற அமர்வு, முதலீட்டாளர்கள் சந்திப்பு என பல்வேறு சிறப்பம்சங்கள் ஆனது இடம்பெற உள்ளன. இந்த கண்காட்சியின்  மூலமாக புவியியல் குறியீடுகள், ஸ்டார்ட்அப்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் ஆனது தங்களது புதுமைகளைக் காட்சிப்படுத்துவதற்கும், நெட்வொர்க்கிங் வாய்ப்புகளை வளர்ப்பதற்கும், சந்தை அணுகலை எளிதாக்குவதற்கும் மற்றும்  சாத்தியமான முதலீட்டாளர்களின் சந்திப்பு பெறுவதற்கும் என பல்வேறு வாய்ப்புகளை பெறலாம். மேலும், இந்த கண்காட்சி ஆனது வேளாண் தொழில் சார்ந்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்கும், அதற்கான கல்வியை மேம்படுத்துவதற்கும் மற்றும் ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் அமைப்பில் ஆதரவைப் பெறுவதற்கும் ஒரு தனித்துவமான தளத்தை வழங்கும்.

Latest Slideshows

Leave a Reply