தமிழகத்தின் Kalvi International Public School உலகின் மிகச் சிறந்த 10 பள்ளிகளில் ஒன்றாக தேர்வு பெற்றுள்ளது

Kalvi International Public School :

சிறார் குற்றங்களைக் குறைப்பதற்கும் மற்றும் சமூக ஈடுபாட்டை வளர்ப்பதற்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை Kalvi International Public School தொடர்ந்து வழங்கி வருகிறது. இந்த கல்வி இன்டர்நேஷனல் பப்ளிக் ஸ்கூல் ஆனது மதுரை – சோழவந்தான் கிராமத்தில் அமைந்துள்ளது. உலகின் மிகச் சிறந்த பத்துப் பள்ளிகளின் தேர்வுப் பட்டியலில் இந்த 2024 ஆம் ஆண்டில் Kalvi International Public School ஆனது இடம் பிடித்து குறிப்பிடத்தக்க சாதனையை எட்டியுள்ளது.

'D4' Educational Institute :

சமூக முன்னேற்றத்துக்கு சிறப்பான பங்களிப்பை வழங்கிய பள்ளிகளைத் தேர்வுசெய்து, பிரிட்டனைச் சோ்ந்த ‘D4’ Educational Institute ஆனது உலகின் சிறந்த பள்ளிகளுக்கான விருதை வழங்கி வருகிறது.

  • சுற்றுச்சூழலை மேம்படுத்த நடவடிக்கை
  • புதிய கண்டுபிடிப்பு
  • ஆரோக்கியமான வாழ்வுக்கு ஆதரவு
  • சமூக ஒன்றிணைப்பு
  • துன்பங்களை வெல்லும் வழி

ஆகிய 5 பிரிவுகளின்கீழ் சிறந்து விளங்கும் பள்ளிகளுக்கு பிரிட்டனைச் சோ்ந்த ‘D4’ Educational Institute ஆனது தேர்வுசெய்து விருதை வழங்கி வருகிறது. மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த 2 பள்ளிகள், மகாராஷ்டிரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் மற்றும் டெல்லி யூனியன் பிரதேசத்தில் இருந்து தலா ஒரு பள்ளி ஆகியவை பல்வேறு பிரிவுகளில் இடம்பிடித்துள்ளன.

உலகின் சிறந்த பள்ளிகளுக்கான விருதுப் பட்டியல் குறித்து 'D4' நிறுவனர் விகாஸ் போட்டா உரை :

உலகின் சிறந்த பள்ளிகளுக்கான விருதுப் பட்டியல் குறித்து ‘D4’ நிறுவனா் விகாஸ் போட்டா, “இந்தியாவைச் சோ்ந்த சில பள்ளிகள் புதிய கண்டுபிடிப்புகள் மூலம் சமூகத்தில் மாற்றங்களை நிகழ்த்தும் வகையில் செயல்பட்டுள்ளன. உலகின் சிறந்த பள்ளிகளுக்கான பரிந்துரையில்,

  • தமிழ்நாட்டின் மதுரையில் உள்ள கல்வி சர்வதேச பள்ளி – எளிய பின்புலத்தில் இருந்து கல்வி பயிலும் மாணவர்களை சாதனையாளர்களாக மாற்றும் முயற்சிகளை மேற்கொள்வதால் ‘சமூக ஒன்றிணைப்பு’ என்ற பிரிவின்கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
  • மத்திய பிரதேச மாநிலம், ஜபுவாவில் உள்ள முதல்வரின் மாதிரிப் பள்ளி – பழங்குடியின குழந்தைகளை வறுமையில் இருந்து மீட்கும் முன்னெடுப்புகளை மேற்கொண்டதற்காக ‘ஆரோக்கியமான வாழ்வுக்கு ஆதரவு’ என்ற பிரிவின்கீழ் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
  • ரத்லம் நகரில் உள்ள அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி – நகரங்களில் உள்ள குடிசைப் பகுதியில் வசிக்கும் பழங்குடியினத்தைச் சேர்ந்த சிறுமிகள் கல்வி கற்பதை ஊக்குவிப்பதால் ‘புதிய கண்டுபிடிப்பு’ என்ற பிரிவின்கீழ் இடம்பிடித்துள்ளது.
  • Delhi-யின் வசந்த் கஞ்சில் உள்ள ரேயன் சர்வதேச பள்ளி – குடிநீா் பிரச்சனைகள் மற்றும் சுற்றுச்சூழல் மாசுவை குறைப்பதற்கான கண்டுபிடிப்புகளை மேற்கொண்டதால் ‘சுற்றுச்சூழலை மேம்படுத்த நடவடிக்கை’ என்ற பிரிவில் இடம்பெற்றுள்ளது.
  • மும்பையில் உள்ள எல்.கே.வாக்ஜி சர்வதேச பள்ளி – துரித உணவுகளை தவிா்த்து நல்ல உணவுமுறையை பின்பற்றி வளமான வாழ்வை வலியுறுத்தும் முன்னெடுப்பை மேற்கொண்டதற்காக இடம்பிடித்துள்ளது.

முதல் மூன்று இறுதிப் போட்டியாளர்கள் Accenture, American Express மற்றும் Lemann Foundation ஆகியவற்றுடன் இணைந்து தோ்வுசெய்து செப்டம்பரில் அறிவிக்கப்படும் மற்றும் வெற்றியாளர்கள் நவம்பரில் அறிவிக்கப்படுவார்கள். ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு வெற்றியாளர் தோ்ந்தெடுக்கப்படுவர். பின்னர் பரிசுத்தொகை 50,000 அமெரிக்க டாலா் (ரூ.41.76 லட்சம்) ஆனது பிரித்துக் கொடுக்கப்படும்” என்று கூறினார்.

Latest Slideshows

Leave a Reply