Skanda Movie Trailer : ஸ்கந்தா படத்தின் டிரைலர் வெளியீடு ...

ராம் பொதினேனி நடிப்பில் போயபதி ஸ்ரீனிவாஸ் எழுதி இயக்கியுள்ள ஸ்கந்தா படத்தின் டிரைலர் (Skanda Movie Trailer) வெளியாகியுள்ளது.

ராம் பொதினேனியின் நடித்துள்ள ஸ்கந்தா திரைப்படம் வரும் செப்டம்பர் 28 ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தில் ஸ்ரீலீலா மற்றும் சாயி மஞ்ச்ரேக்கர் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் பிரின்ஸ் செசில், ராஜா, மேகா ஸ்ரீகாந்த், கௌதமி மற்றும் இந்திரஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்க்ரீன்ஸ் பேனரின் கீழ் ஸ்ரீனிவாசா சித்தூரி இப்படத்தை தயாரிக்கிறார், பவன் குமார் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் சவுத் வழங்கும், இப்படத்திற்கு தம்மிராஜு படத்தொகுப்பு செய்துள்ளார். சந்தோஷ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்க இசைமைப்பாளர் தமன் இசைமைத்துள்ளார்.

படத்தின் வெளியீட்டிற்கு முன்னதாக, தயாரிப்பாளர்கள் வெளியீட்டு டிரைலர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது படத்தின் மற்றோரு டிரைலர் (Skanda Movie Trailer) வெளியாகியுள்ளது. இயக்குனர் போயபதி ஸ்ரீனுவின் திரைப்படங்கள் என்றாலே மாஸ் மற்றும் ஆக்ஷன் அதிகமாக இருக்கும். கூடவே நல்ல மனித உணர்வுகளையும் கொண்டிருக்கும். அதேபோல, ராம் பொதினேனியுடன் அவர் இணைந்துள்ள ‘ஸ்கந்தா’ படமும் இதயத்தைத் தொடும் சில உணர்ச்சிகளைக் கொண்டிருக்கும். குடும்ப நாடகம் படத்தின் முக்கிய பலங்களில் ஒன்றாகும். முதல் டிரைலர் மூலம் படத்தின் ஆக்‌ஷன் பக்கத்தை காட்டிய தயாரிப்பாளர்கள் தற்போது வெளியாகியுள்ள டிரைலர் மூலம் பல அம்சங்களையும் காட்டியுள்ளனர்.

Skanda Movie Trailer :

செய்யாத குற்றத்திற்காக சிறையில் இருக்கும் ஒருவரின் நற்குணத்தைப் பற்றி உயர்வாகப் பேசும் குரல்வழியுடன் டிரைலர் (Skanda Movie Trailer) தொடங்குகிறது. இந்தப் படம் ஆன்மீகத்தைப் பற்றியும் பேசுகிறது என்பதை அந்த உரையாடல் சுட்டிக்காட்டுகிறது. ராம் டைனமிக் என்ட்ரி செய்கிறார் மேலும் வீடியோவில் ஆக்சன் ஸ்டண்ட் காட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இருப்பினும், ராமின் முரட்டுத்தனமான தோற்றம் மற்றும் சக்திவாய்ந்த உரையாடல் கதாபாத்திரத்தின் தன்மையைப் பற்றி பேசுகிறது. டிரைலரில் தமனின் இசை அட்டகாசமான ஸ்கோர் காட்சிகளை சரியாக பூர்த்தி செய்கிறது. ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரித்துள்ள இப்படத்தின் தயாரிப்பு மதிப்பு கம்பீரமாக உள்ளது. இந்த டிரைலர் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

Latest Slideshows

Leave a Reply