GEMINI AI In 9 Languages Of India : Google இந்தியாவின் 9 மொழிகளில் GEMINI AI செயலியை அறிமுகம் செய்துள்ளது

கடந்த 2023 ஆம் ஆண்டின் இறுதியில் GEMINI எனும் AI-யை (செயற்கை நுண்ணறிவை) Google நிறுவனம் ஆனது அறிமுகப்படுத்தி AI ரேஸில் Google நிறுவனமும் இருக்கிறது என்று இந்த உலகிற்கு உணர்த்தியது. மனிதர்களைப் போல சிந்தித்துச் செயலாற்றும் திறனை GEMINI AI ஆனது கொண்டுள்ளது. Google நிறுவனம் Google செய்திகளில் ஜெமினியுடன் அரட்டையடிக்கும் திறனை முதலில் ஆங்கிலத்தில் மட்டும் அறிமுகப்படுத்தியது.

GEMINI AI In 9 Languages Of India - பயனர்கள் 9 இந்திய மொழிகளில் ஜெமினி செயலியுடன் தொடர்பு கொள்ளலாம் :

தற்போது Google நிறுவனம் கன்னடம், ஹிந்தி, பெங்காலி, குஜராத்தி, மலையாளம், மராத்தி, தமிழ், தெலுங்கு மற்றும் உருது ஆகிய ஒன்பது இந்திய மொழிகளில் செயற்கை நுண்ணறிவு மென்பொருளான GEMINI AI செயலியை  அறிமுகம் (GEMINI AI In 9 Languages Of India) செய்துள்ளது. இப்போது பயனர்கள் தனித்த ஜெமினி செயலியை கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து நிறுவிக் கொண்டு இந்திய மொழிகளில் ஜெமினி செயலியுடன் தொடர்பு கொள்ளலாம். கூகுள் செய்திகளில் ஜெமினியுடன் அரட்டையடிக்கலாம். பயனர்கள் வினாக்களுக்குத் தனிப்பயனாக்கப்பட்ட பரிந்துரைகள் மற்றும் பதில்களை பெறலாம்.

இந்த GEMINI AI செயலி ஆனது மருத்துவம், கணிதம், இயற்பியல் மற்றும் வரலாறு உள்பட 57 பாடப்பிரிவுகளில் ஏற்படும் சந்தேகங்களை தீர்ப்பதற்கு நன்றாக உதவும். Google Playstore-ல் இருந்து இந்த GEMINI AI செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். Google-ல் பயன்படுத்தப்பட்டு வந்த முந்தைய குரல் உதவியாளரைப் போலவே, இந்த GEMINI AI செயலியையும் “Hey Google” என்று அழைக்கலாம்.

Google நிறுவனம் ஆனது GEMINI AI செயலி பிற நாடுகளிலும் அறிமுகப்படுத்தி உள்ளது :

இந்தியாவில் மட்டுமல்லாமல் Google நிறுவனம் ஆனது இந்த GEMINI AI செயலியை இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் துருக்கி போன்ற நாடுகளிலும் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த GEMIN AI செயலி ஆனது கணிதம், வரலாறு, இயற்பியல் மற்றும் மருத்துவம் உள்பட 57 பாடப்பிரிவுகளில் ஏற்படும் சந்தேகங்களை தீர்ப்பதற்கு உதவும். இந்த GEMINI AI செயலியை Google Playstore-ல் இருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். கூகுளில் பயன்படுத்தப்பட்டு வந்த முந்தைய குரல் உதவியாளரைப் போலவே, “ஹே கூகுள்” என்று அழைக்கலாம். தற்போது ஜெமினி ஆண்ட்ராய்டு போன்களுக்கு மட்டுமே GEMINI AI செயலி கிடைக்கிறது. இனிவரும் வாரங்களில் ஐபோன்களுக்கு ஜெமினி நேரடியாக கூகுள் தேடல் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. Google நிறுவன CEO சுந்தர் பிச்சை, “இந்த GEMINI AI செயலி ஆனது இந்திய மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக செயல்படும் மற்றும் அனைத்து தரப்பு கேள்விகளுக்கும் தகுந்த பதிலை அளிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

Latest Slideshows

Leave a Reply