Cannes 2024 - Platform Tamil

Cannes 2024 - 77வது பதிப்பு மே 14 முதல் தொடங்கி மே 25, 2024 வரை

Cannes 2024 :

பிரான்ஸ் நாட்டில் மே 14 முதல் தொடங்கி மே 25, 2024 வரை 77 வது Cannes திரைப்பட விழா (Cannes 2024) மொத்தம் 10 நாட்கள் நடைபெற உள்ளது. Cannes திரைப்பட விழா, சினிமாவும் மற்றும் ஃபேஷனும் கலக்கும் ஒரு தளமாகும். உலகின் பல்வேறு பகுதிகளில் வெளியான திரைப்படங்கள் மற்றும் ஆவணப்படங்கள் இந்த Cannes திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளன. இந்த திரைப்பட விழாவில் இந்தியா சார்பில் புகழ்பெற்ற 7 திரைப்படங்கள் ஆனது திரையிடப்பட  உள்ளன. 40 நாடுகளிலிருந்து திரைப்பட ஆளுமைகள் பங்கெடுக்கும் இந்த மாபெரும் Cannes திரைப்பட விழாவில் ‘லெட்ஸ் ஸ்பூக் கேன்ஸ் (Let’s Spook Cannes) என்கிற தலைப்பின் கீழ் ஒரு தமிழ் படைப்பானது திரையிட தேர்வாகி இருக்கிறது.

உலகெங்கிலும் உள்ள பிரபலங்களை இந்த மாபெரும் Cannes திரைப்பட விழாவில் (Cannes 2024) பார்ப்பது ஒரு விருந்தாகும். இந்த 2024 ஆம் ஆண்டு Cannes திரைப்பட நிகழ்வில் மெரில் ஸ்ட்ரீப், டெமி மூர் மற்றும் ஜார்ஜ் லூகாஸ் போன்ற பிரபலங்கள் கலந்து கொள்வார்கள். மேலும், சோபிதா துலிபாலா இந்த 2024 ஆம் ஆண்டு Cannes திரைப்பட நிகழ்வில் கலந்துகொள்ள தயாராக உள்ளார். இந்த விழாவில் ஆண்டுதோறும் இந்திய நடிகை  ஐஸ்வர்யா ராய் கலந்துகொண்டு சிவப்புக் கம்பள அணிவகுப்பை அலங்கரித்து வருகிறார். இந்த வருடமும் நடிகை  ஐஸ்வர்யா ராய் பார்வையாளர்களை கவர்வதற்காக தயாராகிவிட்டார்.

Cannes திரைப்பட நிகழ்வில் கலந்து கொள்வதற்காக கையில் கட்டுடன் மும்பை விமான நிலையத்துக்கு தனது மகள் ஆராத்யாவுடன் வந்தார் நடிகை ஐஸ்வர்யா ராய். வீடியோ சமூக வலைதளங்களில் மும்பை விமான நிலையம் வந்த நடிகை ஐஸ்வர்யா ராயின் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. இந்த 2024 ஆம் ஆண்டு திரைப்பட விழாவில் தீபிகா படுகோன், ஐஸ்வர்யா ராய், அதிதி ராவ் ஹைதாரி, ஷோபிதா துலிபாலா, கியாரா அத்வானி மற்றும் ஊர்வசி ரவுடேலா ஆகியோர் சிவப்பு கம்பள அணிவகுப்பில் பங்கேற்கிறார்கள். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

Latest Slideshows

Leave a Reply