Dhruva Natchathiram Release Date: விக்ரமின் "துருவ நட்சத்திரம்" படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
Dhruva Natchathiram Release Date: கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள துருவ நட்சத்திரம் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
இயக்குனர் கவுதம் மேனன் இயக்கும் ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படம் நவம்பர் 24ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. படப்பிடிப்பு முடிந்து நீண்ட நாட்களாக வெளிவராமல் இருந்த இப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இயக்குனர் கவுதம் மேனன் ஒரு சிறிய வீடியோவை வெளியிட்டுள்ளார். இதில் பல்வேறு அதிரடி காட்சிகள் இடம்பெற்றுள்ளன. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான கௌதம் மேனன் இயக்கத்தில், 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட படம் ‘துருவ நட்சத்திரம்’ ஆகும்.
முதலில் சூர்யா கதையில் நடிக்கத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அவர் விலகியதைத் தொடர்ந்து விக்ரம் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், சிம்ரன், திவ்யதர்ஷினி, ரிது வர்மா, ப்ரித்விராஜ் சுகுமாறன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
ஸ்பை த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் கடந்த 2018-ம் ஆண்டு வெளியாகியது. ஹாலிவுட் பாணி மேக்கிங்கால் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து “ஒரு மனம்” பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. ஆனால், பல்வேறு காரணங்களால் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. 4 ஆண்டுகள் ஆகியும் படத்தின் அப்டேட் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
இந்நிலையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து தான் துருவ நட்சத்திரம் படம் தொடர்பான பல்வேறு தகவல்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளிவர ஆரம்பித்தன. கௌதம் மேனனின் பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு, விக்ரம் தனது டப்பிங் பணிகளை முடித்துள்ளார். மற்ற பணிகளும் வேகமாக நடக்கும் வகையில் பின்னணி இசை சேர்க்கும் பணி தொடங்கிவிட்டதாகவும் ஹாரிஸ் ஜெயராஜ் அறிவித்துள்ளார். செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் துருவ நட்சத்திரத்தை வெளியிடுவதாக கூறப்பட்ட நிலையில், பல்வேறு காரணங்களால் அந்த வாய்ப்பும் கடைசி நிமிடத்தில் கைநழுவி போனது.
Dhruva Natchathiram Release Date அறிவிப்பு
Dhruva Natchathiram Release Date: பொன்னியின் செல்வன் படங்களுக்குப் பிறகு விக்ரம் நடிப்பில் எந்தப் படமும் வெளியாகவில்லை. தற்போது நடித்து வரும் தங்கலான் படம் VFX வேலைகளால் அடுத்த ஆண்டு வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த இடைவெளியை நிரப்ப ‘துருவ நட்சத்திரம்’ படக்குழுவுடன் இணைந்து அதை வெளியிடும் பணியில் விகாரம் ஈடுபட்டார். அதன் பலனாகவே ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படம் வரும் நவம்பர் 24ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் வெற்றி பெற்றால் இரண்டாம் பாகத்திலும் நடிக்க தயார் என விக்ரம் கூறியுள்ளதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 7 வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட கதை என்றாலும் இன்னும் புதுசாக இருப்பது படத்தின் பலம் என ‘துருவ நட்சத்திரம்’ படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.
Latest Slideshows
-
Top 5 Business Man Of Tamil Nadu : தமிழ்நாட்டின் Top 5 தொழில் அதிபர்கள்
-
OnePlus Nord 4 : ஒன்பிளஸ் நார்ட் 4 ஸ்மார்ட்ஃபோன் வெளியீட்டிற்கு முன்பே கசிந்த தகவல்
-
Major Investments By South Korean Companies : தென் கொரியாவின் முக்கிய நிறுவனங்களின் மேம்பட்ட முதலீடுகள்
-
Balloon Modern Cinema Theatre - வியக்க வைக்கும் நவீன வடிவம்
-
Interesting Facts About Horse : குதிரைகள் பற்றிய சில வியப்பூட்டும் தகவல்கள்
-
Sale Deed - விற்பனை பத்திரத்தை பற்றிய குறிப்புகள்
-
Indian Team Arrival In India : உலகக் கோப்பையுடன் தாயகம் வந்த இந்திய கிரிக்கெட் அணி
-
Sakthi Masala Ranks No 1 In Spices Sector : சக்தி மசாலா மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனகாக உருவெடுத்துள்ளது
-
Aloe Vera Benefits : கற்றாழை ஜெல்லை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள்
-
Space Tourism : SERA மற்றும் Blue Origin விண்வெளிப் பயணத்திட்டத்தில் இந்தியா இணைந்தது