Jio And Airtel Recharge Plan Hike : தொலை தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டண அதிரடி உயர்வுகளை அறிவித்து வருகின்றன

Telecom Companies Are Announcing Hikes In Recharge Plans :

சமீபத்தில் 5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் மத்திய அரசு சார்பில் நடைபெற்றது. இந்த 5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் சுமார் 96 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு போகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 11 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு மட்டுமே போகும் விதத்தில் தொலைதொடர்பு நிறுவனங்கள் ஆனது இந்த அலைபேசி ஏலத்தில் பங்கேற்றன. இதன் நடுவே விரைவில் ரீசார்ஜ் கட்டணங்கள் உயர்த்தப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக தொடர்ந்து தகவல்கள் ஆனது பரவி வந்த வண்ணம் இருந்தது. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து தொலை தொடர்பு நிறுவனங்கள் ஒவ்வொன்றாக ரீசார்ஜ் கட்டண உயர்வுகளை (Jio And Airtel Recharge Plan Hike) அறிவித்து வருகின்றன. ரீசார்ஜ் கட்டண உயர்வுகள் 3.07.2024 முதல் அமுல்படுத்தப்படும் என்று தொலைதொடர்பு நிறுவனங்கள் ஆனது அறிவித்துள்ளன. ரீசார்ஜ் கட்டணங்களை தொலை தொடர்பு நிறுவனங்கள் உயர்த்திருப்பதால் பயனாளர்கள் கடும் அதிர்ச்சி மற்றும் கவலையில் ஆழ்ந்துள்ளனர். ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல் ஆகிய நிறுவனங்களைத் தொடர்ந்து வோடஃபோன் ஐடியா போன்ற  நிறுவனங்களின் கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளது.

Jio And Airtel Recharge Plan Hike :

தினசரி குறைந்தபட்சம் ஒரு ஜிபி டேட்டாவுடன் கூடிய மாத ரீசார்ஜ் கட்டணம் 209 ரூபாயிலிருந்து 249 ரூபாயாக ரிலையன்ஸ் ஜியோவில் உயர்த்தப்பட்டுள்ளது. தினசரி குறைந்தபட்சம் ஒரு ஜிபி டேட்டாவுடன் கூடிய மாத ரீசார்ஜ் கட்டணம் ஏர்டெலில் 265 ரூபாயிலிருந்து 299 ரூபாயாக (Jio And Airtel Recharge Plan Hike) உயர்த்தப்பட்டுள்ளது.

வோடபோன் ஐடியா நிறுவனம் :

தற்போது வோடபோன் ஐடியா நிறுவனம் தனது 28 நாட்களுக்கான குறைந்தபட்ச ரீசார்ஜ் கட்டணமான 179 ரூபாயிலிருந்து 20 ரூபாய் உயர்த்தி 199 ரூபாய் என உயர்த்தி உள்ளது. 459 ரூபாயிலிருந்து 509 ரூபாயாக 84 நாட்களுக்கான குறைந்தபட்ச ரீசார்ஜ் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேபோல் 1,799 ரூபாயிலிருந்து 1,999 ரூபாயாக 365 நாட்களுக்கான ரீசார்ஜ் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 19 ரூபாயிலிருந்து 22 ரூபாயாக தினசரி பயன்பாட்டிற்கான ஒரு ஜிபி டேட்டா ரீசார்ஜ் கட்டணம்  அதிகரிக்கப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு 1.5 ஜிபி மற்றும் 2 ஜிபி 84 நாட்களுக்கு பயன்பாட்டிற்கான கட்டணங்கள் 140 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. 100 ரூபாய் முதல் 110 ரூபாய் வரை 56 நாட்களுக்கான ரீசார்ஜ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் வோடபோன் ஐடியா நிறுவனத்தின் ஒரு மாதத்திற்கான போஸ்ட்பெய்ட் கட்டணங்களும் 50 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை பயனாளர்களின் திட்டத்திற்கு ஏற்ப உயர்த்தப்பட்டுள்ளது. ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும் ப்ரீ பெய்டு, போஸ்ட் பெய்டுக்கான ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தி அறிவித்துள்ளன. இந்த ரீசார்ஜ் கட்டண உயர்வுகள் ஆனது 3.07.2024 முதல் அமுல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

Latest Slideshows

Leave a Reply