Ilayaraja Music Learning And Research Centre : சென்னை IIT வளாகத்தில் இளையராஜா ஆராய்ச்சி மையம்

Ilayaraja Music Learning And Research Centre - இளையராஜா ஆராய்ச்சி மையத்திற்கான அடிக்கல் நடும் விழா :

சென்னை IIT வளாகத்தில் இசைஞானி இளையராஜா இசை கற்றல் மற்றும் ஆராய்ச்சி என்ற பெயரில் ஒரு ஆய்வு மையம் ஆனது அமைய (Ilayaraja Music Learning And Research Centre) உள்ளது. IIT கல்வி நிலையத்திற்கும் மற்றும் இளையராஜா தரப்பினருக்கும் இடையே இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆனது கையெழுத்தான நிலையில், இந்த மையத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா ஆனது நடைப்பெற்றது. இந்த விழாவில் IIT இயக்குனர் காமகோடியும் மற்றும் இளையராஜாவும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பரிமாறிக்கொண்டனர். இளையராஜா அடிக்கல் நாட்டினார்.

IIT இயக்குனர் காமகோடி, “IIT-ல் Art Of Computer Programming மற்றும் Art Of Hardware என ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பைரவி ராகம் மற்றும் பைனரி தியரி இரண்டும் ஒன்று தான். நமது கலைஞர்களுக்கு பொறியியலும் மற்றும் தொழில் நுட்பமும் சொல்லிக் கொடுத்தால் புதிய கண்டுபிடிப்புகள் மேம்படும். மேலும் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் ஆராய்ச்சியும் தொழில்நுட்பமும் சேர்ந்தால் அது கலைதான். பொறியியலையும் விளையாட்டையும் சேர்த்ததைப் போல பொறியியலையும் இசையையும் சேர்ப்பது தான் எங்களது நோக்கம்” என்றார்.

மேலும் IIT இயக்குனர் காமகோடி பேசுகையில், “மிகப்பெரிய துறையாக Sound Engineering ஆனது வளர்ந்து வருகிறது. புதிய இசைக்கருவிகளை உருவாக்க வேண்டும். நமது ஊரிலிருந்து உருவாக்கப்பட்ட வீணை, தம்புரா போன்றவற்றை எவ்வாறு மெருகேற்றுவது என்று ஆராய்ச்சிகள் நடைபெறும். எங்களது கொள்கை அனைவருக்கும் IIT மெட்ராஸ் என்பது தான். சங்கீதம் பற்றி தெரியாத சாதாரண மனிதனும் தெரிந்து கொள்ளும் வகையில் மற்றும் ரசிக்கும் விதத்தில் ஹம்சவர்தினிராகம் ரீதி கெளலா உள்ளிட்ட ராகத்தை கொண்டு சேர்த்தவர்தான் இளையராஜா. அதுதான் இளையராஜாவின் தனித்துவம். எவ்வாறு இசை கோர்ப்புகளை உருவாக்குவது, இசையமைக்க வேண்டும் மற்றும் அதிர்வுகளை அளவிடுவது என நிறைய பரிசோதனை முயற்சிகள் மேற்கொள்ள உள்ளோம்” என்று கூறினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய இளையராஜா, “சென்னை IIT வளாகத்தில் அமைய உள்ள ஆய்வு மையத்திலிருந்து 200 இளையராஜா வரவேண்டும் என்றும், இசை எனது மூச்சு” என்று தெரிவித்தார்.

Latest Slideshows

Leave a Reply