Vijay Announced The Political Party Name : நடிகர் விஜய் தான் தொடங்கியிருக்கும் கட்சியின் பெயரை அறிவித்திருக்கிறார்

நடிகர் விஜய் தான் தொடங்கியிருக்கும் புதிய கட்சியின் பெயரை அதிகாரப்பூர்வமாக (Vijay Announced The Political Party Name) அறிவித்திருக்கிறார். இதற்கு “தமிழக வெற்றி கழகம்” என பெயர் வைக்கப்பட்டு உள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தில் இந்த பெயர் முறையாக பதிவு செய்யப்பட்டு (Vijay Announced The Political Party Name) உள்ளது. இது தொடர்பாக விஜய் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ‘விஜய் மக்கள் இயக்கம்’ பல வருடங்களாக தன்னால் இயன்ற வரையில் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களையும், சமூக சேவைகளையும், நிவாரண உதவிகளையும் செய்துவருவது நீங்கள் அனைவரும் அறிந்ததே.

இருப்பினும் முழுமையாக சமூக, பொருளாதாரம் மற்றும் அரசியலில் சீர்திருத்தங்களை கொண்டுவர ஒரு தன்னார்வ அமைப்பினால் மட்டும் இயலாத காரியம் அதற்கு அரசியல் அதிகாரம் தேவைப்படுகிறது. தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் பற்றி நீங்கள் அனைவரும் அறிந்ததே நிர்வாகத்தில் பல்வேறு சீர்கேடுகள் மற்றும் “ஊழல் மலிந்த அரசியல் கலாச்சாரம்” ஒருபுறம் இருக்க மறுபுறம் நம் மக்களை சாதி மத பேதங்கள் வாயிலாக பிளவுபடுத்த துடிக்கும் “பிளவுவாத அரசியல் கலாச்சாரம்” என்று இருபுறமும் நம் ஒற்றுமைக்கும் முன்னேற்றத்திற்குமான முட்டுக்கட்டைகள் சமுதாயத்தில் நிறைந்துள்ளன. ஒரு தன்னலமற்ற வெளிப்படையான, சாதிமத பேதமற்ற, தொலைநோக்கு சிந்தனை உடைய லஞ்ச- ஊழலற்ற திறமையான நிர்வாகத்திற்கு வழிவகுக்ககூடிய அடிப்படை அரசியல் மாற்றத்திற்காக  தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை.

அரசியல் மாற்றம் :

இத்தகைய அரசியல் நம் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு தமிழ் நாட்டின் மாநில உரிமைகள் சார்ந்து இந்த மண்ணுக்கேற்ற “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் (பிறப்பால் அனைவரும் சமம்) என்கிற சமத்துவ கொள்கைபற்று உடையதாகவும் இருக்க வேண்டும். எல்லாமும் எல்லாருக்கும் கொடுத்த தமிழ் மக்களுக்கும் தமிழ் சமுதாயத்திற்கும் என்னால் முடிந்த வரையில் இன்னும் முழுமையாக உதவ வேண்டும் என்பதே என்னுடய நீண்ட கால எண்ணம் மற்றும் விருப்பமாகும். “எண்ணித் துணிக கருமம்” என்ற  வள்ளுவன் வாக்கு அதன்படியே “தமிழக வெற்றி கழகம்” என்கிற பெயரில் (Vijay Announced The Political Party Name) எமது தலைமையில் அரசியல் கட்சி துவங்கப்பட்டு இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய  கட்சியின் சார்பில் இன்று விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டு உள்ளார்.

Vijay Announced The Political Party Name | பெயர் உருவானது எப்படி?

விஜய் சார்பாக முதலில் விஜய் மக்கள் இயக்கம் ‘விஜய் மக்கள் கட்சி’ என பெயர் மாற்றப்படும் திட்டத்தில் இருந்தது. ஆனால் அந்த பெயர் சரியாக இல்லை என்பதால் ‘தமிழக மக்கள் கட்சி’ என்று உருவாக்கும் திட்டம் இருந்தது. தமிழக மக்கள் கட்சிதான் என கடந்த வாரம் வரை இருந்தது. இந்த பெயர் கூட இணையத்தில் கசிந்து வைரலானது. பெயர் கசிந்த காரணத்தால் விஜய் அப்போதே அப்செட் ஆனதாக கூறப்பட்டது. ஆனால்  இந்த பெயரை கடைசியில் வேண்டாம் என்று நீக்கி உள்ளனர். அதற்கு காரணம்  அதன் ஆங்கில சுருக்கம் தமிழக மக்கள் கட்சி என்பதை சுருக்கினால் (TMK) என்று வரும்.

அப்படி வந்தால் அது திராவிட முன்னேற்ற கழகம் (DMK) என்பதை போலவே உள்ளது. கிராமங்களில் மக்களுக்கு வேறுபடுத்தி காட்டுவது கடினம். இதன் காரணமாகவே தமிழக வெற்றி கழகம் என்ற பெயர் தேர்வு செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் வெற்றிபெறும், தமிழ்நாட்டை வெற்றிபெற வைக்கும் கட்சி என்பதை உணர்த்தும் விதமாக தமிழக வெற்றி கழகம் (Vijay Announced The Political Party Name) என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.

Latest Slideshows

Leave a Reply