LGM Movie Review : தோனியின் முதல் தயாரிப்பு | எல்ஜிஎம் திரைப்படத்தின் விமர்சனம்...

எம்எஸ் தோனி கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை படைத்து வெற்றிகரமான கேப்டனாக திகழ்ந்துள்ளார். இவர் தற்போது சினிமாவில் காலடி எடுத்து வைத்துள்ளார். அதுவும் ஒரு தயாரிப்பாளராக, அந்த வகையில் அவர் முதன் முதலில் தயாரித்துள்ள லெட்ஸ் கேட் மேரீடு (எல்ஜிஎம்) ஆகும். இந்த படத்தை இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி இயக்கியுள்ளார். இப்படத்தில் ஹரிஷ் கல்யாண் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக இவானா நடித்திருக்கிறார்.

எல்ஜிஎம் திரைப்படத்தில் யோகி பாபு, நதியா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. தோனியின் முதல் தயாரிப்பான இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், நேற்று (ஜூலை 28) முதல் படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இப்படத்தின் முதல் காட்சியே கண்டுகளித்த ரசிகர்கள் தங்களது கருத்துக்களை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். அதன் தொகுப்பை இப்போது காணலாம்.

LGM Movie Review - கதை சுருக்கம் :

இந்தப் படத்தின் கதையை ஒருபக்கம் நினைத்தால் இதெல்லாம் எங்க நடக்கும் என நினைக்க வைக்கும். மறுபுறம், இப்படியெல்லாம் நடந்தா நல்லாருக்கும் என ஏங்க வைக்கும் அளவுக்கு லாஜிக் உள்ளது. ஆனால் திரைக்கதையில் அது இல்லவே இல்லை.

இரண்டு வருட டேட்டிங்கிற்குப் பிறகு, ஹரிஷ் கல்யாணும் இவானாவும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அப்பா இல்லாமல் கல்யாணை தனியாக வளர்க்கும் ஹரிஷின் அம்மா நதியாவோ எதிர்ப்பே இல்லாமல் சம்மதிக்கிறார். ஆனால் திருமணம் சம்பந்தம் பேச போன இடத்தில, ஒரு பிரச்சனை ஏற்படுகிறது. திருமணத்திற்கு பிறகு மாமியாருடன் வாழ்வது சிக்கல் என இவானா தெரிவித்துள்ளார். இதனால் திருமணம் பற்றிய பேச்சு நின்று விடுகிறது. இருப்பினும், ஹரிஷ் கல்யானை விட மனசில்லாமல் நதியாவை பற்றி புரிந்து கொள்ள ஒரு ட்ரிப் ஒன்றை இவானா பிளான் செய்கிறாள் அதை ஹரிஷ் கல்யாண் செயல்படுத்துகிறார். இந்தப் ட்ரிப் ஒர்க் அவுட் ஆனதா? மாமியார் நதியாவுடன் மருமகள் இவானா சேர்ந்தாரா என்பதே இப்படத்தின் மீதி கதையாகும்.

நடிகர்களின் நடிப்பு :

தங்களால் இயன்ற அளவுக்கு நடித்திருந்தாலும், படத்தில் யாருடைய நடிப்பையும் முழுமையாக வெளிப்படுத்தவில்லை என்றே தோன்றுகிறது. படத்தின் முக்கால்வாசி இவானா மற்றும் நதியாவைச் சுற்றியே சுழல்வதால், இரண்டாம் பாதியில் ஹரிஷ் கல்யாண் சிறப்புத் தோற்றத்தில் வருவது போல நினைக்க வைக்கிறது. இவானா இன்னும் 2 படங்களில் நடித்தாலும் “லவ் டுடே” படத்தின் நிகிதாவின் கேரக்டர் தான் நம் கண் முன்னே வருகிறது. முதல் பாதியில் வயதான தாயாகவும், இரண்டாம் பாதியில் இளம் தாயாகவும் தோன்றுகிறார் நதியா. அதேபோல் யோகிபாபுவின் காமெடி நன்றாகவே வேலை செய்துள்ளது. மேலும் இரண்டாம் பாதியில் அமைந்த திரைக்கதை கதையின் போக்கையே முற்றிலும் மாற்றி ரசிகர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. காட்சிகளில் கொஞ்சம் கூட அழுத்தம் இல்லாமல் இருக்கிறது. காதல், சென்டிமென்ட் போன்றவை ரசிகர்களை திருப்திபடுத்தவில்லை என்றே தோன்றுகிறது.

Latest Slideshows

Leave a Reply