Yogi Babu's Vaanavan Movie Shooting Completed : யோகி பாபு நடிக்கும் 'வானவன்' படத்தின் படப்பிடிப்பு நிறைவு

Yogi Babu's Vaanavan Movie Shooting Completed :

நடிகர் யோகி பாபு குழந்தைகள் பட்டாளத்துடன் இணைந்து நடித்துள்ள ‘வானவன்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து, இறுதிக்கட்டப் பணிகளை படக்குழு (Yogi Babu’s Vaanavan Movie Shooting Completed) தொடங்கியுள்ளது. ‘ஈடன் ஃபிளிக்ஸ்’ குழுவினர் தயாரிப்பில், இயக்குனர் சஜின் கே சுரேந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள வானவன் படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது. வானவன் படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளை படக்குழு தொடங்கியுள்ளது. இந்த படத்தில் யோகி பாபுவுடன் ரமேஷ் திலக், காளி வெங்கட், லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி, மாஸ்டர் சக்தி ரித்விக், ‘லவ் டுடே’ பிராத்தனா நாதன் மற்றும் கல்கி ராஜா ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். மேலும் யோகி பாபுவின் காமெடியுடன் ஃபீல் குட், ஃபேண்டஸி ஜானரில், குழந்தைகள் மற்றும் குடும்ப பார்வையாளர்கள் கொண்டாடும் வகையில் அசத்தலான நகைச்சுவையுடன் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

வானவன் படத்தின் மூலம் கேரளாவைச் சேர்ந்த சஜின் கே சுரேந்திரன் இயக்குனராக அறிமுகமாகிறார். இவர் இதற்கு முன்பாக மாஸ்குரேட் என்ற மலையாளத்தின் முதல் வெப் சீரிஸை இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு பவி கே பவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். அறிமுக எழுத்தாளர் ஹரிஹரன் கதை எழுத, ஃபின் ஜார்ஜ் படத்தொகுப்பு செய்துள்ளார். இப்படத்திற்காக இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா மற்றும் பாடலாசிரியர் கார்த்திக் நேதா வெற்றிக்கூட்டணி இப்படத்தில் இணைந்துள்ளனர். இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் மதுரை மற்றும் சென்னையை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளன. படத்தை EDENFLICKS புரொடக்ஷன்ஸ் பேனரின் கீழ் அமெரிக்க தொழிலதிபர் தாமஸ் ரென்னி ஜார்ஜ் தயாரித்துள்ளார். கடந்த ஆண்டு சாய் பல்லவி நடித்த கார்கி படத்தை தாமஸ் இணைந்து தயாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லர் பற்றிய அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Latest Slideshows

Leave a Reply