Kamal Haasan Speech At Loyola College : லயோலா கல்லூரியில் கமல்ஹாசனின் பேச்சு

சென்னை லயோலா கல்லூரியின் ஆண்டு விழாவில் நடிகர் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு அறிவுரைகளை (Kamal Haasan Speech At Loyola College) வழங்கியுள்ளார்.

சென்னை லயோலா கல்லூரியில் ஆண்டு விழா தற்போது நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் கலந்து கொண்டார். அப்போது விழாவில் மாணவர் ஒருவர் கமலிடம் இன்னொரு கமல்ஹாசனை பார்க்கலாமா என்று கேட்டார். இதற்கு பதிலளித்த கமல்ஹாசன், இதை அவர் ஒரு பாராட்டுக்காக சொல்வதாக நான் சந்தேகப்படுகிறேன். ஏன்னா இப்படி ஒருத்தர் இருக்க முடியாது என்பது போல சொல்றீங்க. அப்படி இருக்க கூடாது என்பது தான் என்னுடைய கற்பனையே. உடனே இன்னொரு கமலைப் பார்க்க வேண்டுமென்றால் பெல்மார்ட் என்ற பெயரை கமல் என்று மாற்றினால் இரண்டு பேர் இருப்பார்கள். சும்மா ஜோக் என்றால், ஒரு கண்ணாடியைக் கொண்டு வந்து வையுங்கள். இங்க ஒரு கமல் தெரியும். அங்கே உங்களுக்குத் ஒரு கமல் தெரியும். நான் என்ன சொல்கிறேன் என்றால், பெல்மாண்ட் மாதிரி இன்னொருத்தர் வருவாரா என்று நீங்கள் கேட்பது போல் நீங்க (மாணவர்) ஆயிடுங்க அவ்வளவு தான். இதை பார்த்து பொறாமை படாதீங்க. இது வெறும் கைகுலுக்கல்தான். இந்த உடம்பை வைத்து என் குற்றங்களை கண்டுபிடிக்கலாம் அவ்வளவு தான் என்று கூறினார்.

Kamal Haasan Speech At Loyola College

சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்ற ஆண்டு விழாவில், பேசிய கமல்ஹாசன் (Kamal Haasan Speech At Loyola College) மாணவர்களிடையே நேரத்தை கையாள்வது, வாழ்க்கையில் பணத்தின் முக்கியத்துவம், மன அழுத்தம் போன்ற பல்வேறு சந்தேகங்களை விளக்கினார். அவரது வருகைக்குப் பிறகு, மாணவர்கள் மிகவும் உற்சாகமாக கேள்விகளைக் கேட்டனர். எல்லா கேள்விகளுக்கும் பொறுமையாகவும் தெளிவாகவும் அனைவருக்கும் புரியும் வகையில் பதிலித்துள்ளார், தற்போது அவற்றை காணலாம்.

உன்னை தோற்கடிக்க முடியாது

உன்னிடம் ஒரு தனித்துவமான அற்புத டிஎன்ஏ இருக்கிறது. அதை பற்றி தசாவதாரம் படத்தில் சொல்லியிருப்பேன். எல்லாருமே உலக நாயகன் தான் என்று சொல்லியிருப்பேன். ஏனெனில் 40 லட்சம் விந்துகளின் ஒரு விந்துவில் வந்தவன் நீ. உன்னோடைய முதல் தோற்றத்திலே வெற்றி வீரனாக வந்திருக்கிறார். உன்னை தோல்வியை சந்திக்க வைப்பது உன்னுடைய சோம்பேறித்தனத்தால் மட்டுமே உன்னை தோல்வியடையச் செய்யும், ஆனால் முதலில் உனக்குள் இருப்பது போல் நம்பிக்கையும் வேகமும் இருந்தால் எதுவும் உன்னைத் தோற்கடிக்காது என்று கமல்ஹாசன் கூறினார்.

