TN's First Floating Ship Restaurant - தமிழகத்தின் முதல் மிதக்கும் கப்பல் உணவகம்

TN's First Floating Ship Restaurant :

சென்னை முட்டுக்காட்டில் தமிழகத்தின் முதல் மிதக்கும் கப்பல் உணவகம் (TN’s First Floating Ship Restaurant) விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வர உள்ளது. தமிழகத்தின் முதல் மிதக்கும் கப்பல் உணவகம் என்ற பெருமையை இந்த கப்பல் பெறும். தமிழ்நாட்டில் முதல் முறையாக சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள முட்டுக்காட்டில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் மூலம் படகு இல்லம் ஆனது செயல்பட்டு வருகிறது.

பொதுமக்கள் சாகச பயணம் மேற்கொள்ளும் வகையில் இந்தப் படகு இல்லத்தில் மிதவைப் படகுகள், இயந்திரப் படகுகள் மற்றும் வேகமான இயந்திரப் படகுகள் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது கோடை விடுமுறை என்பதால் முட்டுக்காட்டிற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள். கூட்டம் அலைமோதுகிறது. சென்னை ECR சாலையில் அமைந்துள்ள முட்டுக்காட்டில் ரூ.5 கோடி மதிப்பில் அமைச்சர் ராமச்சந்திரன் 2023 மார்ச் மாதம் 23ம் தேதி தொடங்கி வைத்த மிதவை படகு உணவகம் (TN’s First Floating Ship Restaurant) அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ரூ.5 கோடியில் தயாராகும் பிரம்மாண்ட 2 அடுக்கு மிதக்கும் கப்பல் உணவகம் :

சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் கோவளம் அடுத்த முட்டுக்காட்டில் ரூ.5 கோடியில் பிரம்மாண்ட மிதக்கும் உணவக கப்பலின் கட்டுமான பணியை கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கி வைத்தார். இந்த மிதக்கும் உணவக கப்பல் ஆனது 125 அடி நீளம் மற்றும் 25 அடி அகலத்தில் இரண்டு அடுக்குகளைக் கொண்டு கட்டப்படுகிறது. இதில் இரு அடுக்குகள் உள்ளன. மிதவை உணவக கப்பல் உணவகத்தின் தரைத்தளம் முழுவதும் ஏசி வசதி செய்யப்பட்டுள்ளது. இதன் முதல் தளம் ஆனது திறந்தவெளி தளமாக இருக்கும்.

முதல் தளத்தில் அமர்வதற்கான இருக்கை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. முதல் தளத்தில் அமர்ந்து உணவு சாப்பிட்டுக் கொண்டே இயற்கை காட்சிகளை கண்டு களிக்கும்படி வடிவமைக்கப்படுகிறது. சமையலறை, சேமிப்பு அறை, கழிவு அறை மற்றும் இயந்திர அறை உள்ளிட்டவையும் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த மிதவை உணவக கப்பல் 60 குதிரை சக்தி திறனுடைய இயந்திரம் மூலம் இயக்கப்படும் வகையில் வடிவமைக்கப்படுகிறது. இந்த மிதவை உணவக கப்பல் திட்டம் (TN’s First Floating Ship Restaurant) ஆனது தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், கொச்சியை சேர்ந்த கிராண்ட்யூனர் மரைன் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் மூலமாக தனியார் மற்றும் பொது பங்களிப்பு திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கப்பல் உணவகம் எப்போது பயன்பாட்டுக்கு வரும் :

இந்த கப்பல் உணவகத்தின் பெரும்பாலான பணிகள் நடந்து முடிந்துள்ள நிலையில் மீதமுள்ள பணிகளும் விரைந்து முடிக்கப்படுகிறது. தமிழகத்தின் பல பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளை இங்கு ஈர்ப்பதற்காக கவர்ச்சிகரமான விளம்பரங்கள், பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த கப்பல் உணவகத்தில் சாப்பிடுவதற்காக மற்றும் பிற பயன்பாட்டுக்கு எவ்வளவு கட்டணம் நிர்ணயிக்கலாம் என கட்டணங்கள் நிர்ணயிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த கப்பல் உணவகம் (TN’s First Floating Ship Restaurant) ஆனது எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர். இந்த கப்பல் உணவகம் ஆனது இன்னும் 2 மாதங்களில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என சொல்லப்படுகின்ற நிலையில் முட்டுக்காட்டுக்கு செல்ல இப்பவே மக்கள் ப்ளான் பண்ணி வருகின்றனர்.

Latest Slideshows

Leave a Reply