Padma Vibhushan Award To Padma Subrahmanyam : பத்மா சுப்ரமணியத்திற்கு பத்ம விபூஷன் விருது

Padma Vibhushan Award To Padma Subrahmanyam:

தமிழகத்தைச் சோ்ந்த பரதநாட்டியக் கலைஞா் பத்மா சுப்ரமணியத்திற்கு 26/01/2024 குடியரசு தினத்தன்று பத்ம விபூஷன் விருது (Padma Vibhushan Award To Padma Subrahmanyam) வழங்கப்பட்டுள்ளது. இவர் பரதநாட்டிய கலைஞா், நடன அமைப்பாளர், இசையமைப்பாளர், எழுத்தாளர், ஆசிரியர் என பல துறைகளிலும் தனது சிறந்த பங்களிப்பை அளித்து வருகிறார். பரதநாட்டிய கலையில் சிறப்பான ஆய்வுகள் செய்து முனைவர் பட்டம் (Ph.d In Bhartha Natiyam) பெற்றுள்ளார். இவர் இந்தியா மட்டுமல்லாமல் உலக அளவில் அனைத்து நாடுகளிலும் மிகப் பிரபலமானவர் ஆவார். சென்னையைச் சோ்ந்த பரதநாட்டியக் கலைஞா் பத்மா சுப்ரமணியம் (80) 1943-ஆம் ஆண்டு பிப்ரவரி 4-ல் K.சுப்ரமணியம் மற்றும் S.D.சுப்புலட்சுமி அவர்களுக்கு மகளாக பிறந்தார். இவரது தந்தை K.சுப்ரமணியம், தாய் S.D.சுப்புலட்சுமி மற்றும் இவரது சகோதரர் S.V.Ramanan ஆகியோர் தமிழ்த் திரைப்பட உலகைச் சேர்ந்த பிரபலமானவர்கள் ஆவர்.

பத்மா சுப்ரமணியம் சிறுவயதிலேயே பரதநாட்டியம் பயின்றார். வழுவூர் ராமைய்யா பிள்ளை மற்றும் மயிலாப்பூர் கௌரி அம்மா ஆகியோரிடம் பரதநாட்டியத்தில் பயிற்சி பெற்றார். பி.வி.லக்ஷ்மணனிடம் பத்மா சுப்ரமணியம் கர்நாடக இசை கற்றார். பத்மா சுப்ரமணியம் பரதம் குறித்து பல புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஆய்வுக் கட்டுரைகள் பலவும் எழுதியுள்ளார்.மேலும், பத்மா சுப்ரமணியம் அவர்கள் கல்வி மற்றும் கலாச்சாரத்திற்கான இந்தியத் துணைக்கண்டக் குழுவில் (Indo-Sub-Commision) அதிகாரப்பூர்வமற்ற (Non-Official) உறுப்பினராகவும் சிறந்த பணியாற்றி இருந்துள்ளார். பத்மா சுப்ரமணியம் அவர்கள் இசையில் இளங்கலையும், மரபிசையியலில் (Ethno-Musicology) முதுகலைப் பட்டமும், மற்றும் நாட்டியத்தில் ஆராய்ச்சியும்  செய்து முனைவர் பட்டங்களை பெற்றுள்ளார். இந்திய நடனம் மற்றும் சிற்பக்கலையில் கரணங்கள் பற்றி ஆய்ந்து நடனம் மற்றும் நாட்டிய சாஸ்திரம் போன்ற பல நூல்களை எழுதியுள்ளார்.

தனது ஆய்வறிக்கைக்காக அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இருந்து பாராட்டு மற்றும் பட்டம் பெற்றுள்ளார். மதிப்புமிக்க தேசிய மற்றும் சர்வதேச நடன விழாக்களில் பங்கேற்றுள்ளார். தற்போது பத்மா சுப்ரமணியம் அவர்கள் தனது தந்தை கே.சுப்ரமணியத்தால் நிறுவப்பட்ட கலைகளின் முன்னணி அமைப்பான நிருத்யோதயாவின் தலைவராகவும் மற்றும் சென்னைக்கு அருகில் அமைந்துள்ள ஆசிய கலாச்சாரத்திற்கான பரதமுனி இளங்கோ அறக்கட்டளையின் நிறுவனராகவும் உள்ளார். டாக்டர் பத்மா சுப்ரமணியம் அவர்கள் பத்மஸ்ரீ, பத்ம பூஷன் (2003), சங்கீத நாடக அகாடமி விருது (1983), கலைமாமணி மற்றும் காளிதாஸ் சம்மான் உள்ளிட்ட பல விருதுகளை வென்றுள்ளார். இந்திய நடனத்திற்கு டாக்டர் பத்மா சுப்ரமணியம் ஆற்றிய பங்களிப்பிற்காக சங்கீத நாடக அகாடமியின் உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Latest Slideshows

Leave a Reply