நேரத்தை கையாள்வது எப்படி

கமல்ஹாசன் தனது மாணவர்களுக்கு நேரத்தை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து கூறியுள்ளார். அவர் கூறியது, ‘நேரம் ஒரு சொத்து. அதை நம் வாழ்வில் சரியாகப் பயன்படுத்த வேண்டும். ஒரு நாளில் 24 மணிநேரம் மட்டுமே உள்ளது. அதை பயன்படுத்தி நமது இலக்கை அடைய வேண்டும்” என்று அவர் கூறினார்.

பணம் எவ்வளவு முக்கியம்

இதற்கிடையில் கமல்ஹாசனிடம் மாணவி ஒருவர் ‘‘உங்கள் வாழ்க்கைக்கு பணம் எவ்வளவு முக்கியம் சார்?’’ என்று கேட்டார். அதற்கு பதிலளித்த கமல்ஹாசன், “என் வாழ்க்கையில், 15 முதல் 16 வயது வரை, கையில் பணம் இருந்ததில்லை. அது இல்லாமல், என் அனுபவத்தில் 6 மாதங்கள் அட்ஜஸ்ட் செய்துள்ளேன். ஆனால், 40 வினாடிகள் அல்லது ஒரு நிமிடம் மூச்சி இல்லாமல் தாங்க முடியும். தண்ணீர் இல்லாமல் ஆறு, ஏழு நாட்கள் இருக்க முடியும். சோறு இல்லாமல் 10 நாட்கள் நீடிக்க முடியும். அதை எல்லாம் வாங்க பணம் ஒரு கருவி அவ்வளவு தான். ஆண்களுக்கு புரியும்படி சொல்ல வேண்டும் என்றால், தாடி வைக்க வேண்டும் அல்லது ஷேவ் பண்ணலாமா என்பது உங்கள் விருப்பம். அதை போய் பிளேடு கிட்ட கேட்டு கிட்டு இருக்க முடியாது. இது வெறும் கருவிதான். இதையெல்லாம் பிளேடுக்கு சொல்லத் தெரியது. அவ்வளவு தான் பணமும். அது பேசா மடந்தை.. அவ்வளவு தான்.. என்று கூறினார்.

மன அழுத்தம்

மன அழுத்தம் என்பது இன்றைய காலத்தில் பெரும் பிரச்சனையாக உள்ளது. குறிப்பாக, இளைஞர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். இந்த பிரச்சனையை எப்படி சமாளிப்பது என்று கமல்ஹாசனிடம் மாணவர்கள் கேட்டபோது, ​​தனது சொந்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். அதாவது “நானும் தற்கொலை செய்து கொள்ள நினைத்தேன். ஆனால் வெற்றிக்காக காத்திருக்க வேண்டும். அவசரப்பட வேண்டாம். நம்முடன் எப்போதும் இருள் இருக்கும் என்று சொல்ல முடியாது. வெயில் வந்தே தீரும் அதுவரை பொறுமையாக இருங்கள். இரவு நேரத்தில் இருட்டு பயமாக இருக்கிறது, அதனை பிரகாசமாக கனவு காணுங்கள் என்று அவர் கூறினார்.

தற்கொலை தடுப்பு

தற்கொலைகளை தடுக்க மாணவர்களுக்கு அறிவுரைகளையும் கமல்ஹாசன் வழங்கினார். “தற்கொலை ஒரு தீர்வல்ல, இது ஒரு பிரச்சனை. நீங்கள் மன அழுத்தத்தில் இருந்தால், நம்பிக்கைக்குரிய நபரை அணுகுங்கள். உங்கள் பிரச்சினைகளை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். அவர்கள் உங்களுக்கு உதவ இருக்கிறார்கள்” என்று அவர் கூறினார். கமல்ஹாசன் தற்போது 4 படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். தொடர்ந்து, தனது திரையுலகப் பயணம் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கும் போதும், கல்லூரி விழாக்களில் கலந்து கொண்டு மாணவர்களுக்காகப் அறிவுரைகளை வழங்கி வருகிறார். இலக்கிய விழாக்களிலும் கலந்து கொள்கிறார். தனது நேர நிர்வாகத்தை சரியாக நிர்வகித்து, இந்த வயதிலும் ஓய்வின்றி உழைக்கிறார்.

Latest Slideshows

Leave a Reply